* கறிக் கஞ்சி

* கோழிக் கஞ்சி

* நோன்புக் கஞ்சி

* கத்திரிக்காய் சட்னி

* செம்பருத்தி துளசி சர்பத்

* சுருள் அப்பம்

* அதிசய பத்திரி

* கிளிக் கூண்டு

* ரெயின்போ கிண்ணத்தப்பம்

* சிக்கன் ரோல்

* இளநீர்-நுங்கு-மாம்பழ புட்டிங்

ரம்ஜான் நோன்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, நோன்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு நாளின் இரவிலும், முஸ்லிம்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளை நமக்காக செய்து காண்பித்திருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஹசீனா.

கறிக் கஞ்சி

தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
நறுக்கிய கேரட், முட்டைகோஸ்,
பீன்ஸ் - 50 கிராம்
நீளமாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - ஒன்று
நறுக்கிய தக்காளி - 50 கிராம்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாயத்தூள் - கால் டீஸ்பூன்
கெட்டியான தேங்காய்ப்பால் - 2 கிளாஸ் (ஒரே தேங்காயிலிருந்து பிழிந்தது)
எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - 100 கிராம்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு, விழுது - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, மீடியம் சைஸில் நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள், நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மசியும் வரை வேகவிட்டு இறக்கி ஆறவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் கழுவிய கறியுடன் கால் டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். கறி நன்கு வெந்ததும் அதன் தண்ணீரை மட்டும் வடித்துவிட்டு, கறியை ஆறவிட்டு மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். இதே போல பொங்கிய அரிசி கலவையையும் மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

இனி அரைத்த இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து கரண்டியால் கலக்கவும். இதில் தேங்காய்ப்பால், கறி அவித்தத் தண்ணீரை சேர்த்து அடுப்பில் ஏற்றி, கஞ்சி பக்குவத்துக்்கு வரும் வரை கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் மீதம் இருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக தாளித்து, அடுப்பை அணைத்து, தயிர் விட்டு கஞ்சியில் சேர்த்துக் கலக்கி கட்லெட், சமோசா, வடையுடன் பரிமாறவும்.

கோழிக் கஞ்சி

கோழிக் கஞ்சி தயாரிக்கத் தேவையானவை:
சீரக சம்பா அரிசி - ஒரு கப்
மீடியம் சைஸில் நறுக்கிய கேரட் - 2
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கைப்பிடியளவு
பூண்டு - அரை கைப்பிடி
புதினா இலை - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து நன்கு மசியும் வரை வேக விடவும்.

கோழி மசாலா தயாரிக்கத் தேவையானவை:
பொடியாக நறுக்கிய எலும்பு நீக்கிய கோழிக்கறி - 200 கிராம்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பொடியாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -
ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, பிறகு கோழிக்கறி, உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் தேவையானவற்றில் மீதம் இருக்கும் பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கோழியை வேகவிட்டு எடுக்கவும்.

இனி கோழிக் கஞ்சி செய்ய தேவையானவை:
சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்
துருவியதேங்காய் - ஒன்றரை கப்
கெட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்

செய்முறை:
மிக்ஸியில் தேங்காயையும், சோம்பையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக மை போல அரைத்துக் கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வேகவைத்த அரிசிக் கலவை, கோழிக்கலவை, அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேங்காய்ப்பால், உப்பு என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கஞ்சிப் பக்குவத்துக்கு வந்ததும் சூடாகப் பரிமாறவும்.

நோன்புக் கஞ்சி

தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பூண்டு - 2
சின்ன வெங்காயம் - 6
கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
புதினா இலை - அரை டீஸ்பூன்
கெட்டித் தேங்காய்ப்பால் - ஒரு கப்
தண்ணீர் - 5 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
கறிவேப்பிலை - 4 இலை
இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் கழுவிய அரிசி, நான்கு சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, வெந்தயம், சீரகம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அடுப்பில் வைத்து வேகவிடவும். வெந்ததும் தேங்காய்ப்பால், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் 5 கப் தண்ணீர், சேர்த்துக் கொதிக்க விடவும். கஞ்சியை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து மீதம் உள்ள நறுக்கிய சின்னவெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி கஞ்சியில் ஊற்றி கத்திரிக்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

கத்திரிக்காய் சட்னி

தேவையானவை:
கத்தரிக்காய் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 3 (தீயில் சுட்டது)
புளிக்கரைசல் - கால் கப் (கெட்டியானது)
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 இலை
பெரிய வெங்காயம் - சிறியது ஒன்று நறுக்கிக்கொள்ளவும்

செய்முறை:
கத்திரிக்காயை காம்பு நீக்கி கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். மண்சட்டியில் தேங்காய்த்துருவல், புளிக்கரைசல், சுட்ட மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, பருப்பு மத்தால் நன்கு கடையவும். இதில் அவித்த கத்திரிக்காயைச் சேர்த்து எல்லாம் ஒன்று சேரும் அளவுக்்கு நன்றாக கடையவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகத் தாளிக்கவும். கடைந்த கத்திரிக்காயில் தாளித்தவற்றைச் சேர்த்து நோன்புக் கஞ்சியுடன் பரிமாறவும்.

