பிரீமியம் ஸ்டோரி
கிச்சன் ஷாப்பிங்

செராமிக் பவுல்ஸ்

பொடி வகைகள், உப்பு, ஊறுகாய், அவசரத் தேவைப் பொருள்கள் என தினசரி சமையலில் தவிர்க்க முடியாத பொருள்களை அடுப்படி அருகிலேயே கண்கவர் நிறங்களில், இந்த செராமிக் பவுல்களில் வைத்துக்கொள்ளலாம். மூன்று விதமான நிறங்களில் இருக்கும் இந்த செட் பவுல்ஸுக்கு மரப்பலகை ட்ரேயும் உண்டு.

கிச்சன் ஷாப்பிங்

குக்கிங் கேசரோல் செட்

கிரானைட் கோட்டிங் கொடுக்கப்பட்டிருப்பதால் மிகவும் உறுதியாக இருப்பதுடன் எளிதில் தேய்மானமும் ஆகாது. அதிக லைஃப் டைம் கொடுக்கும். பொரிக்க, தாளிக்க, குழம்பு வைக்க, சாதம் வடிக்க எனப் பல தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

கிச்சன் ஷாப்பிங்

காபி பெர்கோலேட்டர்

லுமினியம் நான்ஸ்டிக் கோட்டிங் செய்யப்பட்ட இந்த காபி டிகாக்‌ஷன் பெர்கோலேட்டரில் குறைந்த நேரத்திலேயே டிகாக்‌ஷன் தயாரித்துவிடலாம். பல வெரைட்டியான வடிவம் மற்றும் நிறங்களில் கிடைக்கிறது.

கிச்சன் ஷாப்பிங்

நைலான் வித் பிளாஸ்டிக்

ஹேண்டில் கரண்டி சமைக்க, பரிமாறப் பயன்படும் இந்தக் கரண்டியின் மேல் பகுதி நைலான் மெட்டலால் செய்யப்பட்டிருப்பதால் சமைக்கும்போது கீறல் விழுவது தடுக்கப்படும். இதன் பிளாஸ்டிக் கைப்பிடி, கையில் பிடித்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும்.

கிச்சன் ஷாப்பிங்

ஸ்டோரேஜ் பாக்ஸ்

லர்ந்த தானிய வகைகள், மாவு வகைகளை ஸ்டோர் செய்து கொள்ளப் பயன்படும் இந்த பாக்ஸ்கள் கண்ணாடியால் செய்யப் பட்டிருந்தாலும், இதன் ஒருபகுதி ஸ்டீல் கோட்டிங் செய்யப்பட்டு வெரைட்டியாக  உள்ளது. கீழ்ப் பகுதி கண்ணாடியாக இருப்பதால், உள்ளே இருக்கும் பொருள்களை எளிதில் அடையாளம் காண முடியும். மூன்று வெவ்வேறு அளவுகளில் இந்த பாக்ஸ் செட் இருக்கும்.

கிச்சன் ஷாப்பிங்

மெலமைன் பிளேட்ஸ்

டிபன் வகை உணவுகளைச் சாப்பிட காம்பேக்ட் வடிவில் இருக்கும் இந்த கலர்ஃபுல் பிளேட்டுகளிலேயே சைட் டிஷ் வைத்துக்கொள்ளும் வகையில் குழியும் உண்டு.

- தொகுப்பு: கு.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு