உலகம் முழுவதும் உள்ள தமிழ்க் குடும்பங்கள் பலரின் கிச்சனிலும் தவறாமல் இடம் பிடித்திருக்கிறது அவள் விகடன் கிச்சன். இத்தகைய பெருமையைப் பெற்றிருக்கும் அவள் விகடன் கிச்சனுக்கு இரண்டாவது பிறந்தநாள். இதற்கான கொண்டாட்டம் வெகு விமரிசையாக கடந்த ஜூலை 3 ம் தேதி சென்னையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. தங்கள் இல்லத்தின் திருவிழாவைப் போல அன்பு பாராட்டி அலங்கரிக்க, காலை பத்து மணியிலிருந்தே விருந்தினர்கள் வரத் துவங்கினார்கள். ‘ருச்சி’ ஊறுகாயும், ‘சக்தி மசாலா’வும் இந்த கொண்டாட்டத்தை இணைந்து வழங்கினார்கள்.

விழா நடைபெற்ற அறைக்கு முன்னால் இருந்து, ஆரம்பித்த சிவப்பு கம்பள வரவேற்பில் மகிழ்ந்த விருந்தினர்களின் நாவுக்கு சுவையளிக்க, ‘மின்ட் ஜூஸ்’ மற்றும் ‘நன்னாரி சர்பத்’ வழங்கப்பட, ருசித்தபடியே அரங்கத்துக்குள் நுழைந்தார்கள்.

விழாவுக்கு குறிப்பிட்ட நேரத்தில் லேப்டாப் பேக் சகிதமாக சிம்பிளாக வந்திறங்கினார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். செஃப் தாமு, செஃப் பழனிமுருகன், செஃப் சித்தார்த், மெனுராணி செல்லம் என்று கிச்சனுக்கு தன் பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வரும் பலரும் முகம் மலர வந்து பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆர்.ஜே சனோ, விகடன் பப்ளிஷர்ஸ் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனைப் பேச அழைத்தார். அவருடைய உரையைத் தொடர்ந்து கிச்சனின் இரண்டாம் ஆண்டு சிறப்பிதழை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் கிரவுன் பிளாசாவின் எக்ஸிகியூட்டிவ் செஃப் பிரவீன் ஆனந்த் இருவரும் வெளியிட்டனர். தன் மைல்ட் புன்னகையுடன் மைக் பிடித்த கெளதம்,

‘‘அவள் கிச்சன்’ இதழோட அட்டைப்படத்துல இருக்கிற ‘பனானா பேன் கேக்’ என் ஃபேவரைட் பிரேக்பாஸ்ட். எனக்கு பேக்கிங் தெரியும். சினிமா மாதிரி அதையும் ஒரு கிரியேட்டிவ் பிராசஸ்ஸாதான் பார்க்குறேன். அது எப்படி வந்திருக்குங்கிற ரிவ்யூ பற்றி கவலைப்பட மாட்டேன். என்ன படம் பண்ணாலும், ஆனந்தவிகடன் 40 மார்க்கு மேல கொடுக்கமாட்டாங்க. அதேமாதிரிதான், சமையலில் ரெசிப்பி பார்த்து நான் குக் பண்ணினதே கிடையாது. எங்க வீட்டில் இன்னிக்கு என்ன சமையல்னு யாருமே கேட்டதில்லை. ‘இன்னைக்கு என்ன சமைக்கலாம்னுதான் கேட்பாங்க. இது பண்ணலாமா. அது பண்ணலாமா’னு ஒரு டிஸ்கஷனோடதான் அம்மா சமைக்கவே ஆரம்பிப்பாங்க. அம்மா டீச்சரா இருக்காங்க. ஞாயிறுக்கிழமையானால் அவுங்க சமையல்தான். ஞாயிற்றுக்கிழமை மதியம் எல்லாரும் வீட்டில் ஆஜர் ஆகிடுவோம்.

வீட்டில் அம்மா என்ன சமைப்பாங்களோ, அதைத்தான் வெளியில போறப்பவும் சாப்பிடுவேன். உதாரணத்துக்கு, அம்மா வீட்டில் மஷ்ரூம் செய்யமாட்டாங்க. அதனால, அதனால நானும் வெளியில் மஷ்ரூம் சாப்பிடமாட்டேன்.

