மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த விதி, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்துக்கும் பொருந்தும். கொண்டாட்டங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

பட்டாசில் இருந்து பட்டுப்புடவை வரைக்கும் தீபாவளிக்கு தீபாவளி புதுசு புதுசாகத் தேடி வாங்குகிறவர்கள், தீபாவளி ஸ்வீட்ஸ் விஷயத்தில் மட்டும் ஓரவஞ்சனையாக இருக்கலாமா?

அதிரசத்தையும் அக்காரவடிசலையும் மறந்து, இந்த வருட தீபாவளிக்கு கொஞ்சம் புதியதாகத்தான் ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

`என்ன செய்யலாம்... எப்படிச் செய்யலாம்?’ எனக் கேட்பவர்களுக்கு கலர்ஃபுல்லாக, கலக்கலாக ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் செய்துகாட்டியிருக்கிறார் `ரெசிபி ராணி’ சந்திரலேகா ராமமூர்த்தி.

இந்த வருடம் உங்கள் வீட்டு தீபாவளி சம்திங் ஸ்பெஷலாக இருக்கட்டுமே...

ஹேப்பி தீபாவளி!

ராஜ் மஞ்சூரி பிட்டா

தேவையானவை -

மேல்மாவுக்கு:

மைதா - 1 1/4 கப்
ரவை - 1/4 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்.
பூரணத்துக்கு:
துருவிய தேங்காய் - 1/2 கப்
இனிப்பு இல்லாத கோவா - 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடித்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 6
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்.
பாகு செய்வதற்கு:
சர்க்கரை - 1 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய், குங்குமப்பூ - சிறிதளவு.
பொரிப்பதற்கு:
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
அலங்கரிக்க:
பிஸ்தா, வெள்ளிச் சரிகை (பெரிய ஸ்டோர்களில் கிடைக்கும்).

செய்முறை:

மேல் மாவுக்குக் கொடுத்ததை இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து, 10 நிமிடங்கள் வைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி, பூரணத்துக்கான பொருட்களை போட்டு லேசாக வதக்கவும். இறக்கிவைத்து ஆறியதும், வடையாகத் தட்டி, தனியாக வைக்கவும் (இது பூரணம்). பாகுக்குக் கொடுத்தவற்றை சேர்த்து பாகு காய்ச்சி, ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்துவைக்கவும். (பாகு பிசுபிசுப்பாக இருக்க வேண்டும்).

இப்போது, கரைத்துவைத்திருக்கும் மேல் மாவில், பூரணத்தை வைத்து தோய்த்து, எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து எடுத்து, பாகில் இரண்டு நிமிடம் ஊறவைக்கவும். ஊறியதும் எடுத்து, தனித்தனியாக கிண்ணத்தில் வைத்து அலங்கரித்து, சிறிது பாகுடன் பரிமாறவும்.

மல்ட்டி கலர் தேங்காய் லட்டு

தேவையானவை:

கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்
டிரை தேங்காய் பவுடர் - 2 கப்
(டிரை தேங்காய் பவுடர் கிடைக்கவில்லை என்றால், கொப்பரைத் தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்)
இனிப்பு இல்லாத, துருவிய கோவா - 1/2 கப்
ஃபுட் கலர் (தேவையான நிறங்களில்) - சிறிதளவு
பொடித்த தேங்காய்த் தூள் - சிறிதளவு.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், தேங்காய்ப் பவுடர் இரண்டையும் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் துருவிய கோவா சேர்க்கவும். பிறகு, இவற்றை மூன்று அல்லது நான்கு பாகங்களாகப் பிரித்து, தேவையான ஃபுட் கலரைச் சேர்த்து, ஒரு பாகத்தை வெள்ளையாகவே வைக்கவும். இப்போது தேங்காய், கோவா, கன்டென்ஸ்டு மில்க் கலவையைக் கெட்டியாக மிதமான தீயில் முதலில் கிளறி, பின் பகுதிகளாகப் பிரித்து கலர் சேர்க்கவும். சிறிது ஆறியதும், சிறிய அல்லது விருப்பமான அளவில் லட்டுகளாகப் பிடிக்கவும். பின் தனியாக வைத்துள்ள தேங்காய்த் தூளில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

ஸ்டஃப்டு டேட்ஸ் இன் சாக்லேட் சாஸ்

தேவையானவை:

உலர்ந்த பெரிய பேரீச்சம் பழம் - 10-12
பொடித்த டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் (முந்திரி, திராட்சை, பிஸ்தா, வால்நட்ஸ், பாதாம்) - 1/2 கப் (பூரணத்துக்கு.)
டார்க் சாக்லேட் - 200 கிராம்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

பேரீச்சையை எடுத்து, மத்தியில் கீறி, விதை நீக்கி, பூரணத்துக்கு உள்ளவற்றை (டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்) பொடித்து கலக்கவும் அல்லது தனித்தனியாக, முழுதாக, ஸ்டஃப் செய்து லேசாக மூடிவைக்கவும்.

சாஸ் தயாரிக்க...

சாக்லேட் துண்டுகள், வெண்ணெய், சிறிது சர்க்கரை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, கொதிக்கும் தண்ணீரின் மேல் அந்தப் பாத்திரத்தை வைத்து, மிதமான தீயில் கரைக்கவும் (Double Boiler). இது சிறிது கெட்டியாகக் கரைந்ததும், ஸ்டஃப் செய்த பேரீச்சையை இதில் தோய்த்து தனித்தனியாக, குளிரவைத்துப் பரிமாறவும்.

காஜு மட்ரி

தேவையானவை:

மைதா - 2 கப்
ரவை - 1/4 கப்
நெய் - 1/2 கப்
கரகரப்பாக உடைத்த முந்திரி - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு (உடனே சாப்பிடுவதாக இருந்தால் தண்ணீருக்குப் பதில் பால் சேர்க்கலாம்)
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

நெய், சர்க்கரை இரண்டையும் நன்கு தேய்க்கவும். தேய்க்கத் தேய்க்க நன்கு பொங்கி வரும். அப்போது, ரவை, மைதாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலக்கவும். பொடித்த முந்திரியைச் சேர்க்கவும். ஏலக்காய் தூள், உப்பு சேர்க்கவும். இந்தக் கலவையைப் பிடிக்கும்போது உதிரக் கூடாது. புட்டு மாவுபோல் இருக்க வேண்டும். பின் கொஞ்சம் கொஞ்சமாக பால் அல்லது தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து, ஒரு ஈரத் துணியால் மூடி
20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

துணியை எடுத்துவிட்டு, மாவை மீண்டும் பிசைந்து, அதில் இருந்து எலுமிச்சை அளவு எடுத்து உருண்டைகளாகச் செய்யவும். அதை ஒவ்வொன்றாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து மிதமாக அழுத்தவும். எல்லாவற்றையும் இப்படிச் செய்த பிறகு, கடாயில் எண்ணெய் அல்லது நெய் காயவைத்து மிதமான தீயில் மட்ரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஆரஞ்சு சந்தேஷ்

தேவையானவை:

பனீர் - 250 கிராம்
சரக்கரைத் தூள் - 4 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு சாறு - 1/2 கப்
பாதாம், பிஸ்தா சீவியது - தேவைக்கேற்ப
ஏலக்காய் விதை - சிறிதளவு
ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

பனீரை சுத்தப்படுத்திக் கழுவி, வடித்து, துருவிக்கொள்ளவும். அதை ஒரு தட்டில் போட்டு, பொடித்த சர்க்கரை சேர்த்து, தேய்க்கவும். ஒரு பான்-ல் நெய்விட்டு, மிதமான தீயில் பனீரைக் கொட்டிக் கிளறவும். ஒட்டாமல் சுருண்டு வரும்போது, இறக்கி, மீண்டும் ஒரு தட்டில் கொட்டி, இத்துடன் ஏலக்காய் விதை, ஃபுட் கலர், ஆரஞ்சு சாறு சேர்த்துத் தேய்க்கவும். பின் ஒரு தட்டில் கொட்டி, அழுத்தி, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து, துண்டுகள் போடவும்.

அத்திப்பழ அல்வா

தேவையானவை:

அத்திப்பழங்கள் - 200 கிராம்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/2 கப்
உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி தலா - 10
தோல் சீவி, நறுக்கி, துருவிய பீட்ரூட் - 1/4 கப்.

செய்முறை:

அத்திப்பழத்தை துண்டுகள் போட்டு, சிறிது சூடான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். பிறகு, இதனை துருவிய பீட்ரூட்டுடன் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். நான்-ஸ்டிக் பான்-ல் நெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு, பத்து நிமிடங்கள் கிளறவும். பிறகு சர்க்கரை சேர்க்கவும். கைவிடாமல் கிளறவும். பாதாம், பிஸ்தா, முந்திரியை வறுத்து இதில் சேர்க்கவும். அல்வா பதத்தில் ஒட்டாமல் வந்ததும், கிளறி இறக்கவும். அலங்கரித்துப் பரிமாறவும்.

வெள்ளைப் பூசணி பேடா

தேவையானவை:

வெள்ளைப் பூசணிக்காய் - 1/2 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
படிகாரம் தூள் (Alum Powder) - 1 டீஸ்பூன்
பொடித்த சர்க்கரைத் தூள் - 1/2 கப்
ரோஸ் வாட்டர் - தேவைக்கேற்ப
டூட்டி ஃப்ரூட்டி (எல்லா நிறங்களிலும்) - தேவையான அளவு.

செய்முறை:

பூசணிக்காயை சுத்தப்படுத்தி, தோல் நீக்கி, விதை நீக்கி ஒரே அளவில் சதுரத்துண்டுகள் போடவும். ஒரு பாத்திரத்தில் இந்தத் துண்டுகளைப் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர்விட்டு, அதில் பொடித்த படிகாரத்தைப் போட்டுக் கரைத்து அரைமணி நேரம் அப்படியே ஊறவைக்கவும். பிறகு, பூசணிக்காய் துண்டுகளை நன்கு கழுவி, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்கவைக்கவும். நன்கு கொதி வந்ததும், அதில் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு மிதமாக வேகவிட்டு, 2 கம்பிப்பாகு வரும் வரைவிட்டு, பின் ரோஸ் வாட்டர் சேர்த்து, துண்டுகளை எடுத்து, தனியாக வைத்து வடித்து, சர்க்கரைத் தூளில் புரட்டவும். மேலே டூட்டு ஃப்ரூட்டியால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ஸ்ட்ராபெர்ரி சிரோட்டி

தேவையானவை:

மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
ஐஸ் வாட்டர் - தேவைக்கு.

பூசுவதற்கு:

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன் (இரண்டையும் குழைத்துக்கொள்ளவும்).
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்ட்ராபெர்ரி சாறு - சிறிதளவு.

செய்முறை:

மைதா, ரவை, உப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். அதை ஒரு துணியால் 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, அதை எடுத்து மீண்டும் மிருதுவாகப் பிசையவும். அதை இரண்டு பாகங்களாக்கி, ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி சாறு சேர்த்து நன்கு பிசைந்து தனியாக வைக்கவும். இது ரோஸ் நிறத்தில் வரும். இன்னொரு பாகத்தை வெள்ளையாகவே வைத்திருக்கவும். இரண்டு மாவிலும் தலா ஆறு சிறு உருண்டைகள் செய்யவும்.

பூரியின் மத்தியில் பூசுவதற்கு அரிசி மாவையும் நெய்யையும் கலந்து தனியாக எடுத்துவைக்கவும்.

சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 கம்பி பதத்துக்குப் பாகு செய்யவும். ஒரு வெள்ளை நிற உருண்டையை எடுத்து பூரியாகத் தேய்க்கவும். பூசுவதற்கு கொடுத்த கலவையில் இருந்து சிறிது எடுத்து, பூரியின் மேல் தடவவும். அடுத்து ரோஸ் நிற உருண்டையில் ஒன்றை எடுத்து, அதேபோல் தேய்த்து வெள்ளை பூரியின் மேல் வைத்து, மீண்டும் அதன் மேல் வெள்ளை நிற பூரியை வைக்கவும். இப்படி மூன்று பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அரிசி மாவுக் கலவையை மத்தியில் தடவி, பாய்போல் சுருட்டவும். அதை வட்டமாகத் துண்டுகள் போட்டு, சிறு பூரிகளாக இட்டு, பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் தோய்த்து எடுக்கவும்.

புரோட்டீன் லட்டு

தேவையானவை:

சிறிதாக உடைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா, வால் நட்ஸ் - தலா 10 பேரீச்சை, திராட்சை, அத்திப்பழம், மக்னா (பதப்படுத்திய தாமரை விதை) - தலா 10. கிர்ணி, வெள்ளரி விதைகள் - தலா 1 டீஸ்பூன்
நெய் - 1/2 கப்
பட்டைத்தூள் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 250 கிராம்.

செய்முறை:

நட்ஸ், விதைகள் எல்லாவற்றையும் வறுத்து, சிறியதாக உடைத்துக்கொள்ளவும்.

டிரைஃப்ரூட்ஸை பொடித்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் பட்டைத் தூளுடன் கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அரை கப் தண்ணீர்விட்டு பாகு காய்ச்சவும். பாகு வழவழப்பாக தேன் மாதிரி வரும்போது கலந்து வைத்ததை பாகுடன் கலக்கவும். சிறிது ஆறியதும், சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கலர்ஃபுல் டிரைஃப்ரூட்ஸ் - நட்ஸ் பூந்தி

தேவையானவை:

மைதா மாவு - 1 கப்
வறுத்த உளுந்து மாவு, அரிசி மாவு - 1/2 கப்
ஏதேனும் ஒரு எசென்ஸ் - சில துளிகள்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு.

செய்முறை:

மைதா, உளுந்து மாவு, அரிசி மாவு, சமையல் சோடா சேர்த்து, தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு, ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கவும். விருப்பமான எசென்ஸ், ஏலக்காய் தூள் சேர்க்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, மிதமான சூட்டில் பூந்திக்கரண்டியில் மாவை ஊற்றி, பொரிந்து மேலே வந்ததும் வடித்து எடுத்து, சர்க்கரைப் பாகில் போட்டு அமிழ்த்தவும். பிறகு, இதை நன்றாகக் கிளறி எடுத்து, வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிடவும். அப்போதுதான் மொறு மொறுப்பாக இருக்கும். அதில் குங்குமப்பூ பொடித்து சேர்க்கவும். டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸை நெய்யில் வறுத்து மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

சன்னா தால் ஸ்வீட்ஸ்

தேவையானவை:

கடலைப்பருப்பு - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
இனிப்பு கோவா - 1/2 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
பாதாம் சீவியது - தேவைக்கு
பிஸ்தா - சிறிதளவு
நெய் - 1 கப்
முந்திரி உடைத்தது - 1/2 கப்
உலர்ந்த திராட்சை - 1/4 கப்.

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு கப் பாலில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதனை கரகரப்பாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து, கடலைக் கலவையைக் கொட்டி, கைபடாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறக் கிளற வாசனையில் வீடே மணக்கும். நன்றாகச் சிவந்து வரும்போது, கோவா சேர்க்கவும். கைபடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு, மீதமிருக்கும் பாலைச் சேர்க்கவும். பால் சேர்க்கும்போது பொங்கும். கவனமாகக் கிளறவும். இது சுருண்டு வரும்போது வறுத்த நட்ஸையும் திராட்சையையும் ஏலக்காய் தூளையும் சேர்த்து, தட்டில் கொட்டி, பாதாம் பிஸ்தா, முந்திரியைத் தூவி, ஆறியதும் துண்டு போட்டுப் பரிமாறலாம்.

தொகுப்பு: ஆர்.வைதேகி