* தக்காளி அடை
* கொங்கு தக்காளிக் குழம்பு
* டொமேட்டோ ஜாம்
* தக்காளி ஊறுகாய்
* தக்காளி ரசம்
* செட்டிநாட்டு டொமேட்டோ சூப்
* டொமேட்டோ புலாவ்
* தக்காளி - பூண்டு சட்னி
* டொமேட்டோ சிக்கன் ஃப்ரை
* டொமேட்டோ - ஆலு கிரேவி
* ஈஸி தக்காளி குருமா
* தக்காளி கதம்பச் சட்னி

கரூரைச் சேர்ந்த சரஸ்வதி அசோகன் தக்காளி ஸ்பெஷலாக ஜாம், ஊறுகாய், சூப், சட்னி, குழம்பு, கிரேவி, குருமா, அடை, புலாவ் எனச் சமைத்து ருசிக்க ரெசிப்பி வழங்குகிறார். தக்காளி சேர்த்து அசைவத்தின் ருசியைக் கூட்டவும் வழி சொல்கிறார்.

தக்காளி அடை

தேவையானவை:
பெங்களூரு தக்காளி - 4
புழுங்கலரிசி - 200 கிராம்
பச்சரிசி, கடலைப்பருப்பு,
துவரம்பருப்பு - தலா 100 கிராம்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
மல்லித்தழை - கைப்பிடியளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் பொடியாக
நறுக்கியது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
புழுங்கலரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு எடுத்து தோல் உரிக்கவும். அரிசி பருப்புக் கலவையில் உப்பு, காய்ந்த மிளகாய் பூண்டு, இஞ்சி, சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். மாவுடன் மல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து அடைமாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவைச் சற்று கனமான அடைகளாக ஊற்றி, இருபுறமும் திருப்பி விட்டு, எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:
3 கரண்டி அடை மாவில் ஒரு முட்டை விகிதம் கலந்து ஊற்றினால் முட்டை தக்காளி அடை ரெடி!

கொங்கு தக்காளிக் குழம்பு

தேவையானவை:
தக்காளி - 6
தேங்காய் - ஒரு மூடி
சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி அளவு
மல்லித்தூள், கடுகு,
உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
பட்டை - சிறிது
பூண்டு - 6 பல்
சோம்பு - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், உப்பு,
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வெங்காயத்தைத் தோலுரிக்கவும். தேங்காயைத் துருவி வைக்கவும். 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பாதி வெங்காயம், 4 தக்காளியை முழுதாகப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்த்துருவல், மல்லித்தூள், மிளகாய்தூள், பட்டை, சோம்பு போட்டுப் புரட்டி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீதி இருக்கும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பூண்டை வட்டமாக நறுக்கவும். மீதித் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த கலவை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் கமகம கொங்கு தக்காளி குழம்பு ரெடி.

குறிப்பு:
இது சாதத்துக்கும் இட்லி தோசைக்கும் சரியான ஜோடி!

டொமேட்டோ ஜாம்

தேவையானவை:
பெங்களூரு தக்காளி - ஒரு கிலோ
சர்க்கரை - 600 கிராம்
மேரி பிஸ்கட் - 4
பேரீச்சம்பழம் - 7
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய், மைதா - தலா 5 டீஸ்பூன்

செய்முறை:
பேரீச்சம்பழங்களை சிறுசிறு துண்டுகளாக்கவும். தண்ணீரில் மேரி பிஸ்கட், மைதாவை கரைத்து ஊற வைக்கவும். நன்கு சிவப்பாக இருக்கும் பெங்களூரு தக்காளியை மூன்று நிமிடம் வெந்நீரில் கொதிக்கவிட்டு இறக்கவும், ஆறிய பிறகு தோல் உரிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்கு கடைந்து விதைகள் இல்லாமல் தண்ணீரைத் தனியே வடிகட்டி வைக்கவும். சதைப் பகுதியை மட்டும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதையும் வடிகட்டிய தண்ணீரையும் ஒன்றாகக் கலக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி சர்க்கரை சேர்த்து, 20 நிமிடம் தீயை வேகமாக வைத்துக் கொதிக்க விடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். இப்போது பிஸ்கட் கலவையை ஊற்றிக் கிளறவும். பேரீச்சம்பழத் துண்டுகள், 2 டீஸ்பூன் நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பைக் குறைத்து வைக்கவும். ஜாம் பதம் வரும் வரை கிளறவும். இறுதியாக மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
கொஞ்சம் கொழ கொழப்பாக இருக்கும்போதே இறக்கவும். ஆறியதும் கெட்டிப்படும். (பெங்களூரு தக்காளி நல்ல சிகப்பு நிறமாக, கெட்டியாகப் பார்த்து வாங்கினால் நல்லது.)

தக்காளி ஊறுகாய்

தேவையானவை:
தக்காளி - ஒரு கிலோ
நல்லெண்ணெய் - 150 மிலி
புளி - 100 கிராம்
கடுகு, வெந்தயப்பொடி - தலா 2 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு, மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:
தக்காளி, புளியைப் பொடியாக நறுக்கவும். பின்பு ஒரு கனமான வாணலியில் பாதியளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து தக்காளி, புளி சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்துக் கலக்கவும். சிறு தீயில் மூடி போடவும். இடையிடையே மூடியைத்திறந்து கிளறி விடவும். கலவை நன்கு சுருள வதங்கியதும் மூடியைத்திறந்து உப்பு, மீதமுள்ள எண்ணெய், வெல்லம் சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

குறிப்பு:
10 நாட்கள் வரை வெளியில் வைத்திருக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் 2 மாதங்கள் வரை தாங்கும்.

தக்காளி ரசம்

தேவையானவை:
தக்காளி - 4
ரசப்பொடி - ஒன்றரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
தக்காளியைச் சிறிது நேரம் வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும். அதனுடன் ரசப்பொடி மல்லித்தழை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து தக்காளி கரைத்த கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: நாட்டு தக்காளியாக இருந்தால் வெந்நீரில் போடாமலேயே கரைத்து வைக்கலாம்.

ரசப்பொடி

தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு
- தலா ஒரு கப்
சீரகம் - முக்கால் கப்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
தனியா - 2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய் - 2 கைப்பிடி
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
எல்லாவற்றையும் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொண்டு பருப்பு ரசம், லெமன் ரசம், தக்காளி ரசம் போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:
ஐந்தே நிமிடங்களில் ரசம் செய்ய இந்தப் பொடி உதவியாக இருக்கும்!

செட்டிநாட்டு டொமேட்டோ சூப்

தேவையானவை:
தக்காளி - 4
வெங்காயம்,
பச்சை மிளகாய் - தலா ஒன்று
பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
அரிசி களைந்த தண்ணீர் - ஒரு கப்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை - சிறிதளவு
கிராம்பு - 2
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித்தழை, உப்பு - தேவைக்கு

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும் பாசிப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி அரிசி கழுவிய தண்ணீர், பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.

குறிப்பு:
இதைச் சூப்பாக தனியாகவும் எடுத்துக் கொள்ளலாம். சாதத்தோடு கலந்தும் சாப்பிடலாம்.

டொமேட்டோ புலாவ்

தேவையானவை:
பாசுமதி அரிசி - கால் கிலோ
பெங்களூரு தக்காளி - 4
குடமிளகாய் - ஒன்று
வெங்காயம் - 2
பூண்டு - 15 பல்
மல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள், சோயா சாஸ்,
இஞ்சி பூண்டு பேஸ்ட்
- தலா ஒரு டீஸ்பூன்
டொமேட்டோ சாஸ், நெய்
- 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும். குடமிளகாயை பட்டையாக நறுக்கவும். பாசுமதி அரிசியை உதிராக வேகவைக்கவும். சாதத்தின் மேலே ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ஆற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு பேஸ்ட், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். இதனுடன் டொமேடோ சாஸ், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, சோயா சாஸ் ஊற்றி இறக்கவும். இந்தக் கலவையுடன் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

குறிப்பு:
தேவையெனில் இந்த புலாவை மறுபடியும் சிறு தீயில் சூடாக்கிச் சாப்பிடலாம்.
* பாசுமதி அரிசியை ஐந்து நிமிடம் ஊற வைத்து, ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி, இரண்டு விசில் வரை வேகவிட்டால் போதும்.

தக்காளி - பூண்டு சட்னி

தேவையானவை:
தக்காளி - 5
பூண்டு - 5 பல்
காய்ந்த மிளகாய் - 7
நல்லெண்ணெய், கடுகு,
உளுத்தம் பருப்பு – தலா
ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
மிளகாயைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாயுடன் பூண்டு சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு தக்காளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கலவை, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கி இறக்கவும்.

குறிப்பு:
வெளியே வைத்திருந்தாலும் 5 நாட்கள் வரை கெடாது.

காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக மிளகாய்த்தூள் போட்டும் இந்தச் சட்னி தயாரிக்கலாம்.

இட்லி, தோசை, பணியாரத்துடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

டொமேட்டோ சிக்கன் ஃப்ரை

தேவையானவை:
சிக்கன் - அரை கிலோ
தக்காளி – 3
வெங்காயம் - 2
இஞ்சி – சிறிய துண்டு
பட்டை, கிராம்பு,
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மஞ்சள்தூள், கரம்
மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மராட்டி மொக்கு - ஒன்று
மல்லித்தழை, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:
சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கிச் சுத்தம் செய்யவும். தக்காளியைக் கழுவி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இஞ்சி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சிக்கன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் உப்பு, தக்காளி விழுது சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி, சிறிது நேரம் வேக விடவும். தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்துவரும்போது சுத்தம் செய்த மல்லித்தழை தூவி இறக்கவும்

குறிப்பு:
பிராய்லர் சிக்கனாக இருந்தால் சீக்கிரமாக வெந்து விடும். நாட்டுக் கோழியாக இருந்தால் சிறிது நேரம் எடுக்கும்.

டொமேட்டோ ஆலு கிரேவி

தேவையானவை:
வெங்காயம், தக்காளி – தலா 2
உருளைக்கிழங்கு - கால் கிலோ
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள், கரம்
மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், மல்லித்தழை,
உப்பு - தேவைக்கு.
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
முந்திரி - 4,
மிளகாய்த்தூள், கசகசா,
சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை:
உருளைக்கிழங்கை சதுரத்துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு தோல் உரிக்கவும். ஆறியபின் தக்காளியுடன் இஞ்சி, பூண்டு, முந்திரி, கசகசா, சோம்பு, சீரகம் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருளைத்துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், அரைத்த தக்காளிக் கலவை, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை நன்கு சுருள வதக்கவும். பொரித்த உருளைத்துண்டுகளை சேர்த்து மல்லித்தழை தூவி கிரேவி பதத்தில் இறக்கவும்.

ஈஸி தக்காளி குருமா

தேவையானவை:
தக்காளி, வெங்காயம் - 6
சோம்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
சாம்பார்பொடி, மிளகாய்த்தூள்
- அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

அரைக்க:
தேங்காய் - ஒரு மூடி
பட்டை – சிறிதளவு
கசகசா, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்

செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதித்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.

தக்காளி கதம்பச் சட்னி

தேவையானவை:
தக்காளி - 5
வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை, உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்
கடுகு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் உப்பு, தக்காளி பொட்டுக்கடலை, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

- படங்கள்: தே.தீட்ஷித்