Published:Updated:

வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?
வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?

வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?

பிரீமியம் ஸ்டோரி

ம்மா, அம்மாச்சி என ஆரம்பித்து பல தலைமுறைகளின் சமையல்களை, அவர்கள் அதில் புகுத்திய ஆரோக்கியத்தை படிப்படியாக இழந்துவருகிறோம். அவற்றில் ஒன்றான மத்தால் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த நுட்பத்தையும் கூடதான். ஆனாலும் இன்னும் சில இடங்களில் பாரம்பர்யத்தை மறக்காமல் சுத்தமான வெண்ணெயை வீட்டிலேயே கடைந்து எடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஈரோட்டைச் சேர்ந்த குடும்பத்தலைவி ஈஸ்வரி வீட்டிலேயே வெண்ணெய் எடுப்பவர். ஒரு காலை வேளையில் அவர் வீட்டுக்கு விசிட் அடித்தோம். மண் பானையில் நிறைந்திருந்த தயிரை மத்துக்கயிற்றால் நுரை பொங்கப்பொங்க... சர்ர்ர்..சர்ர்ர் என்று கடைந்து கொண்டிருந்தார் ஈஸ்வரி.

வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?

‘‘எனக்கு நெனைவு தெரிஞ்ச நாள் முதலா எங்க தொழுவத்துல நாட்டுப் பசு மாடு இருக்கும்ங்க. அந்தக்காலத்துல நேரடி பால் விற்பனைங்கிறது எல்லாம் கிடையாதுங்க. ஊருல மாடு, கன்னு இல்லாதவங்க வீட்டு குழந்தைகளுக்குக் கொடுத்தது போக கறந்த பால் எல்லாத்தையும் பானையில ஊத்தி காயவெச்சு பொறை (உறை ஊற்றுதல்) போட்டு வைப்போம்.

முந்தின நாள் ராத்திரியில பொறை போட்டு வெச்சா, காலையில கெட்டித் தயிரா அது மாறியிருக்கும். அதுல வீட்டுக்கும்... அடுத்த நாள் பொறைக்கு (உறை ஊற்ற) தேவையான தயிரை தனியா எடுத்து வெச்சுடுவோம்.

அப்புறமா தயிர் பானைய வீட்டுல உள்ள பெரிய தூண் பக்கத்துல வெச்சு, அந்த தூண்ல மத்தை கட்டி, தயிரைக் கடைந்தெடுப்போம். தொடர்ச்சியா கடையுறப்ப, அப்படியே வெண்ணெய் ஓரங்கள்ல சுத்தி பொங்கி நிக்கும். அதை அப்படியே கையில அள்ளினா பஞ்சு மாதிரி வரும். அப்படி கெடைக்கிற வெண்ணெயை தனியா உருட்டி எடுத்து உறிப்பானையில் வெச்சு சேமிப்போம்.

வெண்ணெய் எப்படிக் கிடைக்கிறது?

‘மீதமாக கிடைக்கிற மோரை அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கு கொடுத்திடுவோம். உறிப்பானையில சேர்த்து வெச்ச வெண்ணெய வாரம் ஒரு தடவை மொத்தமா வித்திடுவோம். உள்ளூர் வாரச்சந்தையில வெண்ணெய் வியாபாரிங்க வெண்ணெய் கொள்முதல் செய்ய, மரத்தடியில டின் வெச்சு உட்கார்ந்திருப்பாங்க.

அந்தக் காலத்தில் முக்கால்வாசி பேர் வீட்டில் மாடுகள் இருக்கும். அதனால் பால், தயிரை விட, வெண்ணெய் கடைந்து சந்தையில் விற்பதில்தான் குடும்ப பெண்களின் சிறுவாட்டு காசு பெருகும். சுத்தமான வெண்ணெய்னு கண்டுபிடிக்க அதை உருக்குறப்ப வாசம் சும்மா மணக்கும். எருமை வெண்ணெய் சுத்தமான வெள்ளை நிறத்திலேயும், பசும்பால்ல இருந்து கடைஞ்செடுக்கிற வெண்ணெய் மஞ்சள் நிறத்திலேயும் கெடைக்கும். வாரத்துல ஒருநாள் நாமளே சுத்தமான வெண்ணெய வீட்டுல இருந்தே எடுக்க முடியும்” என்றபடியே தயிரை கடைவதில் மும்மரமாகிறார் ஈஸ்வரி

- ஜி.பழனிச்சாமி, படம்: கே.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு