Published:Updated:

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

Published:Updated:
ஸ்நாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்நாக்ஸ்

* சாக்லேட் பால்ஸ்
* மதுர் தட்டை
* நிம்கி
* இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு
* சோயா சங்க்ஸ் (Chunks) பக்கோடா
* பஃப்ஸ்
* கேழ்வரகு குக்கீஸ்
* கல்கல்ஸ்
* சால்ட் காரா
* குபூஸ் பூரி

ஸ்நாக்ஸ்

னி சூழ ஆரம்பிக்கும் இந்த மாலை வேளைகளில், சுடச் சுடச் சாப்பிட கரகர மொறுமொறு, இனிப்பு, கார ஸ்நாக்ஸ் ரெசிப்பிகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த சசி மதன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாக்லெட் பால்ஸ்

தேவையானவை:
 பொடித்த சர்க்கரை - அரை கப்
 வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 கோகோ பவுடர் - 3 டீஸ்பூன்
 பால் பவுடர் - அரை கப்
 பால் - ஒரு டீஸ்பூன்
 சீரக மிட்டாய் அல்லது ஜெம்ஸ் மிட்டாய் - அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)
 சாக்கோ சிப் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)

ஸ்நாக்ஸ்

செய்முறை:
பால் தவிர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். அதனுடன் பால் கலந்து உருண்டைகளாக உருட்டவும். சீரக மிட்டாய் அல்லது ஜெம்ஸ் மிட்டாய் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:
*  பால் பவுடர் கலந்ததும் மாவு ஈரப்பதத்துடன் இருந்தால், அதாவது உருட்டும் பக்குவத்தில் இருந்தால் பால் சேர்க்கத் தேவையில்லை.
*   உருண்டை பிடிக்கும் போது உள்ளே ஒரு சாக்கோ சிப் வைத்தும் உருண்டை பிடிக்கலாம்.

மதுர் தட்டை

தேவையானவை:
 வறுத்த ரவை, வறுத்த மைதா - தலா ஒரு கப்
 அரிசி மாவு - ஒரு கப்
 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத்
தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

ஸ்நாக்ஸ்

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். சிறிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து, சின்ன தட்டையாக தட்டவும். மீதமிருக்கும் இருக்கும் மாவு முழுவதையும் தட்டை வடிவத்துக்கு தட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், தட்டைகளைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சில்லி சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு:
*  மெல்லியதாகத் தட்டினால் நன்றாக, கரகரப்பாக இருக்கும்.
*  ஒரு மாதம் வரை கெடாது.

நிம்கி

தேவையானவை:
 மைதா மாவு - 2 கப்
 நெய் - கால் கப்
 ஓமம் - ஒரு டீஸ்பூன்
 நெய், மைதா - தலா ஒரு டேபிள்ஸ்பூன் (மேலே தடவ)
 சாட் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

ஸ்நாக்ஸ்

செய்முறை:
தலா ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு மற்றும் நெய்யை ஒரு சிறிய கிண்ணத்தில் குழைத்து வைக்கவும். வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில், மைதா மாவு, நெய், உப்பு, ஓமம் ஆகியவற்றை கலந்து தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து, அதன் மேல் குழைத்து வைத்த மைதா மாவு - நெய்க் கலவையை பூசவும். பிறகு, பாய் போல உருட்டி துண்டுகள் போடவும்.

துண்டுகளாக்கியதை மீண்டும் உருட்டி சிறு சிறு பூரிகளாக தேய்த்து சாட் மசாலாத்தூளை தூவி முக்கோண வடிவத்தில் மடித்து வைக்ககவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், முக்கோண நிம்கிகளை சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:
*  நிம்கி உப்பாமல் இருக்க மேலே ஃபோர்க்கால் ஓரிரு இடங்களில் துளைகள் போட்டு பின்பு பொரிக்கவும்.
*  இதை மாலையில் டீ, ஸ்வீட் சாஸ் அல்லது கொத்தமல்லி சாஸுடன் பரிமாறலாம்.

இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு

தேவையானவை:
 கொப்பரை தேங்காய்த் துருவல் - ஒரு கப்
 பால் பவுடர் - ஒரு கப்
 பொடித்த சர்க்கரை - முக்கால் கப்
 பால் - 6 டீஸ்பூன்
 பாதாம் (அ) முந்திரி - அலங்கரிக்க

ஸ்நாக்ஸ்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கொப்பரை தேங்காய்த் துருவல், பால் பவுடர், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இத்துடன் சிறிது சிறிதாக பால் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, பாதாம் அல்லது முந்திரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:
தேங்காய்த் துருவலுக்குப் பதில் கடைகளில் கிடைக்கும் டெஸிகேடட் கோகனட் தூளும் பயன்படுத்தலாம்.

சோயா சங்க்ஸ் (Chunks) பக்கோடா

தேவையானவை:
 சோயா சங்க்ஸ் - ஒரு கப்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
 அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
 ஓமம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
 பெரிய வெங்காய விழுது - 2 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 தண்ணீர் - சிறிதளவு

ஸ்நாக்ஸ்

செய்முறை:
சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் ஊறவைத்துப் பிழிந்து எடுக்கவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய், தண்ணீர் தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும். கலவை கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கலந்துவிடவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்து எண்ணெயில் சேர்த்து நன்கு வேகவிட்டுப் பொரித்தெடுக்கவும்.

பஃப்ஸ்

தேவையானவை:
 மைதா மாவு - ஒரு கப்
 வனஸ்பதி - 60 கிராம் (மேலே தடவ)
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
 மைதாவுடன் சேர்க்க வனஸ்பதி - ஒரு டேபிள்ஸ்பூன்
 காய்ச்சாத பால் (அ) முட்டையின் வெள்ளைக் கரு - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

ஸ்நாக்ஸ்

செய்முறை:
மைதா மாவுடன் உப்பு, சர்க்கரை, வனஸ்பதி சேர்த்து பிரெட் தூள் பதத்துக்கு கலக்கி வைக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தளர்வாக பிசையவும். 30 கிராம் வனஸ்பதியை, பிசைந்த மாவின் மீது முழுவதும் தடவி, ஃப்ரிட்ஜில் 10-15 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு, மாவை எடுத்து மீண்டும் தேய்த்து, மீதமுள்ள 30 கிராம் வனஸ்பதியை மாவின் மேல் முழுவதும் தடவி சிறு சிறு செவ்வகங்களாகக் கட் செய்யவும். இனி செவ்வகத்தின் நடுவே காய்கறிக் கலவையை (செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது) வைத்து மூடி, மேலே பால் (அ) முட்டையின் வெள்ளைக் கருவை தொட்டு தடவவும். பிறகு, மைக்ரோவேவ் அவனில் 180 டிகிரி செல்சியஸ் சூட்டில் 10 -15 நிமிடம் ‘பேக்’ செய்து எடுக்கவும்.

ஸ்டஃபிங்குக்கு...

தேவையானவை:
 கேரட் - ஒன்று
 பெரிய வெங்காயம் - ஒன்று
 முட்டைகோஸ் - 25 கிராம்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:
காய்கறிகளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம், கேரட், முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.

குறிப்பு:
பஃப்ஸ் வெந்ததும் ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்து, மறுசூடு செய்து இரண்டு நாட்கள் வரை சாப்பிடலாம்.

கேழ்வரகு குக்கீஸ்

தேவையானவை:
 கேழ்வரகு மாவு - முக்கால் கப்
 கோதுமை மாவு - அரை கப்
 கொப்பரைத் தேங்காய்த் துருவல் - முக்கால் கப்
 வெண்ணெய் - 150 கிராம்
 பொடித்த சர்க்கரை - 150 கிராம்
 வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
 முட்டை - ஒன்று

ஸ்நாக்ஸ்

செய்முறை:
ஒரு பவுலில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, கொப்பரைத் தேங்காய்த் துருவல், பொடித்த சர்க்கரை ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்துவைக்கவும். சர்க்கரை மற்றும் வெண்ணெயை ஒரு பவுலில் ஒன்றாகச் சேர்த்து நுரைக்க அடித்து, அதனுடன் முட்டை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். இதை, கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக சேர்த்துப் பிசையவும். பிறகு கால் இஞ்ச் உயரத்துக்கு மாவை திரட்டி, பிஸ்கட் கட்டரால் மாவை துண்டுகளாக்கி கொள்ளவும். மைக்ரோவேவ் அவன் டிரேயில் பிஸ்கட்டுகளை வைத்து 180 டிகிரி செல்சியஸ் சூட்டில் 10-15 நிமிடங்கள் ‘பேக்’ செய்து எடுக்கவும்.

குறிப்பு:
குழந்தைகளை கால்சியம் நிறைந்த கேழ்வரகை சாப்பிட வைப்பது கடினமான காரியம். அதுவே பிஸ்கட் ஆகச் செய்து கொடுக்கும்போது விரும்பிச் சாப்பிடுவார்கள்.

கல்கல்ஸ்

தேவையானவை:
 மைதா மாவு - ஒரு கப்
 ரவை - அரை கப்
 பொடித்த சர்க்கரை - அரை கப்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசன்ஸ் - சிறிது
 காய்ச்சிய பால் - தேவையான அளவு (பிசைவதற்கு)

ஸ்நாக்ஸ்

செய்முறை:
மைதா மாவு, ரவை, பொடித்த சர்க்கரை, நெய், வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இத்துடன் காய்ச்சிய பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். சிறிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து, சீப்புக் கட்டையில் வைத்து தேய்த்து உருட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீப்பு சீடைகளை அதில் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு:
பாலுக்கு பதில் தேங்காய்ப்பாலும் பயன்படுத்தலாம். சீப்பு சீடை செய்யும் கட்டை இல்லாதவர்கள், புதிய சீப்பு ஒன்றை வாங்கி அதில் மாவை வைத்து தேய்த்தால் சீப்பு சீடை சுருண்டு விழும்.

சால்ட் காரா

தேவையானவை:
 மைதா மாவு - ஒரு கப்
 வனஸ்பதி - 60 கிராம்
(மேலே தடவ) + 1 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை, உப்பு - தலா ஒரு டீஸ்பூன்

ஸ்நாக்ஸ்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் வனஸ்பதி சேர்த்து பிரெட் தூள் பதத்துக்கு வரும் வரை கலக்கவும். பிறகு, சிறிது சிறி தாக மாவில் தண்ணீர் சேர்த்து தளரப் பிசையவும். பிசைந்த மாவை ஒரே வட்டமாக திரட்டி, 30 கிராம் வனஸ்பதியை மாவின் எல்லா இடங்களிலும் படுமாறு பூசி, மடித்து ஃபிரிட்ஜில் 10-15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும். பிறகு, மீண்டும் மாவை பிசைந்து மீதமிருக்கும் 30 கிராம் வனஸ்பதியை மாவில் நன்கு தடவவும். மீண்டும் 15 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து ஊறவிட்டு எடுக்கவும். மறுபடியும் மாவை நன்கு பிசைந்து, உருட்டி தேய்த்து, நீள, நீள துண்டுளாக கட் செய்து, அவற்றை மீண்டும் 2 இஞ்ச் துண்டுளாகக கட் செய்துகொள்ளவும். பிறகு, பேக்கிங் ட்ரேயில் அடுக்கி 180 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் 10 நிமிடங்கள் ‘பேக்’ செய்து எடுத்து சாஸுடன் பரிமாறவும்.

குறிப்பு:
மாவை வட்டமாக திரட்டியதும் சிறிது மிளகாய்த்தூள் தூவி பிறகு மேலே சொன்னது போல துண்டுகள் போட்டு ‘பேக்’ செய்து எடுத்தால் அது சில்லி காரா. அதுவே மாவில் சர்க்கரை கலந்து கட் செய்து ‘பேக்’ செய்தால் அது ஸ்வீட் காரா.

குபூஸ் பூரி

தேவையானவை:
 மைதா மாவு - ஒரு கப்
 தயிர் - கால் கப்
 பொடித்த சர்க்கரை - கால் கப்
 ஆப்ப சோடா - கால் டீஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

ஸ்நாக்ஸ்

செய்முறை:
தயிரில் பொடித்த சர்க்கரை, உப்பு, ஆப்ப சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, கலந்து வைத்த தயிர் கலவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். பிறகு ஒரு ஈரத்துணியால் மாவை மூடி 6 மணி நேரம் ஊறவிட்டு, சிறு சிறு பூரிகளாகத் தேய்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பூரிகளைப் பொரித்தெடுக்கவும். உப்பி இருப்பதால் இதற்கு குபூஸ் என்று பெயர்.

குறிப்பு:
*  பிசைந்த மாவை இரண்டு, மூன்று நாட்கள்வரை கூட ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். சர்க்கரை சேர்த்திருப்பதால் கெடாது.
*  லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும் பூரியை, ஜாமுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

- படங்கள்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism