உணவே மருந்து என வாழ்ந்தவர்கள் தமிழர்கள். நம் மூதாதையரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்ததற்குக் காரணம், அவர்களின் திட்டமிட்ட உணவு முறையே! இன்றைக்கு அந்த உணவுப் பண்பாடு குலைந்துவிட்டது. ஆனாலும், சில உணவுப் பொருட்கள் மட்டும் காலம் கடந்து, தன் வீர்யம் குறையாமல் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கருப்பட்டி! முந்தைய நாட்களில் காபி, டீ போன்ற பானங்களாகட்டும்... விசேஷ நாட்களின் இனிப்புப் பலகாரங்கள் ஆகட்டும்... கருப்பட்டியில்தான் செய்வார்கள். அதனால், அவை வெறும் பலகாரங்களாக இல்லாமல், குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் மருந்தாகவும் இருந்தன. தமிழ்நாட்டில், திருச்செந்தூருக்கு அருகே உள்ள உடன்குடியில்தான் கருப்பட்டி அதிகம் தயாரிக்கப்படுகிறது.

பனையில் இருந்து கிடைக்கும் பதநீரை பெரிய வாணலியில் ஊற்றி நன்றாக காய்ச்சுவார்கள். பாகு பதத்துக்கு வந்ததும், கொட்டாங்கச்சி அச்சில் ஊற்றினால், கருப்பட்டி தயாராகிவிடும். இதே முறையில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துக் காய்ச்சினால் அது சுக்கு கருப்பட்டியாகும்.

இன்று நாம் இனிப்புக்காகப் பயன்படுத்தும் சர்க்கரை, பல நோய்களுக்குக் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், கருப்பட்டி சர்வரோக நிவாரணி. கிராமங்களில் கருப்பட்டி காபி குடிப்பதை இன்றைக்கும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கருப்பட்டி காபிக்கு உள்ள மணமும் குணமும் தனி.

உடல் சூடு அதிகமானால் அடிவயிறு வலிக்கும். அந்த நேரத்தில் நெல்லிக்காய் அளவு புளியை நீரில் ஊறவைத்து, கருப்பட்டி சேர்த்துக் குடித்தால் சூடு தணிவதோடு வயிற்றுவலியும் சரியாகும். கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்து வந்தால் காய்ச்சல், மாந்தம், மேக நோய்கள், சோகை குணமாகும்.

பருவமடைந்த பெண்களுக்கு உளுந்த மாவுடன் கருப்பட்டி சேர்த்து, களி செய்து கொடுத்தால் இடுப்பு, கருப்பை பலம் பெறும்.

சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதோடு அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

தீபாவளிக்குப் பிறகு ஏற்படும் ஜீரணக் கோளாறுக்கு மிளகு, சுக்கு, மல்லி, ஏலக்காய் போன்றவற்றை பொடியாக்கி அத்துடன் கருப்பட்டி சேர்த்து காபி தயாரித்து உண்டு வந்தால் சரியாகும்; சளித்தொல்லை, வாய்வுக்கோளாறு போன்றவையும் விலகும்.