Published:Updated:

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3

முடக்கறுத்தான் தோசை!

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3

முடக்கறுத்தான் தோசை!

Published:Updated:
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3
பிரீமியம் ஸ்டோரி
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3

மிழர்களின் உணவுமுறை மட்டுமின்றி, மருத்துவமுறையும் இயற்கையை சார்ந்தே இருந்திருக்கிறது. தாவரங்களின் தன்மை அறிந்து, பகுத்து, எந்நோய்க்கு, எத்தாவரம் என்று இலக்கணம் வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் மூதாதையர். பிற மருத்துவ முறைகளால், “தீர்க்கவே முடியாது” என்று கைவிடப்படும் நோய்களுக்குக்கூட நம் மூதாதையர் உருவாக்கிய சித்த வைத்திய முறையில் சிகிச்சைகள் இருக்கின்றன. டெங்கு, பன்றிக்காய்ச்சல் என கொள்ளை நோய்கள் பரவும்போது, அலோபதி மருத்துவர்களே கை காண்பித்தது, நிலவேம்பையும் பப்பாளி இலையையும்தான். 

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3

நோயை மட்டுமின்றி நோய்க்கான காரணிகளை இலக்கு வைத்து, வாதம், பித்தம், கபம் என அனைத்து நோய்களையும் மூன்றாக பிரித்து, கண் பார்த்து, நாடி பார்த்து, சூடு பார்த்து சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவம், உலகின் மேன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

 சித்த வைத்தியத்தில் உணவுமுறை ஒரு பிரதான அங்கம். “இந்த நோய்க்கு இந்த உணவு”, “இந்த மருந்துக்கு இந்த உணவு” என உணவையும் சிகிச்சை முறைகளில் ஒன்றாக வைத்திருக்கிறது சித்தம். பல நோய்களுக்கு உணவே மருந்தாகவும் இருப்பதுண்டு. “நல்ல சளி... தும்மல் ஆளை வதைக்கிறது” என்றால், “நொச்சியை பறித்து கொதிக்க வைத்து ஆவி பிடி... தூதுவளையை ரசம்வைத்துக் குடி” என்பார்கள். “நெஞ்சுச்சளி... இருமல் உலுக்குகிறது” என்றால், “கல்யாண முருங்கை இலையை அரைத்து அரிசி மாவோடு சேர்த்து ரொட்டி சுட்டுச் சாப்பிடு” என்பார்கள். காமாலைக்கு கீழாநெல்லி... சர்க்கரைக்கு கசப்புக் குறிஞ்சா என மனிதர்கள் வாழும் இடங்களிலேயே இயற்கை, மருந்துகளையும் தாவரங்கள் வடிவில் வளர்த்து வைத்திருக்கிறது.

மூட்டுவலி, முழங்கால் பிடித்துக் கொள்கிறது என்று அங்கலாய்ப்பவர்களுக்கு என்றே கிராமங்களில் விளைந்து கிடக்கிறது முடக்கறுத்தான் செடி. இதை முடக்கத்தான், இந்திரவல்லி, ஊழிஞை செடி என்று பகுதிக்கொரு பெயரில் அழைப்பார்கள். ஏறுகொடி வகையைச் சேர்ந்த முடக்கறுத்தான், வேலிகளில் தானாக விளைந்து கிடக்கும். எந்த மருந்துக்கும் முடங்காத மூட்டுவலி இந்த மருந்தைக் கண்டால் சொல்லாமல் ஓடிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3

“முடக்கறுத்தான் செடி, இயற்கை மனிதகுலத்துக்கு அளித்த கொடை. எந்தவித முடக்கையும் அறுக்கும் வல்லமை கொண்டதால் “முடக்கறுத்தான்” என்ற பெயர் இந்தச் செடிக்கு வந்தது. வாதம், பித்தம், கபம் என உடலில் வரும் நோய்களுக்கு மூன்று காரணிகள் உண்டு. வாயு உடம்பில் அதிகரிப்பதால் வருவது வாதம். மூட்டுகள் இலகுவாக இயங்குவதற்கு, ‘சைனோவியல் ப்ளூயிட் (synovial fluid)’ என்ற பசையை உடம்பு உற்பத்தி செய்யும். உடம்பில் வாயு அதிகமாகும் நிலையில், அந்த பசை வறண்டு போகும். அதனால் மூட்டுகளின் இயக்கம் கடினமாகி விடும். அதனால் இயக்கம் முடங்குவதோடு வலியும் அதிகமாகி விடும். முடக்கறுத்தான் கீரையில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், மூட்டுகளில் பசைத்தன்மையை அதிகரிக்கும். வாரம் ஒருமுறை இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, வாதம் நீங்குவதோடு வலியும் நீங்கிவிடும். பெண்கள் கண்டிப்பாக இந்தக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கீரை மிகச்சிறந்த மலம் இளக்கியும் கூட...” என்கிறார் சித்த மருத்துவ நிபுணர் தெ.வேலாயுதம்.

