இட்லி, இடியாப்பம் போல எளிதாக ஜீரணிக்கக் கூடிய நம்முடைய உணவு வகைகளில் ஆப்பத்துக்கும்

முக்கிய இடமுண்டு. காலை, மாலை, இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற சரியான உணவு ஆப்பம். தற்போது, ஆப்பத்தில் பல வெரைட்டிகளைக் காட்டிவருகிறது சென்னை, அண்ணாநகர் நளாஸ் ஆப்ப கடை. ஆப்பம் பற்றி பேசும் இதன் நிர்வாக இயக்குநர் ரமேஷ், ''தோசை ஊற்றுவதைப்போல ஆப்பம் அத்தனை எளிதல்ல. தோசையில் எண்ணெய் அதிகமாக பயன்படுத்துவோம். இட்லியிலோ, ஆப்பத்திலோ அதற்கு அவசியமில்லை. ஆப்பத்தில் முதலில் வெறும் மூன்று வெரைட்டிகளான கருப்பட்டி ஆப்பம், சம்பா அரிசி ஆப்பம், கோதுமை ஆப்பம் மட்டும் அறிமுகப் படுத்திய நாங்கள், தொடர்ந்து 28 விதமான ஆப்பங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்'' என்றவர், அவற்றில் ஏழுவிதமான ஆப்பங்களின் ரெசிப்பிகளை அடுக்கினார்.

ஆப்பத்துக்கான மாவு தயாரிக்கும் முறை

தேவையானவை :

பச்சரிசி - 1 கிலோ

தயிர் - 100 கிராம்

உப்பு - 30 கிராம்

முழு தேங்காய் - 1

சமையல் எண்ணெய் - 50 மில்லி

பச்சரிசியைக் கழுவி இறுத்து, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீண்டும் தண்ணீரை இறுத்து, ஒரு தட்டில் வைத்து மின்விசிறியின் கீழ் காயவிடுங்கள். லேசாக ஈரம் இருக்கும்போது மிக்ஸியில் அரைத்து, சல்லடையில் நன்கு சலித்துக் கொள்ளுங்கள். இனி, தேங்காயைத் துருவி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து ஒரே ஒரு முறை மட்டும் பால் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாலை அரைத்த மாவுடன் சேர்த்துக் கலந்து, கூடவே ஒரு கப் தயிரையும் சேர்த்து, கரண்டியால் நன்கு கலந்து, இறுதியாக உப்புச் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். முதல் நாள் மாலையில் இதனை தயாரித்து ஒரு சட்டியில் வைத்து மூடி, மறுநாள் எடுத்து உபயோகிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: ஆப்ப மாவானது அனைத்து வகை ஆப்பத்துக்கும் ஒரே மாதிரியாகத்தான் தயாரிக்க வேண்டும் என்பதால், இங்கு மாவுக்கான குறிப்பு மட்டுமே தரப்பட்டுள்ளது. இதையே அனைத்து ஆப்பத்துக்கும் பயன்படுத்தவும்.

பிளென் ஆப்பம்

செய்முறை:

அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து சூடானதும், துளி எண்ணெய் விட்டு, துணி கொண்டு சட்டி முழுவதும் எண்ணெயை பரப்பிவிட வேண்டும். பிறகு, முதல்நாள் தயாரித்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை ஒரு சுழற்று சுழற்றினால்... எல்லா பக்கத்திலும் மாவு உருண்டு ஓடி செட்டாகும். இனி, ஒரு தட்டுகொண்டு சட்டியை மூடி, மிதமான தீயில் வைத்து நான்கு நிமிடம் கழித்துத் திறந்தால், ஆப்பம் வெந்திருக்கும். அப்படியே எடுத்து தேங்காய்ப்பால், குருமா, நான் - வெஜ் கிரேவி என விரும்பிய சைட் டிஷ்ஷை தொட்டுச் சாப்பிடலாம்.

புல்ஸ் ஐ ஆப்பம்

தேவையானவை:

தயாராக இருக்கும் மாவு - தேவையான அளவு

முட்டை - 1

செய்முறை:

அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து சூடானதும், துளி எண்ணெய் விட்டு, துணி கொண்டு சட்டி முழுவதும் எண்ணெயை பரப்பிவிட வேண்டும். பிறகு, முதல்நாள் தயாரித்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை ஒரு சுழற்று சுழற்றினால்... எல்லா பக்கத்திலும் மாவு உருண்டு ஓடி செட்டாகும். இனி, ஒரு தட்டுகொண்டு சட்டியை மூடி, மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து திறந்து, முட்டையை உடைத்து ஊற்றி, சட்டியை லேசாக ஒரு சுற்று சுற்றினால் வெள்ளை கரு மட்டும் மாவின் அனைத்து பக்கங்களிலும் சென்று ஒட்டிக் கொள்ளும். மஞ்சள் கரு அப்படியே நடுவில் தங்கி நிற்கும். இனி, மூடி போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்துத் திறந்தால், மஞ்சள் கரு பாதி வெந்து, ஆப்பம் முழுமையாக வெந்திருக்கும். தேங்காய்ப்பால் அல்லது நீங்கள் விரும்பும் சைட் டிஷ்ஷோடு சேர்த்து சாப்பிடலாம்.

சிக்கன் கீமா ஆப்பம்

தேவையானவை:

தயாராக இருக்கும் மாவு - தேவையான அளவு

முட்டை - 1

சிக்கன் - 200 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - 20 கிராம்

மிளகாய்த்தூள் - 10 கிராம்

சீரகத்தூள் - 5 கிராம்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நன்கு புரட்டி, ஒரு மணி நேரம் ஊற வைத்து எண்ணெயில் போட்டு பொரித்துக்கொள்ள வேண்டும். இதை மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பை சூடாக்கி, ஆப்ப சட்டியை வைத்து, துளி எண்ணெய் விட்டு துணி கொண்டு சட்டி முழுக்க தேய்த்து விடுங்கள். இனி, தயாராக இருக்கும் ஆப்ப மாவை ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றி மூடிவைத்து இரண்டு நிமிடம் கழித்து திறந்து முட்டையை உடைத்து ஊற்றி ஒரு சுற்று சுற்ற வேண்டும். நறுக்கி வைத்த சிக்கன் துண்டுகளை பரவலாகப் பரப்பி, மூடிபோட்டு இரண்டு நிமிடம் கழித்துத் திறந்தால், சிக்கன் கீமா ஆப்பம் ரெடி. இறுதியாக, கொத்தமல்லிதழையை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறவும்.

நாட்டுக்கோழி கிரேவி இதற்கு பொருத்தமான சைட் டிஷ்.

மட்டன் கீமா ஆப்பம்

தேவையானவை:

தயாராக இருக்கும் மாவு - தேவையான அளவு

முட்டை - 1

மட்டன் - 150 கிராம்

இஞ்சி - பூண்டு விழுது - 20 கிராம்

மிளகாய்த்தூள் - 10 கிராம்

சீரகத்தூள் - 5 கிராம்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - 20 கிராம்

செய்முறை:

மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இனி, வாணலியில் எண்ணெய் விட்டு, மட்டனை பொரித்து, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பை சூடாக்கி, ஆப்ப சட்டியை வைத்து துளி எண்ணெய் விட்டு சட்டி முழுவதும் துணி கொண்டு தேய்த்து விடுங்கள். இனி, சட்டியில் ஆப்ப மாவை ஊற்றி மிதமான தீயில் இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகவிட வேண்டும். பிறகு, முட்டையை உடைத்து ஊற்றி சட்டியை ஒரு சுழற்று சுழற்றி, பொரித்த மட்டனை பரவலாகத் தூவி மூடி போட்டு, மேலும் இரண்டு நிமிடம் வேக வைத்து எடுத்தால், மட்டன் கீமா ஆப்பம் ரெடி. நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறவும்.

மட்டன் கிரேவி இதற்கு பொருத்தமாக இருக்கும்.

குழந்தைகள் ஸ்பெஷல் ஆப்பம்

தேவையானவை:

தயாராக இருக்கும் மாவு - தேவையான அளவு

துருவிய சீஸ் - 20 கிராம்

டூட்டி ப்ரூட்டி - 20 கிராம்

வறுத்த முந்திரி பவுடர் - 1 கப்

சர்க்கரை - 1 கப்

செய்முறை:

அடுப்பைச் சூடாக்கி, ஆப்பச் சட்டியை வைத்து துளி எண்ணெய் விட்டு, சட்டி முழுவதும் துணி கொண்டு தேய்த்து விடுங்கள். இனி, தயாராக இருக்கும் ஆப்ப மாவை ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும். பிறகு, மூடியைத் திறந்து, துருவிய சீஸ், வறுத்த முந்திரி பவுடர், டூட்டி ஃப்ரூட்டி என ஒன்றன் மீது ஒன்றாக பரவலாகத் தூவி, மூடி போட்டு, இரண்டு நிமிடம் வேகவிட்டு எடுத்து, சர்க்கரையைத் தூவி பரிமாற வேண்டும்.

இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.

பனீர் பட்டர் ஆப்பம்

தேவையானவை:

தயாராக இருக்கும் மாவு - தேவையான அளவு

வெண்ணெய் - 20 கிராம்

துண்டுகளாக நறுக்கிய பனீர் - 30 கிராம்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பைச் சூடாக்கி, ஆப்பச் சட்டியை வைத்து துளி எண்ணெய் விட்டு, சட்டி முழுவதும் துணி கொண்டு தேய்த்து விடுங்கள். இனி, தயாராக இருக்கும் ஆப்ப மாவை ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும். பின்பு, மூடியைத் திறந்து ஒரு ஸ்பூனால் வெண்ணெயை மாவின் மீது நன்கு தடவி, அதன் மேல் நறுக்கிய பனீரைத் தூவி, மூடி போட்டு இரண்டு நிமிடம் கழித்துத் எடுக்கவும். இதன் மீது சர்க்கரையைத் தூவி பரிமாறவும்.

இதற்கு வெஜ் குருமா, தேங்காய்ப்பால் அல்லது நான் - வெஜ் குருமா பொருத்தமாக இருக்கும்.

வெள்ளை எள் - சீஸ் ஆப்பம்

தேவையானவை:

தயாராக இருக்கும் மாவு - தேவையான அளவு

வெள்ளை எள் - 10 கிராம்

சீஸ் - 20 கிராம்

வெண்ணெய் - 20 கிராம்

செய்முறை:

அடுப்பைச் சூடாக்கி, ஆப்பச் சட்டியை வைத்து துளி எண்ணெய் விட்டு, சட்டி முழுவதும் துணி கொண்டு தேய்த்து விடுங்கள். இனி, தயாராக இருக்கும் ஆப்ப மாவை ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக விடவும். இனி, மூடியைத் திறந்து வறுத்த எள் சேர்த்து, அதன் மீது துருவிய சீஸ் போட்டு மூடி ஒரு நிமிடம் வேகவிட்டு, பின்பு ஸ்பூனால் வெண்ணெயை ஆப்பத்தின் மேல் தடவி மூடவும். ஒரு நிமிடம் மறுபடியும் வேகவிட்டு எடுத்தால், வெள்ளை எள் மற்றும் சீஸ் ஆப்பம் ரெடி.

கட்டுரை, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்