* ரோஸ் மில்க்
* பால் சாதம்
* பால்பேடா (தூத்பேடா)
* திரட்டுப்பால்
* மில்க் லைனிங் உக்ரா
* பால் பர்ஃபி பால்ஸ்
* ரசகுல்லா
* மிக்ஸ்டு ஃபுரூட்
* பால் கேசரி
* பால் பாயசம்

பால் மணக்கும் சுவை உணவுகளை வீட்டிலேயே செய்யும் வழிமுறைகளை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார். அத்தனையும் கால்சியம் சத்து நிறைந்த கமகம ரெசிப்பி!

ரோஸ் மில்க்

தேவையானவை:
பால் - 500 மில்லி
சர்க்கரை - கால் கப்
ரோஸ் மில்க் எசன்ஸ் - சில துளிகள்
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப

செய்முறை:
பாலைக் காய்ச்சி ஆறவிடவும். பிறகு ரோஸ் மில்க் எசன்ஸ், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

பால் சாதம்

தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்
பால் - 6 கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு பின்ச்

செய்முறை:
குக்கரில் அரிசியுடன் நான்கு கப் பால் விட்டு மூன்று விசில் விட்டு இறக்கவும். பிறகு, அதனுடன் சர்க்கரை, உப்பு, காய்ச்சி ஆற வைத்த மீதமுள்ள பால் சேர்த்துக் கிளறவும். குங்குமப்பூ தூவி பரிமாறவும்.

பால்பேடா (தூத்பேடா)

தேவையானவை:
கெட்டியான பால் - ஒரு லிட்டர்
தோல் சீவிய பிஸ்தா - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பிஸ்தாவைப் பொடியாக நறுக்கவும். சிறிதளவு நீரில் கார்ன்ஃபிளாரை கரைக்கவும். பால் பாதியாகச் சுண்டியவுடன் கார்ன்ஃபிளாரை ஊற்றவும். பிறகு சர்க்கரை, வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியான உடன் கிளறி இறக்கவும். மத்தால் மசிக்கவும். ஆறிய பின் ஜாதிக்காய்த்தூள், பிஸ்தா சேர்த்து இறக்கவும். விரும்பிய வடிவத்தில் பேடா செய்து பரிமாறவும்.

திரட்டுப்பால்

தேவையானவை:
கெட்டியான பால் - ஒரு லிட்டர்
கருப்பட்டி (அ) வெல்லம் - அரை கப் (தூளாக்கவும்)
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி அடிப்பிடிக்காமல் சுண்டக் காய்ச்சவும். பிறகு, வெல்லத்தூள் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

மில்க் லைனிங் உக்ரா

தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்
மைதா - கால் கிலோ
லெமன் கலர் - ஃபுட்கலர் ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிப்பதற்கு
சர்க்கரை - ஒரு கப்
ஊறவைத்த பாதாம், பிஸ்தா,
முந்திரி - கால் கப்
ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள்
சேர்ந்து - ஒரு சிட்டிகை
தேன் - அலங்கரிக்க

செய்முறை:
பருப்பு வகைகளை ஊற வைத்து, மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பாலில் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், லெமன் கலர் சேர்த்துக் காய்ச்சவும். பால்பொங்கி வரும்போது சர்க்கரை சேர்த்துக் கிளறி கெட்டியாகக் காய்ச்சி இறக்கவும். மைதாவுடன் சிறிதளவு பால், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதமாகப் பிசையவும். பிறகு மெல்லிய சப்பாத்தியாக இடவும். அதன்மீது அரைத்த விழுதைத் தடவி, பாய்போலச் சுருட்டி துண்டுகள் போடவும். ஒவ்வொரு துண்டையும் கையில் வைத்து அழுத்தவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு, தயாரித்த மைதா துண்டுகளைப் போட்டு பொரித்தெடுக்கவும். ஆறியதும் பாலில் ஊற விடவும். அதன்மீது தேன் ஊற்றி பரிமாறவும்.

பால் பர்ஃபி பால்ஸ்

தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கெட்டி அவல் - அரை கப்
ஃபுட் கலர் - விருப்பமானது
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
கிராம்பு - அலங்கரிக்க

செய்முறை:
அவலை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீரை வடியவிட்டுப் பிழியவும். அடி கனமான பாத்திரத்தில் பாலுடன், தேங்காய்த்துருவல், அவல் சேர்த்துக் கிளறவும். வெந்ததும் சர்க்கரை, புட்கலர், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டையின் மீதும் கிராம்பு குத்தி அலங்கரித்துப் பரிமாறவும். அலங்கரித்துப் பரிமாறவும்.

ரசகுல்லா

தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்
எலுமிச்சைச்சாறு - 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்

செய்முறை:
பாலைக் காய்ச்சி, சூடாக இருக்கும்போதே எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். பால் திரிய ஆரம்பிக்கும். பிறகு சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டவும். தண்ணீர் வடிந்தபின் வடிகட்டியில் பனீர் தங்கும். நன்றாகப் பிழிந்து எடுத்து பனீரை மிருதுவாக வரும்வரை பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் இரண்டு கப் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். இதில் உருண்டைகளைப் போடவும். பிறகு சிறு தீயில் வைத்து வேகவிடவும். உருண்டை கொஞ்சம் பெரிதானதும் கீழே இறக்கவும். ஊறியபின் பரிமாறவும்.

மிக்ஸ்டு ஃபுரூட்

தேவையானவை:
ஆப்பிள், மாதுளை முத்துகள்,
பச்சை - கறுப்பு திராட்சை,
வாழைப்பழம் (அரிந்தது) - மொத்தம் சேர்த்து அரை கிலோ
சர்க்கரை - 100 கிராம்
பால் - அரை லிட்டர்
கஸ்டர்ட் பவுடர் - 100 கிராம்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பழக்கலவை, சர்க்கரை சேர்த்துப் பிசறவும். கஸ்டர்ட் பவுடரில் இரண்டு கப் தண்ணீர்விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் கஸ்டர்ட் கலவையைச் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். கஞ்சிப்பதமாக வந்ததும் இறக்கவும். காய்ச்சிய பாலுடன் கஸ்டர்ட் கலவை, பழக்கலவை சேர்த்துக் கலக்கவும். சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் பரிமாறலாம்

பால் கேசரி

தேவையானவை:
சேமியா, ரவை - தலா அரை கப்
பால் - 3 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 4
காய்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு பின்ச்

செய்முறை:
வாணலியில் நெய் சிறிதளவு விட்டு சேமியா, ரவையைத் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். பிறகு, அதே வாணலியில் மீதமுள்ள நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பிறகு சேமியா, ரவையைச் சேர்த்து வேக விடவும். இதனுடன் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். தண்ணீருக்குப் பதில் முழுக்க முழுக்க பால் பயன்படுத்துவதால் மிகுந்த சுவையுடன் இருக்கும்.

பால் பாயசம்

தேவையானவை:
பால் - 2 லிட்டர்
சாரைப் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு, நெய் -
தலா ஒரு டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை:
நெய்யில் முந்திரி, சாரைப் பருப்பை வறுக்கவும். பாஸ்மதி அரிசியை சாதமாக வடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை சுண்டக் காய்ச்சவும். பிறகு சர்க்கரை, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். முந்திரி, சாரைப்பருப்பு, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:
தண்ணீருக்குப் பதில் பால்விட்டு பாஸ்மதி அரிசியை வேக விடவும்.

- படங்கள்: பா.காளிமுத்து