''ஃபுட் போட்டோகிராஃபியில இருக்கும் பெரிய சவாலே நாம எடுக்கும் போட்டோவைப் பார்த்தாலே, அந்த அயிட்டத்தை சாப்பிட வைக்கணும்! அந்த சவால் எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என ஆரம்பிக்கும் சென்னையைச் சேர்ந்த ஃபுட் போட்டோகிராஃபர் ஓமர் ஷெரீப், ''கம்ப்யூட்டர் சயின்ஸ் டிப்ளோமா படிச்சு முடிச்சேன். ஃபுட் போட்டோகிராஃபியில இருந்த ஆர்வத்தால மேல எதும் படிக்கத் தோணல. இதுக்குக் காரணம், என் அப்பாவும்தான். 16 வயசுல ஒரு கேமரா வாங்கிக் கொடுத்தார். பார்க்கிறதையெல்லாம் படமா எடுத்துத் தள்ளிட்டு இருந்தேன். அதுல எனக்குப் பெரிய திருப்தி கிடைச்சு, அதுவே ஹாபியாவும் மாறிடுச்சு.

ஒருமுறை, 'கோடாக் கம்பெனியில ஆல் இந்தியா லெவல்ல போட்டோகிராஃபியில போட்டி வெச்சுருக்காங்க. நீ ஏன் கலந்துக்கக்கூடாது?’னு கேமரா சர்வீஸ் கடைக்காரர் ஒருத்தர் கேட்டார். அதுவரைக்கும் நான் எடுத்த போட்டோ மொத்தத்திலிருந்து எனக்குத் திருப்தி கொடுத்த போட்டோக்களை செலக்ட் செய்து அனுப்பி வெச்சேன். எனக்குப் பரிசு கிடைக்கவே, போட்டோகிராஃபி ஆர்வம் இன்னும் அதிகமாயிடுச்சு'' என்று சொல்லும் ஓமர், 1997-ம் ஆண்டு தொழில் முறையிலான கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறார்.

''போட்டோகிராஃபியை மேலும் கத்துக்க போட்டோகிராஃபி கோர்ஸ் படிச்சேன். பத்திரிகைத் துறையில வேலை கிடைச்சுது. அங்கே பல விதமான போட்டோக்கள் எடுத்துட்டு இருந்தாலும், ஃபுட் போட்டோகிராஃபில கத்துக்கிட்ட விஷயங்கள் அதிகம். அந்தத் துறையில வாய்ப்புகளும் சவால்களும் நிறைய இருந்ததை உணர்ந்தேன். இப்போ முழு நேர ஃபுட் போட்டோகிராஃபர்'' என்று சொல்லும் ஓமர் ஷெரீப், தான் கற்ற கலையை மற்றவர்களுக்கும் கற்றுத் தருவதிலும் ஆர்வம் காட்டுகிறார்.

''என் ஃப்ரெண்ட்ஸ் மூணு பேரும் சேர்ந்து, ரெண்டு வருஷத்துக்கு முன்ன போட்டோகிராஃபி சம்பந்தப்பட்ட வொர்க் ஷாப் ஆரம்பிச்சுருக்கோம். இதுல பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஃபுட் போட்டோகிராஃபி சம்பந்தப்பட்ட விழிப்பு உணர்வை மேலும் அதிகப்படுத்தற வகையில நிறையக் கத்துத் தர்றோம். பெண்கள் கோலம் போடுற அழகைப் பார்த்தாலே, அவங்களோட பொறுமையையும் க்ரியேட்டிவிட்டியையும் நல்லா உணர முடியும். இது ஃபுட் போட்டோகிராஃபியிலயும் நிறைய தேவை என்பது என்னோட எண்ணம். பெண்கள் இந்தத் துறையில வரணும் என்கிறது என் ஆசை'' எனும் ஓமர், எஸ்.ஆர்.எம். ஹோட்டல் நிறுவனங்கள், பிரபல காபி ஷாப் நிறுவனங்கள், பார்க் ஷெரட்டன், எக்ஸியூட்டிவ் கம்ஃபோர்ட் (ணிஜ்மீநீutவீஸ்மீ நீஷீனீயீஷீக்ஷீt) போன்ற கம்பெனிகளுக்காகவும் பணியாற்றியவர்.

- கே.அபிநயா