'கொடிய நோய்க்கு தகப்பன் யாராகவும் இருக்கலாம். ஆனால், நோய்க்குத் தாய், தவறான உணவே!'

- இங்கிலாந்து பழமொழி.

'உணவு என்பது வெறும் வயிற்றை மட்டுமே நிரப்பும் பொருள் அல்ல. நம் உடல் உறுப்புகளுக்கு

அனைத்து வகையான ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரவேண்டும். அப்படிப்பட்ட உணவு வகைகளை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கண்ணைப் பறிக்கும் கலர் கலர் காய்கறிகளில் அத்தனைச் சத்துக்களும் நிரம்பி வழிகின்றன. உதாரணமாக, வெள்ளரி, பாகற்காய், புடலை, தக்காளி மற்றும் கீரை வகைகள் போன்ற ஆரோக்கிய உணவு வகைகளில் தினமும் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். நாம் உண்ணும் உணவே பிணி தீர்க்கும் மருந்தாக அமையும் என்பதை எல்லோரும் உணர்ந்து உண்டாலே, நோய்கள் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்'' என்று சொல்லும் 'இயற்கைப் பிரியன்' இரத்தினசக்திவேல், பச்சைக் காய்கறிகளைக் கொண்டு, காய்கறிக் கலவைகளை எப்படி தயார் செய்வது... இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பேசுகிறார்...

காய்கறிக் கலவை (சாலட்)

தேவையான பொருட்கள்:

வெள்ளரி - 1

பெரிய வெங்காயம் - 1

எலுமிச்சை - 1

பிளாக் சால்ட் தூள் - சிறிதளவு

மிளகுத்தூள், சீரகத்தூள் - சிறிதளவு

கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

தயாரிப்பு முறை: வெள்ளரிக் காயை முதலில் நன்றாகக் கழுவவும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் சிறிது சிறிதாக, மெலிதாக வெட்டி ஒன்றாகக் கலக்கவும். இதன் மீது எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிளகுத் தூள், பிளாக் சால்ட் தூள், சீரகத்தூள் ஆகியவற்றைத் தூவி கலக்கவும். கொத்தமல்லி, புதினா இலைகளை கழுவி, பொடிப்பொடியாக நறுக்கி தூவிக் கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான காய்கறிக் கலவை ரெடி. மென்று சாப்பிட இயலாதவர்கள், மிக்ஸியில் அரைத்தும் சாப்பிடலாம்.

பலன்கள்: நீரிழிவு அன்பர்கள் அவசியம், தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளில் இதுவும் ஒன்று. குடல் புண் உள்ளவர்களுக்கு உகந்தது. 100 முதல் 200 கிராம் வரை தினமும் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிட்டும். தொப்பை, உடல் கனம், கூடுதல் எடை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தினமும் காய்கறி சாலட் சாப்பிட்டால், மாதத் தில் ஐந்து கிலோ வரை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைக்க இயலும். உடலில் அதிக அமிலத்தன்மை, உப்புத் தன்மை கூடியவர்கள், அடிக்கடி சாப்பிட வேண்டும். தோல் பிணிகள், மலக்கட்டு விலக்கும் அற்புத உணவு இது. கண் கட்டி, கண் எரிச்சல் குறையும். தெளிவான பார்வைக்கு இந்த சாலட் மிகவும் ஏற்றது. வெயில் காலங்களில் காய்கறிகளை முழுதாகவோ, சாறாகவோ அல்லது காய்கறி சாலட்டாகவோ பயன்படுத்தினால் தேவையற்ற அதிக உடல் சூடு, மூலவியாதி, மலச்சிக்கல் பிணிகள் விரைந்து மறையும். பிற உணவு களுடனும் வெஜிடபிள் சாலட்டை சேர்த்துத் தாராளமாக சாப்பிடலாம்.

காய்கறி தயிர் பச்சடிக் கலவை

தேவையானவை:

வெங்காயம் - 1

கோஸ், குடமிளகாய் - தேவையான அளவு

வெண்பூசணி, சௌசௌ, முள்ளங்கி, சுரை இவற்றில் ஏதாவது ஒன்று - தேவையான அளவு

தேங்காய் துருவல் - அரை மூடி

எலுமிச்சை - 1

சீரகத்தூள் - சிறிதளவு

பிளாக் சால்ட் தூள்- சிறிதளவு

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

தயிர் - தேவையான அளவு

செய்முறை: காய்கறிகளை நன்றாகக் கழுவி, சிறிதுசிறிதாக நீளவாக்கில் பொடியாக நறுக்கவும். கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி, பொடியாக நறுக்கவும். எலுமிச்சையைச் சாறு எடுக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன், தயிர், சீரகத்தூள், பிளாக் சால்ட், எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் கலந்தால்... அருமையான, சுவையான காய்கறி தயிர் பச்சடி தயார். இத்துடன் முளைகட்டிய தானியங்களையும் சிறிதளவு சேர்க்கலாம்.

பயன்கள்: பிணிகளால் அவதிப்படும் அன்பர்களுக்கு, இதுவே அற்புத உணவாக, அதிசய மருந்தாக ஆற்றல் புரியும். நீரிழிவு, உயர்ரத்த அழுத்த அன்பர்கள், தொப்பை உள்ள அன்பர்கள் இதை தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரை உணவுக்கு முன்பு எடுத்துக்கொள்ளலாம். உடல் சூடு, மூலவியாதி போன்றவை மாயமாக மறையும். பெண்களின் மாதவிடாய் பிணிகள், கர்ப்பப்பை கோளாறுகள் குறையும். கண்ணாடி அணிந்தவர்கள் அவசியம் தினமும் சாப்பிட வேண்டும். அஜீரண கோளாறு, இரண்டே நாளில் சரியாகும். மூட்டுவலி குறையும்.

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்