 “விவசாய வேலை தீவிரமாக இருக்கும் நாட்களில் உடல் நோவுக்காக, மக்கள் முடக்கறுத்தான் கீரையைப் பறித்து வந்து ரொட்டி தட்டி சாப்பிடுவார்கள். கடும் உழைப்பால் ஏற்படும் உடல்வலி மட்டுமின்றி உள்புற உறுப்புகள் தேய்மானத்தால் வரும் நோவுகளும் நீங்கி புத்துணர்வு உண்டாகும். மறுநாள் வழக்கம்போலவே உற்சாகமாக வயலில் இறங்குவார்கள்.

முடக்கறுத்தான் கீரையை லேசாக எண்ணெய் விட்டு வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிடலாம். இந்த கீரையை அரைத்துப் போட்டு ரசம் வைக்கலாம். அதிகம் கொதிக்க வைக்கக்கூடாது. காபி, டீக்குப் பதில் ஒருநாளைக்கு இருவேளை இதைக் குடிக்கலாம். சாறாக எடுத்துக் குடிப்பது மிகவும் நல்லது. இப்போது மூட்டுவலி பிரச்னை வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் வருவதால், பெரும்பாலான மக்கள் முடக்கறுத்தான் கீரையை விரும்பி வாங்குகிறார்கள். நகர்ப்புறங்களிலும் முடக்கறுத்தான் கீரை விற்பனைக்குக் கிடைக்கிறது.

இப்போது நகர்ப்புறங்களிலேயே முடக்கறுத்தான் தோசை கிடைக்கிறது. மருந்தென்ற வாசனை இல்லாமல் ருசியாக இருக்கும்...” என்கிறார் பாரம்பர்ய சமையலில் பெயர் பெற்றவரும் ஸ்ரீஅக்ஷ்யம் உணவகத்தின் ஃசெப்புமான மார்க்.

- பயணம் தொடரும்...

- வெ.நீலகண்டன், படங்கள்: ஆ.முத்துக்குமார்

முடக்கறுத்தான் தோசை செய்வது எப்படி? ரெசிப்பி தருகிறார் ஃசெப் மார்க்.

முடக்கறுத்தான் தோசை

தேவையானவை:


 புழுங்கல் அரிசி - 1 கப்
 உளுந்து - அரை கப்
 வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - போதிய அளவு
 சின்ன வெங்காயம் - 10
 நல்லெண்ணெய் - 100 மிலி
 முடக்கறுத்தான் - 2 கப்

பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3

செய்முறை:      
  
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பிறகு, அதில் சீரகத்தைச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். முடக்கறுத்தான் கீரையை நன்கு அலசி அரைத்து, கரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்த மாவில் கலக்கவும். பிறகு, மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்து, மிதமான தீயில் தோசையாக வார்த்து, நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான முடக்கறுத்தான் தோசை தயார்.

முடக்கறுத்தான் தோசைக்கு தகுந்த சைடிஷ் எது?

“தக்காளி சட்னி மிகவும் சுவையான சைடிஷ்.  தேங்காய் சட்னி,  சாம்பாரும் ஓ.கே.தான். கிராமப்புறங்களில் இதன் மருத்துவ மகத்துவத்தை இன்னும் மேம்படுத்த ஒரு யுத்தியை கையாள்வார்கள். வல்லாரை கீரையைப் பறித்து, கொஞ்சம் தேங்காய், பருப்பு சேர்த்து அரைத்து வைப்பார்கள். சுவைக்கு சுவை... மருந்துக்கு மருந்து...! என்கிறார் மார்க். பிறகென்ன..? கிளம்புங்கள் முடக்கறுத்தானும், வல்லாரையும் வாங்க..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism