வயிற்றில் ஏற்படும் கிருமித் தொல்லைகளை நீக்கவும், காய்ச்சல் கண்டவர்களுக்குமான எளிதான ரெசிப்பிக்களைத் தருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த இல்லத்தரசி பாஞ்சாலி.

கொழுந்து உருண்டை

தேவையானவை:
எள் - கால் கிலோ
கருப்பட்டி - கால் கிலோ (நொறுக்கிக் கொள்ளவும்)
வேப்பங்கொழுந்து - 6 இலை
பொரிகடலை - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
எள்ளை வெறும் வாணலியில் படபடவென வெடிக்கும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்துக்கொள்ளவும். ஆற வைத்த எள், கருப்பட்டி, பொரிகடலை, வறுத்த வேர்க்கடலை மற்றும் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். விரல்களில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு அரைத்தவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைத்தால், கொழுந்து உருண்டை ரெடி.

தீர்வு:
வேப்பங்கொழுந்தை தனியாக சாப்பிடக் கொடுத்தால், குழந்தைகள் தயங்குவர். அதையே கருப்பட்டி சேர்த்து கொடுப்பதால், குழந்தைகள் எளிதாக மறுக்காமல் உண்பார்கள். இயற்கையிலேயே கிடைக்கும் மருத்துவ குணம் நிறைந்த நோய் நிவாரணி இந்த வேப்பங் கொழுந்து. எள் மற்றும் கருப்பட்டி சேர்த்து கொடுப்பதால், உடம்புக்்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். 2 வாரத்துக்கு ஒருமுறை 5 உருண்டைகள் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொல்லைகள் நீங்கும்.

புளிக் கத்திரிக்காய்

தேவையானவை:
நாட்டுக் கத்திரிக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 15
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கத்திரிக்காயை கம்பியில் சொருகி தீயில் நேரடியாக காட்டி எல்லா பக்கமும் வெந்து வருவது போல சுட்டு எடுக்கவும். காய்ந்த மிளகாயையும் தீயில் சுட்டு எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் ஆறியதும் அதன் தோலை நீக்கி நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சுட்ட மிளகாயை நொறுக்கி கத்திரிக்காயில் சேர்க்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து தேவைக்கேற்ப புளிக் கரைசலை சேர்த்துக் கொள்ளவும். சுடு சாதத்துக்கு ஏற்ற புளிக்கத்திரிக்காய்க்கு, சுட்ட அப்பளத்தைத் தொட்டுக் கொள்ளலாம்.

தீர்வு:
தீவிர காய்ச்சலில் படுத்தவர்கள் மற்றும் விரதமிருப்பவர்கள் இதனை உண்டால் நாக்கின் சுவை மொட்டுகள் சீராகும். இது தேங்காய் மற்றும் எண்ணெய் எதுவும் சேர்க்கப்படாத உணவாகும். முன்பெல்லாம் மேய்ச்சலுக்குச் செல்பவர்கள் மேற்கண்ட பொருட்களை எடுத்துக்கொண்டு செல்வர். அங்கு நெருப்பு மூட்டி சுட்டு, சுடு சாதத்துக்கு வைத்து சாப்பிடுவார்கள்.

தொகுப்பு, படங்கள்: எல்.ராஜேந்திரன்