விதவிதமாய் சப்பாத்தி செய்வது மட்டுமல்ல... 'சைட் டிஷ்’க்கு எங்கே போவது? என்று திணறாமல் பாசிப்பருப்பு, உளுந்து போன்றவற்றை கலந்தும், தக்காளி தேங்காய் மசாலா என உங்கள் நாவின் சுவையறிந்து விருந்து படைக்கிறோம். பரிமாறி சுவைத்துப்பாருங்கள்.

ஆனியன் தால் சப்பாத்தி

தேவையானவை:

பாசிப்பருப்பு - 100 கிராம், வெங்காயம், தக்காளி (இரண்டையும் பொடியாக நறுக்கவும்) - 2, பச்சைமிளகாய் - ஒன்று, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பூண்டு - 2 பல் (நறுக்கவும்), சாம்பார் பொடி - அரை டீஸ்பூன், சீரகம், கடுகு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் சேர்க்கவும். பொரிந்த பின் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வேக வைத்த பருப்பு சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறி (கொஞ்சம் நீர் சேர்த்து) கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின் மல்லித்தழைத் தூவி இறக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து தால் கலவையில் சேர்த்து சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும்.

தக்காளி தேங்காய் மசாலா

தேவையானவை:

தக்காளி - 8, வெங்காயம் (இரண்டையும் பொடியாக நறுக்கவும்) - 3, உருளைக்கிழங்கு - (ஒரு தோல் சீவி பொடியாக நறுக்கவும்), மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், முந்திரி - 3 (அல்லது) 4 (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு.

தாளிக்க:

கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி, உருளை சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான நீர் விட்டு மூடவும்.

குழம்பு நன்கு கொதித்தபின் தேங்காய் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்த பின் இறக்கி மல்லித்தழைத் தூவி பரிமாறவும்.

சூடான சப்பாதிக்கு தொட்டு கொள்ள சுவையான டொமெட்டோ மசாலா ரெடி!

எள் ஆனியன் கறி சப்பாத்தி ரோல்

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் - 3, (மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், தனியாதூள் - ஒன்றரை டீஸ்பூன், கறுப்பு எள் - 2 டீஸ்பூன் (வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, புளிக்கரைசல் - சிறிதளவு, நல்லெண்ணெய், பட்டர்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு மெல்லிய சப்பாத்தியாக இட்டு 2 பக்கமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம் சேர்க்கவும். பிறகு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து தக்காளியையும் சேர்த்து கலக்கவும்.

பின்னர் இதில் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். கலவை நன்றாக கொதித்து பச்சை வாசனைபோனபின் கெட்டியாக வரும்போது வறுத்து பொடித்த எள்ளைத் தூவி கிளறி உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் மல்லிதழைத்தூவி இறக்கவும்.

ஒரு சப்பாத்தியை எடுத்து அதன் மேல் பட்டரைத் தடவி அதன் மீது எள் ஆனியன் கறியை வைத்து சப்பாத்தியை பாய் போல சுருட்டி பாதியாக (அ) வட்டமாக நறுக்கி பரிமாறவும்.

கோஸ் பனீர் சப்பாத்தி ரோல்

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கோஸ் - கால் கிலோ, பனீர் - 200 கிராம், தனி மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவையானவை, பட்டர் - சிறிதளவு.

தாளிக்க:

கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பட்டை - சிறுதுண்டு

செய்முறை:

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு, மிருதுவாகப் பிசைந்து, 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு மெல்லிய சப்பாத்தியாக இட்டு 2 பக்கமும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து வைக்கவும்.

கோஸை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். பனீரை சற்று கனமாக நீளவாக்கில் நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம், பட்டை தாளித்து கோஸை சேர்க்கவும்.

10 நிமிடம் (அடுப்பை சிம்மில் வைக்கவும்) நன்கு வதக்கிய பின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, பனீர் சேர்த்து பச்சை வாசனை போய் சுருளும் வரை கிளறி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

ஒரு சப்பாத்தியை எடுத்து அதன் மேல் பட்டரைத் தடவி அதன் மீது கோஸ் பனீர் கறியை வைத்து சப்பாத்தியை பாய்போல் சுருட்டி தக்காளி (அ) சில்லி சாஸுடன் சேர்த்து பரிமாறவும்.