சமையலறையில் பாத்திரங்களை வைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு மின்சாதனங்கள் ஆக்கிரமித்து விட்ட காலமிது. மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ், ரைஸ் குக்கர், காஃபிமேக்கர், டோஸ்டர் என மின்சாரத்துடன் தொடர்புடைய பொருட்களையே பெரும்பாலும் பயன்படுத்தப் பழகிவிட்டோம். அதே சமையலறையில் தண்ணீரையும் அதிகம் உபயோகப்படுத்துகிறோம். இந்நிலையில், சமையலறையில் மின்சார பாதிப்பில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள சில பாதுகாப்பு டிப்ஸ்கள் இங்கே...

மின் இணைப்பில் கவனம்!

வீட்டின் மின் இணைப்பு 3 ஃபேஸ் என்று சொல்லக்கூடிய மும்முனை இணைப்பாக இருப்பது நல்லது. மின் உபகரணங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு மின்சாரத்தை இழுக்கும் எனத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி சமமாக, 3 ஃபேஸ்களிலும் பகிர்ந்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மின்சாரம் திடீரென அதிகமாகப் பாயும் போதோ, ஷார்ட் சர்க்யூட் ஆகும்போதோ... தானாகவே ட்ரிப் ஆகக்கூடிய கருவி (ELCB) கண்டிப்பாக இருக்க வேண்டும். கண்டிப்பாக எர்த் கனெக்க்ஷன் இருக்க வேண்டும். இது, ஷாக் அடிப்பதில் இருந்து பாதுகாக்கும். ஸ்விட்சுகள், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும். முடிந்தவரை அடிக்கடி உபயோகிக்கும் சாதனங்களுக்குத் தனித்தனி பிளக் பாயிண்ட் இருந்தால், ஒன்றைப் பிடுங்கி இன்னொன்றைச் செருகும் அவஸ்தை இருக்காது. ரிஸ்க்கும் குறையும்.

ஈரமாவதைத் தவிர்க்கவும்!

சமையலறை மின்சாதனங்களைக் கையாளும்போது, கைகள் எப்போதும் ஈரமாக இருக்கக் கூடாது. குழாய் அருகில் ஒரு டவல் வைத்து அவ்வப்போது துடைத்துக் கொள்ளலாம். மின்சாதனங்களை இயக்கும்போது, ஒரு மிதியடி போட்டுக் கொள்வது நல்லது. அல்லது காலணிகள் அணிந்து கொள்ளலாம்.

மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றில் ஜாரை வெளியே எடுக்கும்போது, சுவரிலுள்ள ஸ்விட்சை அணைத்துவிட்டு எடுக்கவும். இண்டக்ஷன் ஸ்டவ்வில் திரவங்கள் பொங்கி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

கிரைண்டரில் எப்போதும் கைகளால் மாவைத் தள்ளி விடாமல், அதற்குரிய பிளாஸ்டிக் கத்தியை உபயோகிக்கவும். மின்சார உபகரணத்தைத் தயார் செய்வதற்கு முன்னால் அதிலுள்ள ஸ்விட்சும், சுவர் ஸ்விட்சும் ஆஃப் நிலையில் இருக்கிறதா என்பதை கவனிக்கவும். டோஸ்ட்டர், காஃபி மேக்கர் போன்ற சில சாதனங்களை சமையலறைக்கு வெளியே, சாப்பிடும் அறையில் பொருத்திக் கொள்ளலாம்.

தேவையான இடைவெளி!

மின் சாதனங்களை ஒன்றோடொன்று இடித்தபடி வைக்காமல்,அவற்றுக்கு இடையே போதிய இடை வெளிவிட்டு வைக்க வேண்டும். தினமும் இரவிலும், வெளியூர் செல்லும்போதும், எல்லா ஸ்விட்சுகளையும் ஆஃப் செய்திருக்கிறீர்களா என சரிபார்க்கவும். அதிக மின்சாரம் இழுக்கும் உபகரணங்களை ஒரே நேரத்தில் இயக்காமல், ஒன்றுக்குப் பிறகு மற்றொன்றை இயக்கவும். உதாரணமாக, மைக்ரோ வேவ் அவன், மிக்ஸி இரண் டையும் ஒரே சமயம் ஆன் செய்ய வேண்டாம்.

சமைக்கும் கலையை ஆனந்தமாகவும் பாதுகாப் பாகவும் செய்யுங்கள் தோழியரே!

- விஜயலட்சுமி ராமாமிர்தம்