* மிக்ஸ்டு ரூட் வெஜ் அல்வா

* பீட்ரூட் மில்க் ஷேக்

* முள்ளங்கி சட்னி

* மரவள்ளிக்கிழங்கு தோசை

* ரூட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி

* மரவள்ளிக்கிழங்கு வடை

* கிரிஸ்பி ஸ்பிரிங் ரோல்

* அரைத்த கிழங்குக் குழம்பு

* மிக்ஸ்டு வெஜிடபுள் போண்டா

* கேரட் அவியல்

* கிழங்கு கட்லெட்

* கேரட் பீட்ரூட் கபாப்

கேரட், பீட்ரூட், முள்ளங்கி என்று வேரில் இருந்து முளைக்கிற காய்கறிகளை வைத்து பல ரெசிப்பிகளை தந்திருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த பிரியா பாஸ்கர்.

மிக்ஸ்டு ரூட் வெஜ் அல்வா

தேவையானவை:
கேரட் - 100 கிராம்
பீட்ரூட் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பால் - 100 மில்லி (சூடானது)
சர்க்கரை - 100 கிராம்
முந்திரி - 5
திராட்சை - 1 டேபிள்ஸ்பூன் (உலர்ந்தது)
பாதாம் - 5
நெய் - 50 கிராம்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கை லேசாக வதக்கிக் கொள்ளவும். இத்துடன் சூடான பாலைச் (சரியா?) சோத்து சுமார் 10 நிமிடங்கள் வதக்கி வேக விடவும். வெந்த கலவையை மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும். தேவையான அளவு சர்க்கரையைச் சேர்த்து அது கரையும் வரை நன்கு கிளறவும். பொடியாக்கிய முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து மசித்த கலவையுடன் சேர்த்து நன்கு புரட்டவும். 5 நிமிடங்கள் வரை அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கவும். சுவையான அல்வா ரெடி.

பீட்ரூட் மில்க் ஷேக்

தேவையானவை:
பீட்ரூட் - 2
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் - 150 மில்லி
பட்டைப்பொடி - அரை டீஸ்பூன்
இஞ்சிச்சாறு - சிறிதளவு
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்

செய்முறை:
பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக்கி வேகவைத்துக் கொள்ளவும். வெந்தபிறகு தோலை நீக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தேன், காய்ச்சி ஆறவைத்த பால், பட்டைப்பொடி, இஞ்சிச்சாறு ஆகியவற்றை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு வெளியே எடுத்து, வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
கேரட் மற்றும் பீட்ரூட்டை குழைய வேக வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். பீட்ரூட்டை ரத்தக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். பீட்ரூட் நம் உடலின் ரத்த அணுக்களை அதிகமாக்கும்.

முள்ளங்கி சட்னி

தேவையானவை:
சிவப்பு முள்ளங்கி - 100 கிராம்
தேங்காய்த்துருவல் -அரை கப்
மல்லி (தனியா) - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 5
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - ஒன்று (சிறியது)

தாளிக்க:
சீரகம் - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
வாணலியில் எண்ணெய் சோத்து, சூடானதும் மல்லி (தனியா), துவரம்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து கரைய வதக்கவும். பிறகு இரண்டாக நறுக்கிய பூண்டு, இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், துருவிய முள்ளங்கியைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் துருவிய தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி உப்பு, புளி சேர்த்து புரட்டி அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

தாளிக்க வேண்டியதை வாணலியில் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும். புதுவிதமான சுவையில் சட்னி ரெடி.

மரவள்ளிக்கிழங்கு தோசை

தேவையானவை:
இட்லி மாவு - 100 கிராம்
மரவள்ளிக்கிழங்கு - 100 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன் (வரகரிசி மாவு)

செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அரிசி மாவையும் இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி இட்லி மாவில் சேர்த்து உப்பு போட்டு கலக்கி 2 மணி நேரம் ஊறவிடவும்.

பிறகு, மாவை கல்லில் ஊற்றி தோசையாக வார்த்தெடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு:
ஊற வைத்த அரிசி, உளுந்துடன், நறுக்கிய கிழங்கைச் சேர்த்து அரைத்து, புளிக்க வைத்தும் தோசையாக வார்க்கலாம். அரிசி மாவை சேர்த்தால் தோசை மொறு மொறுவென்று வரும்.

ரூட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு - 200 கிராம்
உப்பு, எண்ணெய் -
தேவையான அளவு
வெஜிடபிள் மசாலா செய்ய:
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பீட்ரூட் - ஒன்று
நூல்கோல் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், தக்காளி, கேரட், பீட்ரூட், நூல்கோல் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை மாவு, தண்ணீர், உப்பு சேர்த்து மிருதுவாக மாவைப் பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறியதும் நறுக்கிய எல்லா காய்களையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்களை வேக விடவும். உப்பு சேர்க்கவும். காய்கறிகள் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

பிசைந்து வைத்த கோதுமை மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, தேய்த்து சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். கல்லில் இருந்து சூடாக சப்பாத்தியை எடுத்து 2 டேபிள்ஸ்பூன் மசாலாவை சப்பாத்தியின் மேல் பரவலாக வைத்து சுருட்டி சிறு துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

மரவள்ளிக்கிழங்கு வடை

தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு - ஒரு கிலோ
சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுக்காத பச்சரிசி மாவு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
தோல் சீவி, பொடியாக்கிய மரவள்ளிக்கிழங்குடன் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்துக் கலக்கவும். வறுக்காத பச்சரிசி மாவுடன் உப்பைச் சேர்த்துக் கலந்து, அரைத்து வைத்தவைகளையும் இத்துடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
பச்சரிசி மாவு கிடைக்காவிட்டால், சாதாரண அரிசி மாவைச் சேர்த்துக் கொள்ளலாம். அரிசி மாவு சேர்த்தால்தான் வடை மொறுமொறுவென்று இருக்கும்.

கிரிஸ்பி ஸ்பிரிங் ரோல்

தேவையானவை:
மைதா - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மைதா பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன் (சிறிதளவு தண்ணீரில் கரைத்த மைதா மாவு)

செய்முறை:
மைதா, அரிசி மாவு மற்றும் உப்பை ஒன்றாகச் சேர்த்துப் பிசிறிக்கொள்ளவும். இத்துடன் போதுமான அளவு தண்ணீர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து, மிருதுவாக மாவைப் பிசைந்து கொள்ளவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போல மிருதுவாக தேய்த்துக் கொள்ளவும்.

ஸ்பிரிங் ரோல் ஸ்டஃபிங் செய்ய

தேவையானவை:
கேரட் - 2
முட்டைக்கோஸ் - 50 கிராம்
ஸ்பிரிங் ஆனியன் - 5
பச்சை நிற குடமிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - 50 கிராம்
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் மெல்லிய நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், ஸ்பிரிங் ஆனியன், பெரிய வெங்காயம் மற்றும் குடமிளகாயை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். இத்துடன் துருவிய இஞ்சியைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும், அடுப்பை அணைக்கவும்.

இனி, தேய்த்த சப்பாத்தியின் நடுவே நீளமாக ஒரு டேபிள்ஸ்பூன் ஸ்டஃபிங்கை வைத்து உருட்டி. மூடும் போது, சப்பாத்தியின் ஓரத்தில் மைதாவை கைகளால் தொட்டு தடவி ஒட்டினால், சப்பாத்தி பிரிந்து வராது.

இனி, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தயார் செய்த சப்பாத்தி ரோலை எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்கவும். பிறகு விருப்பத்துக்கேற்ற மாதிரி துண்டுகளாக்கி சாஸுடன் பரிமாறவும்.

அரைத்த கிழங்கு குழம்பு

தேவையானவை:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சைமிளகாய் - 2
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
பட்டை - சிறிதளவு
கிராம்பு - சிறிதளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
வாணலியில் தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக நறுக்கிய பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். பிறகு பட்டை, கிராம்பு மற்றும் சோம்பை வதக்கவும். மிக்ஸியில் தேங்காய்த்துருவல், பூண்டு, இஞ்சி, தக்காளி, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் கலவையைச் சேர்த்து போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கிழங்கை தண்ணீரீல் வேகவைத்து குழம்புடன் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு புளித்தண்ணீரை ஊற்றி பச்சைவாசனை போக கொதிக்க விடவும். நறுக்கிய கறிவேப்பிலையைக் கொண்டு அலங்கரிக்கவும்.

மிக்ஸ்டு வெஜிடபுள் போண்டா

தேவையானவை:
பொடியாக நறுக்கிய
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பொடியாக நறுக்கிய கேரட் - 100 கிராம்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 100 கிராம்
ஃப்ரெஷ் பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சோம்பு - ஒரு டீஸ்பூன்
போண்டா மாவு மிக்ஸ்:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையானஅளவு
மிளகாய்த்தூள் - தேவையானஅளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
காய்களை உப்பு போட்டு வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையைச் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் மசித்த காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கலவை ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து, கலக்கி வைத்த போண்டா மிக்ஸில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் சேர்த்துப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
போண்டா மாவு மிக்ஸ் செய்யும்போது மாவின் பதம் மிகவும் தண்ணியாகவோ கெட்டியாகவோ இருக்கக் கூடாது. தோசை மாவு பதத்தில் இருக்கவும்.

கேரட் அவியல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு - ஒன்று
கேரட் - 3
பீன்ஸ் - 50 கிராம்
பச்சைப்பட்டாணி (உரித்தது) - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - அரை கப்
பச்சைமிளகாய் - 3
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளிக்காத தயிர் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் -
ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
தோல் சீவி சுத்தம் செய்த கேரட் மற்றும் உருளைக்கிழங்குடன் நீளவாக்கில் துண்டு துண்டுகளாகச் செய்துகொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதே போல் பீன்ஸை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நறுக்கிய காய்கள் மற்றும் பட்டாணியைச் சேர்த்து வேக விடவும். வெந்த காய்கறிகளுடன் உப்பு, அரைத்து வைத்தத் தேங்காய் விழுதைச் சேர்த்து புரட்டவும். சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவியல் கெட்டியாக இருக்க வேண்டும். காய்கள் வெந்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலையைத் தூவி தேங்காய் எண்ணெயை ஊற்றவும். சூடு ஆறியவுடன் தயிர் சேர்த்துப் புரட்டவும்.

கிழங்கு கட்லெட்

தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
கேரட் - ஒன்று
பிரெட் கிரம்ப்ஸ் - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீரில் கரைத்து வைத்த மைதா மாவு- 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையானஅளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய்- தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு

செய்முறை:
வேகவைத்து மசித்த கிழங்குகளுடன், பொடியாக நறுக்கிய கேரட் வெங்காயத்தைச் சேர்த்து ஒன்றாகப் பிசைந்துகொள்ளவும். இதில் உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்துப் பிசையவும். கட்லெட் வடிவத்தில் மாவை உருட்டித் தட்டிக் கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள மைதாவில் முக்கி, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தட்டி வைத்த கட்லெட்டை பொரித்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

கேரட் பீட்ரூட் கபாப்

தேவையானவை:
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 2
பீட்ரூட் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டைகோஸ் - 50 கிராம்
உப்பு - தேவையானஅளவு
மைதா - 100 கிராம்
பிரெட் கிரம்ப்ஸ் - 100 கிராம்
மிளகுத்தூள்- தேவையானஅளவு

செய்முறை:
தோல் சீவி பொடியாக்கிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கை போதுமான தண்ணீரில் வேக விடவும். இத்துடன் பொடியாக நறுக்கிய முட்டைகோஸைச் சேர்க்கவும். காய்கறிகள் வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். கல்வையில் போதுமான உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு பிசறவும். இத்துடன் மைதா மற்றும் பிரெட் கிரம்ப்ஸ் சேர்த்து ஒன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிசையும் மாவு கெட்டியாக இருக்கக் கூடாது. பிசைந்த மாவை அதிரசம் திருப்பும் கம்பி (அ) பணியாரம் திருப்பும் கம்பியில் நீளமாக வைக்கவும். பிறகு கம்பியை மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் சுட்டு எடுக்கவும். சுட்ட பின்பு உடையாமல் கம்பியில் இருந்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக்கி ருசிக்கவும். விருப்பமுள்ளவர்கள் டொமேட்டோ சாஸுடன் சுவைக்கலாம்.

- படங்கள்: எம்.விஜயகுமார்