* ரவைப் பொங்கல்

* கேசரி

* மேதி மடர் மசாலா

* எண்ணெய் கத்திரிக்காய்க் குழம்பு

* குடமிளகாய் புலாவ்

* பிஸிபேளாபாத்

* கேரளா வெஜிடபிள் ஸ்ட்யூ

* தக்காளி குருமா

* சம்பா ரவை சாம்பார் சாதம்

* உளுந்தங்களி

ஒரே பாத்திரத்தில் சமைக்கும் உணவுகளுக்குப் பெயர் ‘ஒன் பாட் மீல்’. அப்படி ஒரே பாத்திரத்தில் செய்யப்படும் ‘ஒன் பாட் மீல்’ வகைகளைக் கற்றுத் தந்திருக்கிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஃபுட் பிளாகர்’ சங்கரி பகவதி.

ரவைப் பொங்கல்

தேவையானவை:
வெள்ளை ரவை-ஒரு கப் (வறுக்காத ரவை)
பாசிப்பருப்பு - அரை கப்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஒரு கப் சுடுநீரில் பாசிப்பருப்பை 20 நிமிடங்கள் வைக்கவும். பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் ரவையைச் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும். வறுத்த ரவையாக இருந்தால், அப்படியே நேரிடையாகச் சேர்க்கலாம். இத்துடன் ஊற வைத்த பருப்பு, 3 கப் தண்ணீர், உப்பைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொதிக்க விடவும். கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்த உடன், குக்கரை மூடி, விசிலை பொருத்தவும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து 15 நிமிடங்களுக்கு பிறகு குக்கர் மூடியை திறந்தால், ரவை பொங்கல் சூப்பராக வெந்திருக்கும் சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

கேசரி

தேவையானவை:
வறுத்த வெள்ளை ரவை - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - கால் கப்
முந்திரி - 10
சூடான தண்ணீர் - 2 கப்

செய்முறை:
சூடான தண்ணீரில் சர்க்கரையையும், கேசரி பவுடரையும் கரைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பின்னர் ரவையை இதில் சேர்த்து, சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும். சர்க்கரை கலந்த சுடுநீரை குக்கரில் ஊற்றி நன்றாகக் கிளறவும், குக்கரை மூடியிட்டு விசிலை போட்டு, ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பின் சூடாகப் பரிமாறவும்.

மேதி மடர் மசாலா

தேவையானவை:
வெந்தயக் கீரை - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
பொடித்த முந்திரி - கால் கப்
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
துருவிய பூண்டு - 2 டீஸ்பூன்
வெண்ணெய்/நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
சீரகம் - ஒரு டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் பச்சைப் பட்டாணி, வெந்தயக்கீரை ஆகியவற்றையும் சேர்த்து வதக்கி, பொடித்த முந்திரி சேர்த்து, சிறிதளவு வெந்நீர் ஊற்றி, உப்பு போட்டு குக்கரை மூடி, வெயிட் போட்டு, ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

எண்ணெய் கத்திரிக்காய்க் குழம்பு

தேவையானவை:
கத்திரிக்காய் - 8
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -
ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க
காய்ந்த மிளகாய் - 3
கடலைப்பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை

தாளிக்க
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - 8 இலைகள்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்

செய்முறை:
வறுத்து அரைக்க வேண்டியதை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயில் காம்பை நீக்கிவிட்டு நான்காக கீறி விட்டுக் கொள்ளவும். வறுத்தரைத்த பொடியை கத்திரிக்காயின் நறுக்கப்பட்ட இடைவெளிகளில் தடவிவிடவும். குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளித்து, கத்திரிக்காயைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இறுதியாக கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி 10 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும், உடனே மூடி விசில் போட்டு அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து திறந்தால், சுவையான குழம்பு தயார்.

குடமிளகாய் புலாவ்

தேவையானவை:
அரிசி - ஒரு கப்
குடமிளகாய் (பெரியது) - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒன்றரை கப்

தாளிக்க
பிரிஞ்சி இலை - ஒன்று
அன்னாசிப் பூ - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
நெய்/எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில், நெய்/எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு, மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய குடமிளகாயையும் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்துக் கிளறவும். இத்துடன் ஊற வைத்த அரிசியின் தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து, ஒரு 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் வரும் வரை விடவும். 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து சூடாகப் பரிமாறவும்.

