இந்தியாவில் எந்த நகரத்துக்குச் சென்றாலும், சின்ன ஹோட்டல் முதல் பெரிய ஸ்டார் ஹோட்டல் வரை ‘செட்டிநாடு உணவு கிடைக்கும்’ என்ற விளம்பரத்தைப் பார்க்கலாம்.

செட்டிநாட்டு உணவென்று சொன்னாலே, அசைவ உணவு விரும்பிகளுக்கு நாக்கு சப்புக்கொட்டத் துவங்கிவிடும். நெல்லை, மதுரை, திண்டுக்கல் என உணவுக்கென்று தனிஅடையாளம் பெற்ற ஊர்கள் பல இருந்தாலும், செட்டிநாட்டு உணவுக்கென்று தனித்த வரலாறு உண்டு. அந்த வகையில் நாம் சென்றது காரைக்குடி ‘ஸ்ரீ பிரியா மெஸ்’க்கு.

47 வருட பாரம்பர்ய ஹோட்டல். சாப்பாட்டு மணம், அந்தத் தெருவில் நுழைந்ததுமே நம்மை வரவேற்கிறது. ஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிலான டைனிங் ஹால். கூட்டமாக இருக்கிறதென்று யாரும் வேறு ஹோட்டலுக்குச் செல்வது கிடையாது. வாசலில் காத்திருக்கிறார்கள். காலை, இரவு டிபன் கிடையாது. மதிய சாப்பாடு மட்டும்தான். மதியம் 12 மணிக்கே ஆட்கள் வரத்துவங்கிவிடுகிறார்கள்.

நாமும் புகைப்படக்காரரும் அமர்ந்தோம். நான்கு பேர் சேர்ந்து சாப்பிடும் சைஸில் வாழை இலையைப் போட்டு தண்ணீர் தெளித்ததும், காய்கறி அவியலும், உருளைக்கிழங்கு மசாலாவும் வைக்கிறார்கள். பொதுவாக, அசைவ உணவகங்களில் இதுபோன்ற சைவ உணவுகளையும் பெயருக்கு வைப்பார்கள். ஆனால், அதில் எந்த ருசியும் இருக்காது. இங்கோ இந்த சைவ வகைகளும் நம்மை சுண்டி இழுத்தன.

சர்வீஸ் செய்பவர்களில், ஓரிருவர் தவிர, அனைவரும் பெண்கள். ஆர்டரை கனிவாகக் கேட்கிறார்கள், அன்பாகப் பரிமாறுகிறார்கள். கூடவே, ஹோட்டல் உரிமையாளர் சிவகுமாரும் ஒவ்வொரு டேபிளாக வந்து கவனிக்கிறார். சூடான உதிரி மல்லிகைப்பூ மாதிரி சாதத்தை வைக்கிறார்கள். மீன், மட்டன், சிக்கனில் அத்தனை அயிட்டங்களும் இருக்கின்றன. சைடிஷ் ஆர்டர் செய்தாலும் செய்யாவிட்டாலும், அனைத்து கிரேவியும் கொடுக்கிறார்கள்.

ஓப்பனிங்கே நாட்டுக்கோழி கிரேவிதான். நாம் நாட்டுக்கோழியை ஆர்டர் செய்தவுடன் அற்புதமான ருசியில் சுடச்சுட வந்தது. கோழியிலிருந்து கிரேவியை தனியே பிரிக்க முடியவில்லை. சாதத்தில் கிரேவியைப் பிசைந்து சாப்பிடும்போது, என்ன ருசி, என்ன ருசி! அந்த கிரேவியிலேயே அடுத்தடுத்து சாப்பிட நினைத்தாலும், மற்ற அயிட்டங்களையும் ருசிபார்க்க வேண்டுமென்பதால் மீன் வறுவலும், குழம்பு மீனும் ஆர்டர் செய்தோம்.

ராமேஸ்வரம், தொண்டியில் காலையில் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள். ஊலா, வௌமீன். அப்படியே கெட்டியாக இருக்கும் குழம்பில் மூழ்கிக்கிடக்கும் மீனின் சுவை சொல்லில் அடங்காது. வறுவல் மீனை சரியான பதத்தில் மிருதுவாகப் பொரித்திருந்தார்கள்.

அடுத்து இறால். தேங்காய்ப்பால் சேர்த்து கிரேவி செய்திருந்தார்கள். நாம் சாப்பிடுகிற அளவுக்கு தாராளமாக வைக்கிறார்கள்.

நண்டு, உடைக்க எளிதாக, ருசிக்க சுவையாக நாக்கை சுண்டி இழுக்க தவறவில்லை. மிளகு, சீரகத்தில் சுண்டப்பட்ட ஈரல் அப்படியே சுண்டி இழுக்கிறது. மிளகு மசாலாவில் புரட்டப்பட்ட மட்டன், வைத்த நிமிடம் வாய்க்குள் போய்விட்டது. இதற்கு மேல் சாப்பிட முடியாது என்று வயிறு நிறைய, மனதோ ‘இன்னும் கொஞ்சம்’ கேட்டது. ரசம், மோரில் கொஞ்சம் இளைப்பாறினோம்.

சாப்பிடும்போது லேசாக இருக்கும் காரம் சாப்பிட்டபின் எரிச்சல்படுத்தவில்லை. காரணம், மிளகுதான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அரிதாகவே பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் பயன்படுத்துகிறார்கள். இங்கு மீன் வறுவலைத் தவிர வேறு எந்த அயிட்டத்தையும் எண்ணெயில் பொரிப்பதில்லை என்கிற விவரத்தை சாப்பிடும்போதே சொல்கிறார்கள்.

குடும்பம் சகிதமாக வந்திருந்த சீனிவாசன் என்பவரிடம் பேசினோம். ‘‘எனக்கு சொந்த ஊர் மேலூர். காரைக்குடிக்கு ஒரு வேலையா வந்தோம். நல்ல செட்டிநாட்டுச் சாப்பாடு சாப்பிடணும்னு பல பேர்கிட்டே விசாரிச்சப்போ, இங்க கைகாட்டினாங்க. நான் வியாபாரத்துக்காக ஆந்திரா, கர்நாடகானு பல ஊர் சுத்தி வந்திருக்கேன், பல ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கேன். ஆனா, இந்த டேஸ்ட் இதுவரை சாப்பிட்டதில்ல. உபசரிப்பும் நல்லா இருக்குதுங்க” என்றபடியே சாப்பாட்டில் மூழ்கினார்.

குடும்பத்தோட வந்திருந்த பாபு, ‘‘சொந்த ஊரு காரைக்குடி என்றாலும், சென்னையில செட்டிலாகிட்டோம். ஊருக்கு எப்ப வந்தாலும், வீட்ல சாப்பிடுறதைவிட இந்த மெஸ்ஸுக்கு சாப்பிட வந்திடுவோம். இந்த டேஸ்ட் வேற எங்கேயும் கிடைக்காது’’ என்றார்.

காரைக்குடி, சிவகங்கைக்கு வருகிற சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், விஐபிக்கள் பலரும் இந்த மெஸ்ஸின் வாடிக்கையாளர்கள். நடிகை சிம்ரன் ஒரு படத்தில் நடிக்க இங்கு வந்து தங்கியிருந்தபோது, ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டால் கும்பல் கூடிவிடும் என்பதால், தினமும் இங்கிருந்து கேரியரில் வாங்கிவரச் சொல்லி சாப்பிடுவாராம். நடிகர் நாசர் இந்தப் பக்கம் வந்தாலே இங்கு வந்துவிடுவாராம்.

‘‘இந்த நவீன காலத்துலயும் நாங்க மீன் வறுவலைத் தவிர மத்த எல்லா உணவு வகைகளையும் விறகு அடுப்புலதாங்க சமைக்கிறோம்’’ என்று பரிமாறிய பெண் சொன்னபோதுதான் புரிந்தது, ருசிக்கான முக்கியக் காரணம். ஹோட்டலின் தோற்றத்தைப் பார்க்கும்போது விறகு அடுப்பில் சமைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாத வகையில், அவ்வளவு நீட்டாகப் பராமரிக்கிறார்கள்.

ஹோட்டலை இன்னும் நவீனப்படுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு அந்நியமாகத் தெரியும் என்பதால், அதே செட்டப்பில் வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் பட்ஜெட்டுக்கு தாங்கும் ஹோட்டல்.

செ.சல்மான், படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்