Published:Updated:

கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!
பிரீமியம் ஸ்டோரி
News
கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!

கிச்சன் கைடு!

ருளைக்கிழங்கை அரை மணி நேரம் உப்புத்தண்ணீரில் ஊற வைத்துவிட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

- கல்பனா சந்திரமௌலி, நாக்பூர் - 10

கிச்சன் கைடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது.

- டி.இந்திரலட்சுமி, சென்னை - 75

கிச்சன் கைடு!

சூடான எண்ணெயில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு, எதைப் பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.

- வே.யாழினி, வேலூர்

கிச்சன் கைடு!

துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிய தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் பருப்பு விரைவில் வெந்து, பக்குவமாக இருக்கும்.

- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

கிச்சன் கைடு!

தோசைக்கு மாவு அரைக்கும்போது கொஞ்சம் வெண்டைக்காயையும் சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

கிச்சன் கைடு!

க்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டு, அதில் சிறிது எலுமிச்சைப்பழச் சாறு கலந்தால் ருசி அதிகமாக இருக்கும்.

- நிர்மலா தேவி, சென்னை - 75

கிச்சன் கைடு!

ருணைக்கிழங்கை வேகவைக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்து வேகவைத்தால், வெகு சீக்கிரம் பஞ்சுபோல் வெந்துவிடும்.

- சாந்தி ரங்கநாதன், திருச்சி - 5

கிச்சன் கைடு!

கீரை நிறம் மாறாமல் இருக்க சிறிது உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.

- மஞ்சு வாசுதேவன், நவிமும்பை

ளுந்து வடை செய்யும்போது, ஒரு கை சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உள்ளே மெத்தென்றும், வெளியே மொறுமொறுப்பாகவும் இருக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மாவுடன் சேர்த்து அரைத்துத் தட்டினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.

- பத்மா வெங்கட்ராமன், ரெட்டிப்பாளையம்.

கிச்சன் கைடு!

ட்லி மிளகாய்ப்பொடியுடன் புளி, கறிவேப்பிலை, பொரித்த அப்பளத் துண்டுகளைச் சேர்த்து அரைக்க, திடீர் சுவைமிகு துவையல் ரெடி

- சஜனா மஹிமா, கோவை-18.

கிச்சன் கைடு!

ப்பாத்தியின் மேல் சூடான பால்விட்டு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்துக் கொடுத்தால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- பத்மா வெங்கட்ராமன், ரெட்டிப்பாளையம்.