நாங்க பாதி தமிழ், பாதி மலையாளி. தீபாவளின்னா வீட்லதான் எல்லா ஸ்வீட்டும் அம்மா செய்வாங்க. நான் ஒரு ஃபுட்டீ. எங்களுக்காக சமையலில் எங்க அம்மா அவ்வளவு மெனக்கெட்டு நிறைய உணவுகள் செய்து, அவுங்க அன்பை வெளிப்படுத்துனதை நினைக்கும்போது ரொம்ப சந்தோசப்படுறேன். அவங்க அன்புதான் என் ஆரோக்கியம்” என்று டச்சிங்காக முடிக்க, கிளாப்ஸால் அரங்கம் அதிர்ந்தது.

ஆர்.ஜே சனோ வந்திருந்த விருந்தினர்களைப் பார்த்து, ‘‘இங்கே இருக்கும் எத்தனை ஆண்களுக்கு சமைக்கத் தெரியும்? என கேட்டுத் தெறிக்க விட்டார். சளைத்தவர்களா ஆண்கள். பலரும் கை உயர்த்தி ஆச்சர்யப்படுத்த, அவர்களுள் ஒருவரிடம், ‘ரசம் ரெசிப்பி’ கேட்க... ‘சுடுதண்ணீரில் புளியை ஊறவைக்கணும்’ என்று ஆரம்பித்ததும் கிளாப்ஸ் எழுந்தது. அவர் சொல்லச் சொல்ல சிரித்து மகிழந்த கூட்டம் சூப்ப்பராக அவர் ரசம் ரெசிப்பியை சொல்லிமுடிக்க, கைததட்டல்கள் காதைப் பிளந்தன.

ஆரவாரத்தைத் தொடர்ந்து ‘திரில்’ வீரா ‘ஜக்லிங்’ என்று சொல்லப்படும் சாகச விளையாட்டுக்களை நடத்திக் காட்டினார். அவர் செய்யும் சாகசங்களை ஆச்சர்யத்தோடு கவனித்து கொண்டிருந்தார் சமையல் எக்ஸ்பர்ட் ‘மெனுராணி’ செல்லம். நிகழ்ச்சியின் போதே ‘திரில்’ வீரா விருந்தினர்களில் ஒருவரான செஃப் தாமுவை மேடைக்கு அழைக்க, உற்சாகத்தோடு மேடைக்கு வந்தார் தாமு. மியூசிக் போட போட தன் தலையில் இருந்த தொப்பிகளை செஃப் தாமு தலைக்கு மாற்றிக் காட்டினார். வீரா கொடுக்கின்ற தொப்பியை சளைக்காமல் அழகாக தன் தலையில் மாற்றி மாற்றி அணிந்து, வீராவுக்கு இணையாக சாகச விளையாட்டிலும் அசத்தினார் செஃப் தாமு.

விழாவுக்காக, பார்த்து பார்த்து ‘இண்டோ-ஃபிரெஞ்ச் ஃபியூஷன்’ என்ற தலைப்பில் உணவுகளை சமைத்திருந்த எக்ஸிகியூட்டிவ் செஃப் பிரவீன் ஆனந்த் அவற்றைப் பற்றி அழகாக விளக்க, அதை ருசிக்கத் தயாரானர்கள் விருந்தினர்கள். லஞ்ச் ஹாலின் பிரம்மாண்ட கதவுகள் திறக்கப்படவே, காத்திருந்தன பலவிதமான உணவுகள். பீட்ரூட் சாலட், அவரைக்காய் சாலட், கவுனி அரிசியில் செய்யப்பட்ட அல்வா, புட்டு, நான்-வெஜ் என அனைத்தையும் ஆர்வத்துடன் சுவைத்துக் கொண்டிருந்தார்கள் விருந்தினர்கள்.

விருந்தில் கலந்துகொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், ‘அவள் கிச்சன் குழுவுக்கு என் வாழ்த்துகள். இதழில் வழங்கும் ரெசிப்பி எல்லாம் வித்தியாசமா இருக்கு. விருந்தில் தேங்காய்ப்பால் ரசம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. சாலட் வகைகளும் நல்லா இருந்துச்சு’’ எனப் பாராட்டினார்.

