''நாங்க டாக்டர் குடும்பங்கிறதால ஆரோக்கியமான உணவுகள் பத்தி அடிக்கடி பேசிட்டே இருப்போம். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குப் போகும்போது அவங்க கொடுக்குற உணவுகளை, 'இன்னும் எப்படி சுவையானதா மாற்ற முடியும்?’னு யோசிச்சுட்டே இருப்பேன். ஹோட்டல்கள்ல சாப்பிடுற உணவுகளையும் அதே ருசியில ஆரோக்கியமா எப்படி சமைக்கிறதுனும் யோசிப்பேன். அந்த மாதிரி உணவுகளை நானே சமைத்து அலங்கரித்து அசத்திடுவேன்'' என்று உற்சாகமாக பேசும் கிருத்திகா ராதாகிருஷ்ணன், பல ஆண்டுகளாக சமையல் கலையில் அசத்தி வரும் 'ஃபுட் ஷோ ஹோஸ்டர்’. இவர், ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மனைவி.

''இதுவரைக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துல 9 சமையல் புத்தகங்களை வெளியிட்டிருக்கேன். என்னோட

சமையல் ஆர்வத்தைத் தூண்டி புத்தகங்கள் போடுற அளவுக்கு என்னை ஊக்குவித்தவர் என் கணவர்தான். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பல பணி நெருக்கடி இருந்தாலும், என்னையும் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவார். அப்பா நியூராலஜி டாக்டர்ங்கிறதால வீட்ல நியூட்ரிஷியன் சமையலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பீன்ஸ் பொரியலா இருந்தாகூட, 'காயோட பச்சை நிறம் மாறாம எப்படி சமைக்கிறது?’னு ஆராய்ச்சி செய்வோம். காய்கறி களை சத்துக்கள் அழியாமல் சமைக்குறதுக்காக விதவிதமா முயற்சி பண்ணுவோம். அந்த ஆர்வம்தான் சமையல் மேல இத்தனை ஈடுபாட்டைக் கொண்டு வந்து சேர்த்திருக்கு. ஹோட்டல்கள்ல மட்டும்தான் வாய்க்கு ருசியா சமைக்க முடியுமா என்ன? அதை நம்ம வீட்ல இருந்தே ஆரம்பிக்கலாமே'' என்று சொல்லும் கிருத்திகா, செய்து காட்டிய டிஷ், ’பேபி கார்ன் டேஸ்ட்டி ஃப்ரை’.

பேபிகார்ன் டேஸ்டி ஃபிரை!

தேவையானவை:

மைதா - 1 டேபிள்ஸ்பூன்

கார்ன் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க, வறுக்க தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)

பேபி கார்ன் - 6

வெங்காயம் (சிறியது) - 1 (நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

குச்சிபோல நறுக்கிய இஞ்சி - சிறிதளவு

செய்முறை:

மைதா, கார்ன் பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குப் பிசையவும். அதில் வட்ட வட்டமாக நறுக்கிய பேபி கார்னை சேர்த்துப் பிசைந்து காய வைத்த எண்ணெயில் பொரித்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் பரப்பி விடவும். பிறகு, கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, சோயா சாஸ் சேர்க்கவும். பிறகு, பொரித்த பேபிகார்னை இக்கலவையுடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு சேர்த்துக் கிளறி கொத்தமல்லித் தழை மற்றும் இஞ்சி குச்சிகளை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

- பொன்.விமலா