பிரீமியம் ஸ்டோரி
உணவே மருந்து!

தேவையானவை:

* தனியா (கொத்தமல்லி) அரை கப்,

* ஓமம் 50 கிராம்,

* சுக்கு - மிளகு - திப்பிலி தலா 10 கிராம்,

* இஞ்சி சாறு அரை கப்,

* வெல்லம் அல்லது பனைவெல்லம் 100 கிராம்,

* நெய் கால் கப், ஏலக்காய் தூள் சிறிது.

செய்முறை:

தனியாவை அரை மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். அதன்பிறகு சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமத்தை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ளவும். பிறகு எல்லா பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து துருவின வெல்லத்தையும் கலந்து விடாமல் கிளறணும். இந்த கலவையுடன் நல்ல பிரவுன் நிறத்தில் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்தால் தீபாவளி லேகியம் ரெடி.

(தேவைப்பட்டால் சோம்பு, கசகசா, கிராம்பு, கருஞ்சீரகம், லவங்கப்பட்டை, சித்தரத்தை, கண்டதிப்பிலி சேர்த்துக்கொள்ளலாம்.)

உணவே மருந்து!

தேவையானவை:

* சுக்கு 50 கிராம்,

* மிளகு 100 கிராம்,

* தனியா (கொத்தமல்லி) 200 கிராம்

* ஏலக்காய் 10 எண்ணிக்கை.

* பனைவெல்லம் அல்லது தேவைக்கேற்ப சர்க்கரை.

செய்முறை:

சுக்கு, மிளகு, தனியா மற்றும் ஏலக்காயை தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இவற்றுடன் தேவைக்கேற்ப பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆவி பறக்க அருந்தலாம்.

(துளசி, தூதுவளை, நொச்சி, கற்பூரவல்லி இலைகளையும் பச்சையாக சேர்த்து கொதிக்கவைத்து அருந்தினால் அதன் பலனே தனி)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு