* கோதுமை பிடிக்கொழுக்கட்டை

* கோதுமைப் புட்டு

* கோதுமை ரவை பிஸிபேளாபாத்

* கோதுமை ரவை பிரியாணி

* கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்

* கோதுமை ரவை வெண்பொங்கல்

* கோதுமை முள்ளங்கி சப்பாத்தி

* சென்னா ரொட்டி

* கோதுமைப் பணியாரம்

‘கோதுமை என்றாலே, சப்பாத்திதானா?’ என்கிற பிள்ளைகளின் சலிப்பைப் போக்க விதவிதமான ரெசிப்பிக்களைத் தந்திருக்கிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த நளினா.

கோதுமை பிடிக்கொழுக்கட்டை

தேவையானவை:
கோதுமை மாவு - அரை கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - அரை கப்
வெல்லம் (பொடித்தது) - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 10
பிஸ்தா - 12
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் நெய் விட்டு சூடானதும், முந்திரி மற்றும் பிஸ்தா பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அகன்ற பாத்திரத்தில் வறுத்த கோதுமை மாவு, வெல்லம், தேங்காய்த்துருவல், வறுத்த முந்திரி மற்றும் பிஸ்தா பருப்புகளைச் சேர்த்து அதனுடன் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் சிறிது சூடான நெய் மற்றும் தண்ணீர் தெளித்து, நன்கு பிசையவும். பிறகு சிறு உருண்டையாக உருட்டி, அவற்றில் உங்களின் நான்கு விரல்களின் அச்சு பதியும் வண்ணம் அழுத்தமாகப் பிடிக்கவும். இவ்வாறு பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப் பானையில் வைத்து, ஆவியில் வேக விடவும். பிறகு எடுத்துப் பரிமாறவும்.

கோதுமைப் புட்டு

தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வெறும் வாணலியில் கோதுமை மாவை சேர்த்து, மிதமான மற்றும் குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். வறுத்த மாவை அகன்ற பாத்திரத்தில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரியாகப் பிசிறவும். பிறகு மாவை இட்லிப் பானையில் வைத்து, ஆவியில் வேக விடவும். வெந்த மாவை ஒரு பிளேட்டில் கொட்டி தேங்காய்த்துருவல், சர்க்கரை மற்றும் நெய் கலந்து பரிமாறவும்.

கோதுமை ரவை பிஸிபேளாபாத்

தேவையானவை:
கோதுமை ரவை - அரை கப்
துவரம்பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் - 6
நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சாம்பார்பொடி - ஒரு டீஸ்பூன்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, வறுத்த வேர்க்கடலை - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பச்சைமிளகாய் - ஒன்று (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
காய்கறிகளைக் கழுவி விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். கோதுமை ரவையை நன்கு கழுவி, நீரை, வடித்து தனியே எடுத்து வைக்கவும். சிறிது வெந்நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதில் இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறி அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து வதக்கியவற்றை எல்லாம் அதனுள் சேர்க்கவும். இத்துடன் கோதுமை ரவை, துவரம் பருப்பு, மஞ்சள்தூள், சாம்பார்பொடி, மிளகாய்த்தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, அதில் வேர்க்கடலை, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு:
தேவையென்றால், ஒரு சிறிய தக்காளியை, காய்கறி வதக்கும்போது சேர்த்து வதக்கவும்.

கோதுமை ரவை பிரியாணி

தேவையானவை:
கோதுமை ரவை - 2 கப்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
ஏலக்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 5 (லேசாக கீறி விடவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - 1 கப்
தண்ணீர் - 4 கப்
புதினா மற்றும் கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பிரஷர் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள் மற்றும் புதினாவைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு கோதுமை ரவையைச் சேர்த்து உப்பு போட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் அடங்கியதும், குக்கரை திறந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:
கோதுமை ரவை - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தண்ணீர் - 3 கப்
வெல்லம் (பொடித்தது) - முக்கால் கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)
முந்திரி - 10
திராட்சை - 10
பால் - ஒரு கப்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து பொரித்து எடுக்கவும். பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகு போல காய்ச்சவும். பாசிப்பருப்பை பிரஷர் குக்கரில் மிதமான தீயில் வறுத்து, அதனுடன் கோதுமை ரவை சேர்த்து தண்ணீர் மற்றும் பால் சேர்த்து 5 அல்லது 6 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்து, பாகை ஊற்றி வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

கோதுமை ரவை வெண்பொங்கல்

தேவையானவை:
கோதுமை ரவை - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 3 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பை நன்கு வறுத்து கொள்ளவும். இத்துடன் கழுவிய கோதுமை ரவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு 5 அல்லது 6 விசிலுடன், அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள வேகவைத்த கோதுமை ரவையில் சேர்க்கவும். நெய்யை ஊற்றிக் கிளறி பரிமாறவும்.

கோதுமை முள்ளங்கி சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
முள்ளங்கி - ஒன்று (துருவியது)
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:
கோதுமை மாவு, துருவிய முள்ளங்கி, உப்பு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். 30 நிமிடம் கழித்து, மாவை சப்பாத்திகளாக திரட்டி தோசைக் கல்லில் போட்டு எடுத்து, மேலே சிறிது நெய் தடவிப் பரிமாறவும்.

சென்னா ரொட்டி

தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொண்டைக் கடலை (சென்னா) -
வேக வைத்து மசித்தது ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து உருட்டி திரட்டி வைக்கவும்.

சென்னா மசாலா செய்ய:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, கொண்டைக்கடலை, கறிவேப்பிலை சேர்த்து கெட்டியாக பூரணம் செய்து வைத்துக் கொள்ளவும்.

இனி, திரட்டி வைத்துள்ள மாவிலிருந்து சிறிது சிறிதாக மாவை எடுத்து நடுவில் சென்னா பூரணம் வைத்து மூடி மிருதுவாக சிறிய சிறிய ரொட்டிகளாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

கோதுமைப் பணியாரம்

தேவையானவை:
கோதுமை மாவு - அரை கப்
வாழைப்பழம் - ஒன்று (மசித்தது)
வெல்லம் (பொடித்தது) - முக்கால் கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
ஆப்ப சோடா - தலா ஒரு சிட்டிகை
ஏலக்காய் (பொடித்தது) - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், அரிசி மாவு, ஆப்ப சோடா, உப்பு, ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மாவுக் கலவையில் சேர்க்கவும். இத்துடன் தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

அடுப்பில் பணியார சட்டியை வைத்து, குழிகளில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இருபுறமும் கரைத்த மாவை குழிகளில் ஊற்றி வேக வைக்கவும். பணியாரம் வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.