பிஸிபேளாபாத்

தேவையானவை:
அரிசி - முக்கால் கப்
துவரம்பருப்பு - அரை கப்
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, குடமிளகாய் - ஒன்றரை கப்
புளி - சின்ன எலுமிச்சை அளவு
பிஸிபேளாபாத் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
உப்பு - தேவையான அளவு

பிஸிபேளாபாத் பொடி தயாரிக்க:
காய்ந்த மிளகாய் - 2
மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்த தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு சிட்டிகை
அன்னாசிப் பூ - ஒன்று
பட்டை - ஒரு அங்குல துண்டு
கிராம்பு - ஒன்று

தாளிக்க:
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10 இலைகள்
முந்திரி (விருப்பப்பட்டால் ) - 4

செய்முறை:
பிஸிபேளாபாத் பொடி தயாரிக்கக் கொடுத்தவற்றை எல்லாம், வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக வறுத்து, ஆறிய பின் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.
அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி, 40 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊற வைக்கவும். புளியை சிறிதளவு நீரில் கரைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில், நெய்/எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, இதனுடன் சின்ன வெங்காயம், நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் அரிசி, பருப்பு, புளிக்கரைசல், பிஸிபேளாபாத் பொடி, தேவையான அளவு உப்பு, அரிசி மற்றும் பருப்பின் அளவை விட 3 மடங்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு குக்கரைத் திறந்து, அப்பளத்துடன் பரிமாறவும்.

கேரளா வெஜிடபிள் ஸ்ட்யூ

தேவையானவை:
தேங்காய்ப்பால் (முதல் பால்) - ஒரு கப்
தேங்காயப்பால் (இரண்டாம் பால்) - ஒன்றரை கப்
கேரட் - ஒன்று
சிறிய உருளைக்கிழங்கு - ஒன்று
பீன்ஸ் - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
நெய்/எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - ஒரு அங்குல துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
கறிவேப்பிலை - 10 இலைகள்

செய்முறை:
பிரஷர் குக்கரில், நெய்/எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்துத் தாளித்து கீறிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பிறகு, மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாவது தேங்காய்ப்பாலை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் வந்த பின், அடுப்பை அணைத்து விடவும். பிரஷர் இறங்கிய பிறகு, முதல் பாலையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து சாதம் அல்லது இடியாப்பத்துடன் பரிமாறவும்.

தக்காளி குருமா

தேவையானவை:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி (பெரியது) - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -
ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒன்றரை கப்

அரைக்க:
தேங்காய்த்துருவல் - கால் கப்
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
முந்திரி - 6

தாளிக்க:
நெய்/எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - ஒன்று

செய்முறை:
மிக்ஸியில், அரைக்க வேண்டிய பொருட்களை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, நெய்/எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கிக் கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கி, அரைத்தவற்றைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை, மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

சம்பா ரவை சாம்பார் சாதம்

தேவையானவை:
சம்பா ரவை - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
கேரட், அவரைக்காய், உருளைக்கிழங்கு, குடமிளகாய் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 8 முதல் 10
புளி - சின்ன எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
நெய்/எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10 இலைகள்

செய்முறை:
காய்களை மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும். பருப்பை நன்கு கழுவி 40 நிமிடங்கள் சுடுநீரில் ஊற வைக்கவும். புளியை சிறிதளவு நீரில் கரைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, நெய்/எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்துத் தாளித்து சின்ன வெங்காயம், நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, ரவையையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊற வைத்த பருப்பு, புளிக்கரைசல், சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து ரவை மற்றும் பருப்பின் அளவை விட மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். பரிமாறும்போது கொத்தமல்லித்தழை தூவி, பொரியல் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

உளுந்தங்களி

களி மாவு தயாரிக்க:
பச்சரிசி - 3 கப்
கறுப்பு உளுந்து - ஒரு கப்

செய்முறை:
பச்சரிசி, கறுப்பு உளுந்து இரண்டையும், ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் நன்கு துடைத்து விட்டு, திரித்து வாங்கிக் கொள்ளவும். மிக்ஸியில் திரிப்பதாக இருந்தால், நன்கு பொடித்த பிறகு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

களி தயாரிக்க:
அரைத்த மாவு - ஒரு கப்
பனங்கருப்பட்டி - இரண்டரை கப்
நல்லெண்ணெய் - இரண்டு முதல் இரண்டரை கப்

செய்முறை:
பொடித்த பனங்கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். களிமாவை, வடிகட்டப்பட்ட கருப்பட்டிக் கரைசலில், கட்டி விழாமல் கரைத்துக் கொள்ளவும். இனி, பிரஷர் குக்கரின் உள்ளே, நல்லெண்ணெய்
2 டேபிள்ஸ்பூன் ஊற்றி, எல்லா பக்கமும் நன்கு தடவிக் கொள்ளவும். பிறகு கரைத்த களி மாவை குக்கரில் சேர்த்து மிதமான தீயில், கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்து களியை இறக்கும் முன்பு நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை அணைக்கவும். களி ஆறிய பின், நல்லெண்ணெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்துக் கொடுக்கவும்.