பிரமாதமான சுவையில்... பல கீரை மண்டி!

புதினா - காலிஃப்ளவர் மஞ்சூரியன்

தேவையானவை: நல்ல வெண்மையாக இருக்கும் காலிஃப்ளவர் - ஒன்று, புதினா - 2 கட்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், மைதா - முக்கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை சின்னச் சின்ன பூக்களாக எடுத்து... சிறிதளவு உப்பு கலந்த நீரில் போட்டு, 10 நிமிடம் வேகவைத்து நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கொஞ்சம் உப்பு, தேவையான நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கலந்துகொள்ளவும். வேகவைத்த காலிஃப்ளவர் பூக்களை ஒவ்வொன்றாக இந்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், காய்ந்த மிளகாயை லேசாக வறுக்கவும். பொடிப் பொடியாக நறுக்கிய புதினா, பொரித்த காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்துக் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து வறுத்த காலிஃப்ளவர் மீது புதினா நன்றாக சேரும்படி கிளறவும். நீர் நன்கு வற்றிய பின் இறக்கவும்.

இது... சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

- ஆர்.வசந்தி, போளூர்

பல கீரை மண்டி

தேவையானவை: முருங்கைக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளி கீரை - தலா அரை கப், சின்ன வெங்காயம் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப), அரிசி கழுவிய நீர் - 4 கப், திக்கான தேங்காய்ப்பால் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சை அளவு, கடுகு - சீரகம், உளுத்தம்பருப்பு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கீரைகளை நன்கு கழுவி நறுக்கவும். பாதியளவு அரிசி கழுவிய நீரில் புளியைக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம் உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... பிறகு, கீரைகளைச் சேர்த்து வதக்கி, மீதமுள்ள அரிசி கழுவிய நீரை சேர்த்து வேகவிடவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும்.

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

- ராஜேஸ்வரி கிட்டு, புதுச்சேரி

மாங்காய் - பருப்பு குழம்ப

தேவையானவை: மாங்காய் - ஒன்று, துவரம்பருப்பு - கால் கப், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு (பொடிக்கவும்), பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி, சிறுசிறு வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேகவைக்கவும். வெந்த மாங்காயுடன் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். குழம்பு கெட்டியானவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.

- சியாமளா ராஜகோபால், சிட்லபாக்கம்

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்