செம்பருத்தி துளசி சர்பத்

தேவையானவை:
துளசி இலை - அரை கப்
செம்பருத்திப் பூ - 15 (நடுவிலுள்ள
காம்பை நீக்கவும்)
தண்ணீர் - 10 கப்
சர்க்கரை - 6 கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சுக்குத்தூள் - கால் டீஸ்பூன்
துருவிய இஞ்சி - சிறிதளவு
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து துளசி, செம்பருத்திப் பூ, தண்ணீர் 5 கப் சேர்த்து, தண்ணீரின் அளவு பாதியாக வற்றும் வரை கொதிக்க விடவும். பிறகு, கலவையை அடுப்பை விட்டு இறக்கி ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கிளறி நன்றாக ஆற விடவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் மீதம் இருக்கும் 5 கப் தண்ணீரையும் சேர்த்து கெட்டியான சர்க்கரைப் பாகு பதம் வரும் வரை கொதிக்க விடவும். அடுப்பை விட்டு இறக்கி ஆற விடவும். மேலே உள்ள கசடை அகற்றவும். இனி, ஆற வைத்த துளசி-செம்பருத்திக் கலவையுடன், சர்க்கரைப் பாகு, உப்பு, துருவிய இஞ்சி ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து சாறை மட்டும் வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவைக்கேற்ப சர்பத்தாக தயாரித்துப் பரிமாறவும்.

சர்பத் செய்முறை:
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
துளசி இலை - சிறிதளவு

செய்முறை:
செம்பருத்தி துளசிச் சாற்றை எடுத்து ஒரு டம்ளர் ஜில் தண்ணீரில் கலந்து எலுமிச்சைச் சாறு, துளசி இலைகள் கலந்து பரிமாறவும். வெயில் காலத்தில் உடம்புக்்கு ஜில்லென்று இருக்கும்.

சுருள் அப்பம்

அப்பம் செய்ய
தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப்
தண்ணீர் - ஒன்றே கால் கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மேலே கூறிய அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்துக் கட்டிவிழாமல் கரைக்கவும்.

பூரணம் தயாரிக்கத் தேவையானவை:
நெய் - 5 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
சீவிய முந்திரிப் பருப்பு - ஒரு டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை - அரை டீஸ்பூன்
பொடித்த வெல்லம் - ஒரு கப்

செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்து, பொன்னிறமாக வறுத்து, வெல்லம் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும். ஆப்பச்சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, கலக்கி வைத்த மாவில் உள்ளங்கை அளவு மாவை எடுத்து தோசை அளவுக்கு ஊற்றவும். அப்பத்தின் மேல் கால் டீஸ்பூன் நெய் தடவவும். இனி, வறுத்து வைத்த தேங்காய்ப் பூரணத்தை 2 டேபிள்ஸ்பூன் அப்பத்தின் மீது வைத்து சுருட்டவும். சூடாக எடுத்துப் பரிமாறவும்.

அதிசய பத்திரி

ஆப்பத்துக்குத் தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பெரிய பவுலில் சேர்த்து, ஆப்ப மாவு பதத்துக்கு கட்டி விழாமல் கரைத்து வைக்கவும். ஆப்பச் சட்டியை சூடாக்கி லேசாக எண்ணெய் தெளித்து, கலக்கி வைத்த மாவை மெல்லிய ஆப்பங்களாக ஊற்றி எடுக்கவும்.

பூரணம் செய்ய:
பெரிய வெங்காயம் - 4
வேகவைத்த மட்டன் கைமா - 2 கப்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - கால் கப் (வேகவைத்தது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சையைச் சேர்த்து வறுக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, இஞ்சி பூண்டு விழுது, வேகவைத்த மட்டன் கைமா, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கலவை உதிரியானதும் அவித்த கடலைப்பருப்பைச் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

மேற்கண்ட இரண்டையும் இணைத்து அதிசய பத்திரி செய்ய:

தேவையானவை:
முட்டை - 6
பால் - ஒரு கப்
உப்பு + மிளகுத்தூள் -
தேவையான அளவு
சர்க்கரை - ஒன்றரை டீஸ்பூன்
நெய் (அ) தேங்காய் எண்ணெய் -
கால் கப்
கசகசா - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
நெய் மற்றும் கசகசாவைத் தவிர்த்து தேவையானவற்றில் கொடுத்துள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அவனை 180 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும். அகன்ற கேக் பேக்கிங் பாத்திரத்தை எடுத்து அதன் உள்ளே நெய்யை நன்றாகத் தடவவும். இதில் ஆப்பத்தை வைக்கவும். கறி கைமா பூரணத்தை சிறிதளவு எடுத்து, ஆப்பத்தின் மீது பரப்பி வைக்கவும். இனி முட்டை பால் கலவையை ஆப்பத்தின் நடுவே பூரணம் முங்கும் அளவுக்கு ஊற்றவும். இறுதியாக கால் டீஸ்பூன் நெய்யை ஆப்பத்தின் மேலே ஊற்றி, அரை டீஸ்பூன் கசகசாவை மேலே தூவி விடவும். இதேப் போல செய்து வைத்த அனைத்து ஆப்பங்களையும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அதன் மீது பூரணம், முட்டை என மேலே சொன்னது போல அடுக்கி ஊற்றவும். கடைசியாக, மேலே ஆப்பம் அதன் உள்ளே பூரணம், அதனை மறைக்கும் பால் கலவை, நெய் கசகசா தூவல் இருக்கும். இதை அப்படியே சூடுசெய்த அவனில் 180 டிகிரி செல்ஷியஸில் 40 லிருந்து 45 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து ஆறவிடவும், இதன்பிறகு துண்டுகள் போட்டு அதிசய பத்திரியைப் பரிமாறவும்.

கிளிக் கூண்டு

தேவையானவை:
உருளைக்கிழங்கு - 6
எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய், இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அமெரிக்கன் ஸ்வீட்ஃகார்ன் -
ஒன்றே கால் கப்

எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - 200 கிராம்

செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, மசித்துக் கொள்ளவும். அதே போல, சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும். ஸ்வீட்ஃகார்னையும் வேக வைத்துக் கொள்ளவும். இனி, தேவையானவற்றில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.

தேவையானவை:
மைதா மாவு - கால் கப்
சோள மாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
சேமியா - 200 கிராம்
எண்ணெய் - பொரிக்கத்
தேவையான அளவு

செய்முறை:
மைதா மாவு, சோளமாவு, உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து பஜ்ஜி மாவு பக்குவத்துக்கு கட்டி விழாமல் கரைத்துக் கொள்ளவும். பிசைந்த உருளைக்கிழங்கு கலவையை நீள்வட்ட வடிவில் உருண்டை பிடிக்கவும். இதை கரைத்து வைத்துள்ள மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து சேமியாவின் மேல் புரட்டி எடுக்கவும். இதைப் போல் எல்லா உருளைக்கிழங்கு கலவையையும் சேமியாவில் புரட்டி எடுத்து வைக்கவும். இனி வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரே நேரத்தில் மூன்று கிளிக் கூண்டுகளை எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

ரெயின்போ கிண்ணத்தப்பம்

தேவையானவை:
பச்சரிசி - 2 கப்
தேங்காய்ப்பால் - மூன்றரை கப்
முட்டை - 3
உப்பு - ஒரு துளி
சர்க்கரை - ஒன்றரை கப் அல்லது சுவைக்கேற்ப
ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு
நெய்/தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2

செய்முறை:
பச்சரிசியைக் கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். பிறகு தண்ணீர் வடித்து தேங்காய்ப்பால் விட்டு அரிசியை மை போல் அரைக்கவும். இத்துடன் முட்டை, உப்பு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவு தண்ணீர் பக்குவத்துக்கு இருக்க வேண்டும். மாவை பெரிய துளைகளுள்ள டீ வடிக்கட்டியில் வடிகட்டி எடுக்கவும். இனி, வடிகட்டிய மாவை சரிசமமாக இரண்டு பாத்திரத்தில் பிரிக்கவும். ஒரு பாகத்தில் ரோஸ் எசன்ஸ் கலக்கவும். 7 இஞ்ச் வட்ட கேக் பாத்திரத்தின் உள்ளே நெய் தடவவும். இதில் ரோஸ் எசன்ஸ் கலந்த 100மில்லி லிட்டர் மாவை நிரப்பி, 5 நிமிடங்கள் தண்ணீர் நிரப்பிய இட்லி பாத்திரத்தின் உள்ளே வைத்து, ஆவியில் வேக விடவும். பிறகு இட்லி பாத்திரத்தை திறந்து வெள்ளை நிற மாவை 100 மில்லி லிட்டர் ஊற்றி மீண்டும் உள்ளே வைத்து 4 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும் இப்படி ஒரு மாவின் மேல் மற்றொரு மாவை அது தீரும் தலா 4 நிமிடங்கள் வரை ஊற்றி வேக விடவும். ஒவ்வொரு முறை மாவை ஊற்றும் போதும் அதை நன்கு கலக்கிவிட்டு பிறகு ஊற்றவும். அவித்து முடித்ததும் வெளியே எடுத்து ஆறவிடவும். பிறகு கேக் பாத்திரத்தை அப்படியே பெரிய பிளேட்டில் கவிழ்த்து எடுக்கவும். பிறகு எண்ணெய் தடவி கத்தியால் கிண்ணத்தப்பத்தை சதுர துண்டுகளாகப் போட்டு பரிமாறவும்.

குறிப்பு:
மாவை வடிகட்டினால்தான், எல்லா மாவும் ஒன்றாக நன்கு சேர்ந்துகொள்ளும். பரவலாக நன்கு மிருதுவாக வேகும்.

சிக்கன் ரோல்

ஆப்பத்துக்கு தேவையானவை:
மைதா மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - முக்கால் கப்
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஆப்பத்துக்கு மாவு பக்குவத்துக்கு ஒன்றாக கலக்கி வைக்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி லேசாக எண்ணெய் தெளித்து உள்ளே மாவை ஊற்றி, மெல்லிய ஆப்பங்களாக வேக வைத்து எடுக்கவும்.

ரோலின் உள்ளே வைக்கும் பூரணத்துக்கு:
கோழி கைமா - 250 கிராம்
பீன்ஸ் - 6
முட்டைகோஸ் - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
குடமிளகாய் - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது -
ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:
காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கழுவிய கோழி கைமாவுடன் மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக அவித்துக் கொள்ளவும். பிறகு வெளியே எடுத்து வாணலியில் சேர்த்து ஈரம் போக நன்கு வதக்கி எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், பச்சைமிளகாய் சேர்த்து, காய்கறிகள் அரைவேக்காடு வேகும் வரை வதக்கவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

ரோல் செய்ய தேவையானவை:
முட்டையின் வெள்ளைக் கரு - 2
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
பிரெட் கிரம்ப்ஸ் - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
மைதா பேஸ்ட் - சிறிதளவு

செய்முறை:
வேக வைத்து எடுத்த ஒரு ஆப்பத்தின் உள்ளே கோழி பூரணத்தை நீள வடிவில் வைக்கவும். இனி ஆப்பத்தின் வலது, இடது ஓரங்களை உள்நோக்கி மடிக்கவும். பிறகு ஆப்பத்தின் மேல் பகுதியை உள் நோக்கி மடக்கி, இறுதி ஓரங்களை மைதா பேஸ்ட் தொட்டு ஒட்டி விடவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு, மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்துக் கலக்கி வைக்கவும். இதில் தயார் செய்த சிக்கன் ரோல்களை முக்கியெடுத்து பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். இனி, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சிக்கன் ரோல்களைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

இளநீர்-நுங்கு-மாம்பழ புட்டிங்

தேவையானவை:
சுண்டிய பால் (கன்டென்ஸ்ட் மில்க்) - ஒரு கப்
இளநீர் - ஒரு கப் + கால் கப்
பால் - ஒரு கப்
ஃபுட் ஜெலட்டின் - மூன்றரை டீஸ்பூன்
இளநீர் வழுக்கை - ஒரு இளநீருக்குரியது
மாம்பழம் - ஒன்று (தோல் நீக்கி நறுக்கியது)
நொங்கு - 8 (தோல் நீக்கி நறுக்கியது)

செய்முறை:
மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் கால் கப் இளநீரில், ஃபுட் ஜெலட்டினை 5 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மீதம் இருக்கும் இளநீர், பால், கன்டென்ஸ்ட் மில்க் ஆகியவற்றை ஒரு பவுலில் ஒன்றாகக் கலக்கவும், இத்துடன் இளநீர் வழுக்கை, மாம்பழத் துண்டுகள் மற்றும் நுங்கு சேர்த்து கலக்கவும். ஊறிய ஜெலட்டின் பாத்திரத்தை மைக்ரோவேவ் அவனில் 30 வினாடிகள் வைத்து சூடாக்கவும். பிறகு வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சருக்கு வந்ததும் நுங்கு இளநீர் கலவையோடு சேர்த்து நன்கு கலக்கவும். விரும்பிய அலங்கார பாத்திரத்தில் புட்டிங்கை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் 6 மணி நேரம் வைக்கவும். புட்டிங் கெட்டியானதும் எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

படங்கள்: எல்.ராஜேந்திரன்