Published:Updated:

பக்காவா இருக்குது பருப்பு பச்சடி !

பக்காவா இருக்குது பருப்பு பச்சடி !

வாசகிகள் கைமணம்

ஸ்பெஷல் ஸ்பைசி மொச்சை சுண்டல்

தேவையானவை: மொச்சை - கால் கிலோ, உருளைக்கிழங்கு - 2, புளி - கொட்டைப்பாக்கு அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பக்காவா இருக்குது பருப்பு பச்சடி !
##~##

வறுத்துப் பொடிக்க: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: மொச்சையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து வடிக்கவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி, எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த மொச்சை, உப்பு, வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு புரட்டி, புளிக் கரைசலை விட்டு, கொதித்ததும் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து, கிளறி இறக்கவும்.

எஸ்.ரமாமணி, சென்னை-49

பருப்பு பச்சடி

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - முக்கால் டீஸ்பூன், மிளகு - 4, தயிர் - அரை கப், பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - முக்கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உலர் திராட்சை - தலா ஒரு கைப்பிடி, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

பக்காவா இருக்குது பருப்பு பச்சடி !

செய்முறை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம் எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் ஒன்றிரண்டாகத் தட்டவும். வறுத்துப் பொடித்த பருப்புப் பொடி, தக்காளி, கொத்தமல்லி, தட்டி வைத்திருக்கும் இஞ்சி - பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை தயிரில் சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, உலர் திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

- செ.கலைவாணி, சென்னை-16

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

ஸ்பெஷல் ஸ்பைசி மொச்சை சுண்டல்: சோயா பீன்ஸிலும் இதேபோல் செய்யலாம். அதிக சத்து நிறைந்தது.

பருப்பு பச்சடி: உலர்திராட்சைக்கு பதிலாக பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்தால் அருமையாக இருக்கும்.

படங்கள்: எம்.உசேன்,
து.மாரியப்பன்