தன்னுடைய ஜட்ஜ் பார்வையில் ஒவ்வொரு உணவையும் எடுத்து சுவைத்த செஃப் தாமு, ‘‘எல்லா சைவ, அசைவ உணவுகளுமே வித்தியாசமா செய்திருந்தாங்க. பாண்டிச்சேரி ஸ்டைலில் பிரான் அண்ட் சிக்கன் கிரீன் மசாலா ஃபுட் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. மொத்தத்துல விருந்து பேஷ்பேஷ்” என்று புன்னகையோடு பாராட்டினார். விருந்தினர்களை வெகுவாக அசத்தியது கவுனி அரிசியில் தயாரிக்கப்பட்ட அல்வா.

விருந்துக்கு, கிச்சன் இதழில் பங்களிப்பு செய்துவரும் அன்னம் செந்தில்குமார், திவ்யா, கிருஷ்ணகுமார், மீனா சுதிர் என வந்திருந்த சமையல் கலைஞர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்து, மகிழ்ந்து... செல்பிக்களால் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்தார்கள்.

விருந்துக்கு இடையே பேசிய அன்னம் செந்தில்குமார், “இதழ்ல மற்ற சமையல் கலைஞர்கள் கொடுக்கும் ரெசிப்பியைப் பார்ப்பேன். அட, நல்லா இருக்கேனு நினைப்பேன். அவுங்களை பார்த்தது கிடையாது, பேசினது கிடையாது. நேர்ல பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா, எல்லாரையும் ஒரே இடத்துல பார்ப்பேனு நினைச்சு கூட பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவள் கிச்சனுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்ற அவரின் வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சி.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘ஃபிரெஞ்சு பிரெட் ஃபீல்’ (French Bread Feel) என்கிற கேம் அமைக்கப்பட்டிருந்தது. பல வகையான ஃபிரெஞ்சு பிரெட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்கள் முதலில் ஒரு பிரெட்டை சுவைத்துவிட்டு, பிறகு கண்ணைக் கட்டிக்கொண்டு ருசித்து சொல்லவேண்டும். பலவித கேலிகளுக்கும், சிரிப்புகளுக்கும் இடையில் சுவைத்துப்பார்த்து சரியான பிரெட்டை சொல்லி ஃபிரெஞ்சு சாக்லேட்ஸை கிஃப்டாக அள்ளினார் கிச்சன் பங்களிப்பாளர் திவ்யா.

சிரிப்புகள், விசாரிப்புகள், புகைப்படங்கள் என்கிற கமகம கிச்சன் விருந்து முடிய, விருந்தினர்களுக்கு ரிட்டர்ன் கிஃப்டாக ருச்சி ஊறுகாய், சக்தி மசாலாவின் பஜ்ஜி போண்டா மிக்ஸ் மற்றும் ‘பேர்ட் ஃபீடர்’ அடங்கிய கிஃப்ட் செட் அடங்கிய கைப்பை வழங்கப்பட்டது.

பரிசைப் பெற்றுக் கொண்ட சமையல் கலை நிபுணரான சசிமதன் ஒரு கணம் பையை உற்றுப்பார்த்துவிட்டு ‘‘வாவ் பகுத்துண்டு வாழ்வோம்னு சொல்லி பேர்ட் ஃபீடரை பரிசாக கொடுத்திருக்கீங்க.

நாங்களே வாங்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தோம். எங்க வீட்ல ஏகப்பட்ட மரங்கள் இருக்கு. இதை மரத்துல கட்டி தொங்கவிட்டுட்டா பறவைங்க வந்து வாழுற இடமா எங்க தோட்டம் மாறிடும்.

நினைச்சே பார்க்கலை. ரியலி இட்ஸ் எ சர்ப்ரைஸ்” என்று கண்கள் விரிய சந்தோஷத்தோடு விடைபெற்றார்.

பகுத்துண்டு வாழ்வோம்.

- கே.அபிநயா, படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன். ஆ.முத்துகுமார்