ஆகஸ்ட், 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் 'சவுத் இண்டியா கலினெரி அசோஸியேஷன் காம்படிஷன் அன்ட் எக்ஸிபிஷன் 2014’ (South India Culinary Association) என்ற பெயரில் உணவுத் திருவிழா களைகட்டியது. கண்காட்சி மற்றும் போட்டிகளில், 465 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். வெஜ் மற்றும் நான் - வெஜ் உணவுகள் ஒவ்வொன்றும் மூக்கைத் துளைத்ததோடு... கண்களையும் பறித்தன. ஆம், விதவிதமான அத்தனை உணவுகளையும் பலவிதமாக அலங்கரித்து வைத்திருந்தனர்.

சமைப்பது, சமைத்த பிறகு அலங்கரிப்பது, படைப்பது, பரிமாறுவது... என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 'சாதாரணமாக சாப்பிடு வதற்குப் பின்னால் இத்தனை நுணுக்கங்களா?’ என வியக்க வைத்தது இக்கண்காட்சி.

முதல் நாள் நடந்த 'கேக்' சமைக்கும் போட்டியில் தயாரிக்கப்பட்ட 3 அடுக்கு கேக்... அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து நடந்த, 'டீம் பஃபே லன்ச்' போட்டியில் 3 வித மெனுக்களில் சமைத்து நாக்கில் நீர் ஊறவைத்தனர். அடுத்தடுத்த நாட் களில், காய்கறி மற்றும் பழங்களில் சிற்பம் செதுக்குதல், இந்திய பிராந்திய உணவுகள், பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி, காக்டெய்ல் மற்றும் மோக்டெய்ல் ஆகிய போட்டிகளில் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் அசத்தினர்.

இந்நிகழ்வு பற்றிப் பேசிய 'சவுத் இன்டியா கலினெரி அசோசியேஷன்' தலைவர் 'செஃப்’ சௌந்தரராஜன், ''சமையல்கலை கற்றுக்குட்டிகள், மூத்த கலைஞர்கள், பிற நாட்டுக் கலைஞர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக இப்போட்டிகள் அமைந்திருக்கின்றன. புதிய கண்ணோட்டத்தில் சமையல் கலையைக் காண்பதற்கான பாதையையும் இது ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் 135 பேர் வெற்றிபெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளனர்'' என்று பெருமையாகச் சொன்னார்.

தொகுப்பு, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்