Election bannerElection banner
Published:Updated:

மணமக்கள் விருந்து... பின்விளைவு தவிர்க்கும் கைடு!

விருந்து
விருந்து

விருந்து

மணமக்கள் விருந்து... பின்விளைவு தவிர்க்கும் கைடு!

ணமக்கள் பொதுவாக திருமணத்துக்கு முன் டயட்டில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பின் உறவுகளும் நண்பர்களும் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு தொடர்ச்சியாக விருந்துவைத்து உபசரிக்க, அவர்களின் டயட் எல்லாம் காணாமல்போகும்; உடல் எடை எக்குத்தப்பாகக் கூடும்.

• ‘‘திருமணத்துக்குப் பிறகும் ஃபிட்னஸும், உடல் வனப்பும் நீடித்திருக்க உணவுக் கட்டுப்பாடு தேவை. குறிப்பாக, போஸ்ட் வெடிங் போட்டோகிராஃப் ஷூட்டுக்கு திட்டமிட்டிருப்பவர்கள், உணவு விஷயத்தில் நிச்சயமாக கடிவாளம் போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தும் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் குந்தலா ரவி, அதற்கான ஆலோசனைகள் தருகிறார் இங்கு...

• ‘‘விருந்து வைப்பவர்கள் தங்களின் பிரியத்தைக் காட்ட, இலை முழுக்க அயிட்டங்களை அடுக்கிவிடுவார்கள். அதைச் சாப்பிடவில்லை என்றால் மிகவும் வருந்துவார்கள். எனவே, அவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத அல்லது எண்ணெய், கொழுப்பு காரணங்களால் நீங்கள் சாப்பிட விரும்பாத உணவுகளைப் பற்றி முன்கூட்டியே உரிமையுடன் சொல்லிவிடுங்கள். ‘ஃப்ரை, வறுவல்னு இல்லாம முடிந்தவரை குழம்பாவும், வேகவைத்த காய்கறிகளாவும் இருக்கட்டும்’ என்று அறிவுறுத்துங்கள். ‘இப்படியெல்லாம் முன்னாடியே சொன்னா என்ன நினைப்பாங்க?’ என்று யோசிக்க வேண்டாம். இலையில் வைத்த பதார்த்தங்களை நீங்கள் விரல்கூடப்படாமல் வீணாக்கினால்தான் அவர்கள் வருத்தப்படுவார்கள். இப்படி தேவையானதை விரும்பிக் கேட்பதை அவர்களும் விரும்புவார்கள்.

• விருந்து நாட்களில் வீட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லாமல், ஜூஸ், பழங்கள் என்று லைட்டாகச் சாப்பிட்டுக்கொள்ளலாம். விருந்தில் மெயின் சாப்பாட்டை சாப்பிட்டுக்கொள்ளலாம்.

• விருந்தில் நாலு ஸ்வீட் வைத்தால், இரண்டு ஸ்வீட் சாப்பிடலாம். இரண்டு ஸ்வீட் இருந்தால், ஒரு ஸ்வீட்டுடன் நிறுத்திக்கொள்ளவும்.

மணமக்கள் விருந்து... பின்விளைவு தவிர்க்கும் கைடு!

• விருந்தில் சாதத்தைக் குறைவாகச் சாப்பிட்டு, காய்கறிகள், பழங்கள், சாலட், மோரை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். ஹோட்டலில் விருந்து என்றால் ஃபாஸ்ட் ஃபுட் தவிர்க்கவும்.

• அசைவ விருந்து எனில் ஃப்ரை அயிட்டங்கள் தவிர்த்து, வேகவைத்த மற்றும் குழம்பு அயிட்டங்கள் சாப்பிடலாம்.

• கேக் சாப்பிடும்போது க்ரீம் கேக் தவிர்த்து ஸ்பான்ஞ் கேக் தேர்வு செய்யலாம்.

• விருந்து முடித்து வந்த பின், அதை ஈடுகட்டும் அளவுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டு கலோரிகளை எரிக்கவும்.

• திருமணத்துக்குப் பிறகும் ஃபிட்னஸ் முக்கியம். ஜிம் போக நேரமில்லை எனில்... உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, சைக்ளிங் என்று செய்யலாம்.

• இளவயது மணமக்கள் விருந்தைப் பற்றிக் கவலைப்படாமல் விரும்பியதைச் சாப்பிடலாம் என்றாலும், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் விருந்தில் மட்டுமல்ல, தினசரி வீட்டில் சாப்பிடும் உணவிலும் கட்டுப்பாடுகொள்ள வேண்டியதும், உடற்பயிற்சியை தொடர வேண்டியதும் அவசியம்.’’

- கே.அபிநயா, படம்: ஃபோகஸ் ஸ்டூடியோ

உறவினர்களுக்கு  ஒரு வேண்டுகோள்!

மணமக்கள் பல மாதங்களாக திருமண வேலை, டென்ஷன், பயம் என்று தாண்டி வந்திருப்பார்கள். எனவே, நீங்கள் விருந்துக்கு அழைக்கும் நாட்களில் அவர்களின் உடலும் மனமும் சோர்வாக இருக்கும். எனவே, அவர்களால் அதிகளவு உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அதனால் விருந்தில் அவர்களால் நீங்கள் சமைத்த உணவுகளை எல்லாம் சாப்பிட முடியாமல் போனால் வருத்தப்பட வேண்டாம். மேலும், சமைக்கும் முன் அவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது பற்றி கேட்டுவிடுவது சிறந்தது.

 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு