பிரீமியம் ஸ்டோரி
நலம் காக்கும் பரிசு!

தாய்மாமன் சீதனம், பிறந்தவீட்டு சீர்வரிசை, நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் வாழ்த்தி வழங்கும் அன்புப் பரிசுப்பொருள்கள், இவை எல்லாவற்றையும்விட முக்கியமான தனித்துவம் வாய்ந்த பரிசு என்ன தெரியுமா? ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள். ‘என்னது மாத்திரையா?’ என முகம் சுளிக்காதீர்கள். ஃபோலிக் ஆசிட் என்பது வெறும் மாத்திரை அல்ல. புகுந்த வீட்டின் வம்சத்தைக் காக்க, தன் உடல்நலனைக் காக்க பெண் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமான, ஆரோக்கியமான பரிசுப்பொருள் அது.

நலம் காக்கும் பரிசு!

ஃபோலிக் ஆசிட் மாத்திரை

நலம் காக்கும் பரிசு!

தினசரி பெண்களுக்கு, 0.4 மி.கி போலிக் அமிலம், வைட்டமின் - பி மற்றும் இரும்புச்சத்து தேவை. இவை, கர்ப்பக் காலங்களில் தாய்க்கும் சேய்க்கும் நல்ல பலத்தைத் தந்து, பிரசவத்தைச் சுலபமாக்கும். பிரசவத்துக்குப் பிறகான தாய் மற்றும் சேயின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்கு வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் வகைகளில் ஒன்றான ஃபோலிக் ஆசிட் மாத்திரையை ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நலம் காக்கும் பரிசு!

பலன்கள்

• ஃபோலிக் அமிலம், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

• பிறக்கும் குழந்தையின் மூளைக் குறைபாட்டைத் தடுக்கும்.

• டி.என்.ஏ குறைபாட்டைச் சரி செய்யும்.

• நரம்புக் குழாய் பிரச்னை களைச் சரிசெய்யும். தண்டுவடக் கோளாறைச் சரிசெய்யும்.

போலிக் ஆசிட் மாத்திரையை எந்தக் காலத்தில் இருந்து சாப்பிட வேண்டும்?

நலம் காக்கும் பரிசு!

குழந்தை குறித்து ஆலோசிக்கும்போதே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. கருத்தரிக்கும் மூன்று மாதங்களுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பக்காலத்தின்போது ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளுடன் இரும்புச்சத்து மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருள்களையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஃபோலிக் அமிலம் உள்ள உணவுப் பொருள்கள்

நலம் காக்கும் பரிசு!

முழுதானியங்களில் ஃபோலிக் அமிலம் நிறைந்து இருக்கும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், புரொக் கோலி, முட்டை, நட்ஸ், அவகேடோ, முளைகட்டிய பயறு, காலிஃபிளவர், கேரட், மக்காச்சோளம், பீன்ஸ், மொச்சை, அவரை, இறைச்சி, ஈஸ்ட் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் உள்ளது. ஃபோலிக் அமிலம் உள்ள உணவுப்பொருள்களை, எண்ணெயில் பொரித்துப் பயன்படுத்தும்போது, அவற்றில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு குறையும். எனவே, சாப்பிடக்கூடிய காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது நல்லது. பச்சையாகச் சாப்பிட முடியாத காய்கறிகளை, ஸ்டீம் குக்கிங் முறையில் சமைத்துச் சாப்பிடலாம்.

பெண்களுக்கு இது ஏன் அவசியம்?

நலம் காக்கும் பரிசு!

பெண்களின் கர்ப்பகாலத்தின்போது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க ஃபோலிக் ஆசிட் மாத்திரை உதவுகிறது. இது கருப்பையில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைகளுக்கும் வரக்கூடிய நரம்பியல் பிரச்னைகளைத் தடுக்கவும், சரிசெய்யவும் உதவும். எனவே, இம்மாத்திரை அனைத்து பெண்களுக்கும் அவசியமான ஒன்றாகும்.

ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளுக்கான ரெசிப்பிகள்!

நலம் காக்கும் பரிசு!

• அவகேடோ, ஃபிளாக்ஸ் விதைகளைச் சேர்த்து சாலட் போல செய்து சாப்பிடலாம்.

• வேகவைத்த முட்டையுடன், மிளகு, உப்பு தூவி காலை உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதில், மசாலாவைத் தவிர்ப்பது நல்லது.

• மாலை 4 - 5 மணி அளவில் மொச்சை, அவரை போன்ற சுண்டல் வகைகளை 100 கிராம் அளவுக்குச் சாப்பிடலாம்.

• முளைகட்டிய பயறை வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவது நல்லது.

• நாட்டுமக்காச்சோளத்தை வேகவைத்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.

• புரொக்கோலி, கேரட், முளைகட்டிய பயறுகளைச் சேர்த்து சாலட்டாகச் சாப்பிடலாம்.

• மீன் சாப்பிடும்போது, குழம்பு மீனாகவும் தவாவில் வறுத்த மீனாகவும் சாப்பிடுவது நல்லது. பொரித்த மீனைத் தவிர்க்கலாம்.

- ச.மோகனப்பிரியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு