அவள் 16
Published:Updated:

சம்மர் டூர்... செம தூள் ரெசிப்பி!

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!
பிரீமியம் ஸ்டோரி
News
சம்மர் டூர்... செம தூள் ரெசிப்பி!

சம்மர் டூர்... செம தூள் ரெசிப்பி!

ரொட்டீன் லைஃப் தரும் சலிப்பில் இருந்து விடுபட்டு, சம்மர் வெகே ஷன் கிளம்புகிறீர்களா? வெளியில்

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

வாங்கும் உணவுகளால் பர்ஸையும், வயிற்றையும் ஏன் பதம் பார்க்க வேண்டும்... 

சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், பயணங்களின்போது எடுத்துச் செல்லும், விதத்தி லான உணவு வகைகளை இங்கே வழங்குகிறார். அவற்றில் சில `மல்டி பர்பஸ்’ ரெசிப்பிகள் என்பது கூடுதல் சிறப்பு.

விஷ் யூ எ ஹேப்பி ஜர்னி!

டபரா / டம்ளர் இட்லி

தேவையானவை:


பச்சரிசி - 200 கிராம்

முழு உளுத்தம்பருப்பு - 100 கிராம்

நெய் - 50 கிராம்

நல்லெண்ணெய் - 50 மில்லி

கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு (பொடிக்கவும்)

உடைத்த மிளகு - அரை டீஸ்பூன்

சுக்குப்பொடி - 2 சிட்டிகை

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உடைத்த முந்திரி - 25 கிராம் (வறுக்கவும்)

உப்பு - தேவையான அளவு

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

செய்முறை:  அரிசி, பருப்பை ஒன்று சேர்ந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, கொரகொரப்பாக, கெட்டியாக அரைத்து... உப்பு, பெருங்காயத்தூள், சுக்குப்பொடி சேர்த்து 7, 8 மணி நேரம் புளிக்கவிடவும். மறுநாள் நெய்யில் மிளகு, சீரகம் பொரித்து நெய்யுடன் மாவில் சேர்க்கவும். இத்துடன் நல்லெண்ணெய், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்துக் கலந்து, நெய் தடவிய டபரா / டம்ளர்களில் பாதியளவுக்கு மாவை நிரப்பவும், குக்கரின் உள்ளே தண்ணீர் ஊற்றவும். குறிப்பில் உள்ளபடி காலி டபராவை குக்கரில் வைக்கவும். மாவு நிரப்பிய டபரா / டம்ளரை குக்கரில் வைத்து மூடி போட்டு வெயிட் போடாமல் 15 முதல் 20 நிமிடம் குறைந்த தீயில் வேகவிட்டு இறக்கவும் (வெந்துவிட்டதா என்பதை குச்சியால் குத்திப் பர்த்து `செக்’ செய்துகொள்ளலாம்)  ஆறியவுடன் கவிழ்த்து எடுத்து, பேக் செய்யவும்.

இது, இரண்டு நாட்கள் நன்றாக இருக்கும்.  இட்லி மிளகாய்ப் பொடி, வேர்க்கடலை - எள் பொடி (செய்முறை: 49-ம் பக்கத்தில்) தொட்டு சாப்பிட... சுவை அள்ளும். 

குறிப்பு: டபரா / டம்ளர் இட்லி செய்யும்போது, கொதிக்கும் தண்ணீர் உள்ளே ஏறாமல் இருக்க... காலி டபராவை குக்கரில் கவிழ்த்து வைத்து, அதன் மேல் மாவு நிரப்பிய டபரா / டம்ளரை வைக்கலாம்.

பொடேட்டோ ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

உதிர் உதிராக வடித்த சாதம் - 200 கிராம்

உருளைக்கிழங்கு - 250 கிராம்(தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
 
கடுகு, சீரகம், மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய், மிளகுத்தூள் உப்பு - தேவையான அளவு

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

செய்முறை: உருளைக்கிழங்கு துண்டுகளை ஈரம் இன்றி துடைத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து ஆறவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... கடுகு, சீரகம் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். வடித்த சாதம், வறுத்த உருளைக் கிழங்கு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் உப்பு சேர்த்துக் கலந்து, ஆறிய பின் `பேக்’ செய்யவும்.

மெகா ரொட்டி

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை - 250 கிராம் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்)
 
கறுப்பு உளுந்து - 125 கிராம்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு 

எண்ணெய் - 150 மில்லி

உப்பு - தேவையான அளவு

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

செய்முறை: கறுப்பு உளுந்தைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு, தோலுடன் நைஸாக அரைக்கவும். இத்துடன் புழுங்கலரிசி ரவை, உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து இட்லி மாவு போல் கெட்டியாக கலந்து, 2 மணி நேரம் புளிக்கவிடவும். அடிகனமான வாணலியில் எண்ணெயை சூடாக்கி மாவு முழுவதையும் பரவலாக சேர்த்து தகுந்த மூடியால் மூடி, தீயைக் குறைத்து 20 நிமிடம் வேகவிட்டு... நிதானமாக திருப்பி, மற்றொரு புறம் வேகவிட்டு எடுக்கவும்.. ஆறிய பின் வேர்க்கடலை - எள் பொடி (செய்முறை 49-ம்பக்கம்) தூவி, சிறிது எண்ணெயும் கலந்து, எடுத்துச் செல்லவும். தேவைப்படும்போது கட் செய்து சாப்பிடலாம் (கட் செய்தும் எடுத்துச் செல்லலாம்).

சின்ன வெங்காய தொக்கு இதற்கு நல்ல ஜோடி (செய்முறை 48-ம் பக்கம்).

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

சின்ன வெங்காய தொக்கு

தேவையானவை:

உரித்த சின்ன வெங்காயம் - 200 கிராம்

கடுகு - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

புளி - நெல்லிக்காய் அளவு 

மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்

வெந்தயப் பொடி (வறுத்துப் பொடித்தது) -  அரை டீஸ்பூன்

வெல்லம் - சிறிய கட்டி 

நல்லெண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி.. கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து முழு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் கெட்டியான புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறவும்.. எண்ணெய் பிரியும் வரை வேகவிட்டு, வெந்தயப் பொடி சேர்த்து இறக்கவும்.

இது இட்லி, ரொட்டிக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

ஸ்வீட் க்ரிஸ்பீஸ்

தேவையானவை:

மைதா - 100 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

கேசரி கலர் - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்

சர்க்கரைத்தூள்  - 2 டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - 200 கிராம்

உப்பு, சோடா உப்பு - தலா அரை சிட்டிகை

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

செய்முறை: மைதா, உப்பு, சோடா உப்பு, நெய், சர்க்கரைத்தூள் ஆகியவற்றை சேர்த்து,  சிறிதளவு நீர் விட்டு பூரி மாவு போல் பிசைந்து, ஈரத் துணியில் ஒரு மணி நேரம் சுற்றி வைக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... அதில் ஏலக்காய்த்தூள், கேசரி கலர், எலுமிச்சைச் சாறு சேர்த்து வைக்கவும். மைதா மாவை சிறிய அப்பளங்களாக திரட்டி, அதை இரண்டாக மடித்து சூடான எண்ணெயில் பொரித்து, பாகில் தோய்த்து எடுத்து வைக்கவும்.

மல்டி பர்பஸ் பொடி

தேவையானவை:

சிவப்பு புழுங்கலரிசி, கெட்டி அவல் - தலா 200 கிராம்

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

செய்முறை: சிவப்பு புழுங் கலரிசி, கெட்டி அவலை தனித்தனியே நன்கு வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும்.

இனி இதைக் கொண்டு: ஒரு கப் மாவுக்கு கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சர்க்கரை (பொடித்தது) - கால் கப் சேர்த்து எடுத்துச் சென்று, சூடான பால், அல்லது நீர் தெளித்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம்.

மேற்கூறிய பொருட்களை சுடுநீர் (அ) பாலில் கலந்து கரைத்து இனிப்புக் கஞ்சி மாதிரி குடிக்கலாம்.

அவல் - புழுங்கலரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து... கடுகு, சீரகம், பெருங் காயத்தூளை சிறிதளவு எண்ணெயில் தாளித்துக் கலந்து, எடுத்துச் சென்று, தயிர் அல்லது மோரில் கரைத்து சாப்பிடலாம்.

வேர்க்கடலை - எள் பொடி

தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை வெள்ளை எள் - தலா அரை கப்

கொப்பரைத் துருவல் - கால் கப்

கசகசா - 2 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 20 (அல்லது காரத்துக் கேற்ப)

புளி -  பெரிய நெல்லிக் காய் அளவு (உதிர்க்கவும்)

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சம்மர் டூர்...  செம தூள் ரெசிப்பி!

செய்முறை: கசகசா, கொப்பரைத் துருவலை தனித்தனியே சிவக்க வறுக்கவும். சிறிதளவு எண்ணெயில் மிளகாயை வறுத்து... கசகசா, கொப்பரைத் துருவல், வறுத்த வேர்க்கடலை, வெள்ளை எள், உப்பு, புளி சேர்த்து கொரகொரவென பொடிக்கவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அடுப்பை  அணைக்கவும். ஆறிய பின்னர் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக புரட்டி எடுத்து வைக்கவும்.

இதில் நல்லெண்ணெய் தேவையான அளவு சேர்த்து இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சிறிதளவு நீர் / புளித்த தயிர் அல்லது மோர் விட்டு கரைத்து சட்னி போல் செய்யலாம். வடித்த சாதத்துடன் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

படங்கள்:  எம்.உசேன்