'கச்சி தேசம்' என்றும், 'நகரேஷீ காஞ்சி' என்றும் போற்றப்படும் காஞ்சிபுரத்தில் எங்கு திரும்பினாலும் கோயில்களையும், கோபுரங்களையும் தரிசிக்கலாம். நகரின் கிழக்குப் பகுதியில், மிக உயரமான மதிலுடன் கிழக்கில் ஒரு ராஜகோபுரம். மேற்கில் ஒரு ராஜகோபுரம் என பிரமாண்டமாக இருக்கிறது வரதராஜ பெருமாள் கோயில். அத்திகிரியான், அருளாளன், தேவராஜ பெருமாள், தேவராஜன், வரதராஜன் என இந்தப் பெருமாளுக்கு ஏகப்பட்ட திருநாமங்கள்.

இத்தலத்தில் திருமங்கையாழ்வார் நான்கு பாசுரங்களும், பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமும் பாடி, மங்களாசாசனம் செய்து உள்ளனர். இங்கே பெருமாளுக்கு ஆலவட்டம் கைங்கர்யம் செய்துவந்த திருக்கச்சி நம்பிகள், வரதரிடம் நேரடியாகப் பேசும் பேறு பெற்றவர் என்று சிலாகித்துச் சொல்வார்கள். சாலக்கிணறு எனும் இடத்தில் இருந்து, வரதராஜருக்கு திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவந்து, ராமானுஜர் கைங்கர்யம் செய்து வந்த புண்ணியத் தலமும் இதுவே!

ஐந்து தீர்த்தங்களைக் கொண்ட திருத்தலம் எனும் பெருமை, காஞ்சி வரதர் கோயிலுக்கு உண்டு. அனந்த சரஸ் தீர்த்தம், வராஹ தீர்த்தம், பாஸ்கர தீர்த்தம் (வேகவதி நதி), பத்ம தீர்த்தம் (பொற்றாமரை திருக்குளம்), பிரம்ம தீர்த்தம் ஆகிய ஐந்து தீர்த்தங்கள் விசேஷ மருத்துவ குணம் வாய்ந்தவை என்று பக்தர்களால் போற்றப்படுகின்றன.

காஞ்சிபுரம் என்றாலே, காமாட்சி அம்பாள், ஏகாம்பரேஸ்வரர், வரதராஜ பெருமாள் என மூவரும் குடியிருக்கும் கோயில்கள் முதலில் நினைவுக்கு வரும். இவற்றுக்கு அடுத்தபடியாக பட்டாடைகள் நினைவுக்கு வரும். இதற்கு இணையாக புகழ்பெற்றது காஞ்சிபுரம் இட்லி. காஞ்சிபுரத்துக்காரர்கள், கோயில் இட்லி என்பார்கள். இந்த இட்லி, வரதராஜ பெருமாளின் காலை உணவு என்பதுதான் விசேஷமே!

வரதருக்கு இட்லி நைவேத்தியம் செய்து, அதனை பக்தர்களுக்கு விநியோகித்து, நாமும் உட்கொண்டால், நினைத்ததை அடையலாம், நிம்மதியாக வாழலாம். முக்கியமாக, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

வி.ராம்ஜி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

'பத்து மிளகு சாப்பிட்டால், பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்கிற மருத்துவ மொழி உண்டு. அதாவது, மிளகு சாப்பிட்டால், பகைவன் வீட்டில் தருகிற விஷம்கூட முறிந்துவிடும் என்பதுதான் இதற்குப் பொருள். காஞ்சிபுரம் இட்லி, முழுக்க முழுக்க மிளகுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது.

பச்சரிசி - 800 கிராம்

தோல் நீக்கிய உளுந்து - 500 கிராம்

தயிர் - சிறிதளவு

மிளகு - 100 கிராம்

சீரகம் - 100 கிராம்

சுக்கு - 50 கிராம்

நெய் - 400 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

முதலில், அரிசியையும் உளுந்தையும் தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். சுமார் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஊறியிருக்க வேண்டும். அடுத்து, கொஞ்சம் தயிரை அதில் கலக்க வேண்டும். பிறகு, சில மணி நேரம் கழித்து, நன்றாக அரைக்க வேண்டும். இயந்திரங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்திலும், இங்கே கையால் அரைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பிறகு, மிளகு, சீரகம், சுக்குப்பொடி, நெய் ஆகியவற்றைக் கலந்து, முழங்கை நீளம் உள்ள மூங்கில் கூடையில் வைக்க வேண்டும். அப்படி நேரடியாக வைத்தால், கூடையின் ஓட்டை வழியே மாவு கொட்டிவிடும் என்பதால், கூடையின் உள்பகுதியில் மந்தாரை இலையை வைத்து, அதில் மெதுவாக மாவை எடுத்து ஊற்ற வேண்டும்.

கோயில் மடப்பள்ளியில் இன்றைக்கும் விறகு அடுப்பையே பயன்படுத்துகின்றனர். மண்பாண்டத்தில் 'சால்’ எனும் வகை மண் சட்டி உண்டு. அந்த சால் சட்டியில் கழுத்தளவு வரை, தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைக்க வேண்டும். பிறகு, மந்தாரை இலை சுற்றி வைத்து ஊற்றப்பட்ட மாவு கொண்ட மூங்கில் கூடையை, அந்தத் தண்ணீருக்குள் வைக்கவேண்டும்.

சுமார் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரத்தில், சுடச்சுட இட்லி ரெடி. கிட்டத்தட்ட முழங்கை நீளத்துக்கு இரண்டு இட்லிகள் செய்வதற்கான அளவு இது. வரங்கள் யாவும் தருகிற வரதராஜ பெருமாளுக்கு காலை 7 மணிக்கு இட்லி நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள்.