Published:Updated:

“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!
“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!

எம்.ஆர்.ஷோபனா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி

‘அவள் விகடன் கிச்சன்’ இதழின் மூன்றாம் ஆண்டு விழாக் கொண்டாட்டம், சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசாவில் ஜூலை 23-ம் தேதி நடைபெற்றது. பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தன் மனைவி பாடகி சைந்தவியுடனும், நகைச்சுவையாளர், நடிகர் ஈரோடு மகேஷ் தன் மனைவி ஸ்ரீதேவி மற்றும் மகள் அமிழ்தாவுடனும், நகைச்சுவை நடிகர் மதன்பாபு மற்றும் அவர் மனைவி சுசீலா, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் பிரபலம் சித்ரா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்வை கலர்ஃபுல் ஆக்கினர். இது ‘ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ்’ (Title Sponsor) வழங்கிய அவள் கிச்சன் மூன்றாம் ஆண்டு விழா, ‘பவர்டு பை’ (Powered by) ‘சக்தி மசாலா’.

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் கிடைக்கும் வித்தியாசமான, ருசிகரமான உணவுகளான ‘ஹைவே சமையல்’தான் விழாவின் தீம். ஒரு நெடுஞ்சாலைப் பயண அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்த அரங்க வடிவமைப்பு, வரவேற்பறையில் நுழையும்போதே விருந்தினர்களிடம் அந்த உணர்வைக் கடத்தியது. 

“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!
“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ``சமையல் என்பது ஒரு கலை.  இந்தக் கலையில் ‘அவள் விகடன் கிச்சன்’ இதழ் ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்துகிறது என்பதில் பெருமை கொள்கிறோம்.

இதோடு, ‘அவள் விகடன் கிச்சன்’ வாசகர்களையும் உணவுத்துறை யினரையும் ஊக்குவிக்கும் விதமாக ‘யம்மி ரேட்டிங்ஸ்’ மற்றும் ‘யம்மி அவார்ட்ஸ்’ ஆகியவற்றை வழங்கவிருக்கிறோம்” என்று தெரிவித்தார். நல்ல உணவகங் களைத் தேடிப்பிடித்து `யம்மி ரேட்டிங்ஸ்’ அளிக்கப்படவிருக்கிறது.    வித்தியாசமான உணவுகளை அளிக்கும் உணவகங்கள் மற்றும் செஃப்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ‘யம்மி அவார்ட்ஸ்’ வழங்கப்படுகிறது. இைசயமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி  இருவரும் இந்த விருதுகளுக்கான லோகோக்களை அறிமுகப்படுத்தினர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆர்.ஜே சனோ, ``ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?’’ என்று சைந்தவியிடம் கேட்க, ``வெந்நீர்கூட வைக்கத் தெரியாது’’ என்றார் பெரிய சிரிப்புடன். உடனே ஜி.வி.பிரகாஷ், “சைந்தவி சூப்பரா சமைப்பாங்க” என்று மனைவியை விட்டுக்கொடுக்காமல் பேசி, பார்வையாளர் களின் கைத்தட்டல்களை அள்ளினார். “சரி... ஹைவேஸில் கிடைக்கும் உணவு வகைகளின் பெயர்களை வைத்து ஒரு பாட்டுப் பாடுங்க...’’ என்று சனோ சொல்ல, “எங்கே போனாலும் என்னை இப்படித்தான் மாட்டிவிட்டுறாங்க” எனச் செல்லமாகச் சிணுங்கிய சைந்தவி, ‘முர்கு தரிவாலா... பிதாய் கச்சோரி...’ என நீளமாக உணவுப்பெயர்களைப் பாடலாகவே பாடி அசத்தினார். பின்னர் தன் மென்குரலில் ‘தெறி’ படத்தின் ‘உன்னாலே என் ஜீவன்...’ பாடலைப் பாடித் தாலாட்டினார்.

“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!

அடுத்து மேடையேறிய ஈரோடு மகேஷ், ``நான் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்திருக்கேன். நெடுஞ்சாலையில் கிடைக்கும் உணவுகளை நானும் சாப்பிட்டிருக்கேன். அப்படி இருக்கும்...” என்று கூறி ஒரு  ‘ரியாக்‌ஷன்’ கொடுக்க, அரங்கமே சிரித்தது. “ ‘அவள் விகடன் கிச்சன்’ இதழ் நடத்தும் இந்த நிகழ்ச்சி, பாரம்பர்ய உணவுகளை  ஊக்குவிக்கும்விதமா இருக்கு’’ எனப் பாராட்டியதோடு வயிறு குலுங்க ஜோக்குகளை அள்ளி வழங்கிக் குதூகலப்படுத்தினார்.

செஃப் தேவ்குமார்தான் நிகழ்ச்சியின் ஹீரோ. இவர் தலைமையில்தான் நெடுஞ்சாலை  உணவு வகைகள் தயாராகின. ஆனால், தன்னை வைத்து ஈரோடு மகேஷுக்கு அந்த டாஸ்க் கொடுக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதாவது, மகேஷ் கையில் கொடுக்கப்பட்ட பருப்பு உருண்டையை அவர் சரியாக தேவ்குமார் வாய்க்குள் போட வேண்டும். அதை வெற்றிகரமாகச் செய்துமுடித்தார் மகேஷ்.

“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!
“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!

விருந்தினர்களான நம் வாசகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாக பதில் அளிப்பவர்களுக்குப் பரிசுகள்  வழங்கப்பட்டன. “முகேஷ் அம்பானிக்கு பிடிச்ச உணவு எது?” என்று சனோ கேட்க, “சாம்பார் இட்லி” என்று சரியான பதிலைச் சொல்லி பலத்த கைதட்டல்களுடன் பரிசை வாங்கிச்சென்றார் நம் வாசகி ஒருவர்.

நகைச்சுவை நடிகர் மதன்பாப் தனது அக்மார்க் சிரிப்புடன் மேடையேறி, “இந்த விழாவில் பங்கேற்றது எனக்கு மனநிறைவா இருக்கு. அவள் விகடன் கிச்சன் இதழ்களில் வரும் ரெசிப்பி களைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும்’’ என்றார். எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் மற்றும் முகில் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புதுகை பூபாளம் கலைக்குழு கலைஞர்கள் பிரகதீஷ்வரன் மற்றும் செந்தில் வழங்கிய அட்டகாசமான ‘ஸ்டாண்ட்-அப்’ காமெடி நிகழ்ச்சி,  அரங்கமெங்கும்  சிரிப்புச் சரவெடி யைக் கொளுத்திப்போட்டது.

“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!

மதிய உணவுக்கான நேரம் வர, நம் வாசக, வாசகிகள் ஆம்பூர் மட்டன் பிரியாணி, கறிக்குழம்பு, கொத்து பரோட்டா, சிக்கன் சால்னா, சாலையோர டீ, கடி பக்கோடி, தால் பதி சூர்மா என விதவிதமான நெடுஞ்சாலை உணவுகளை ருசித்தனர். விருந்தினர்கள் அனைவருக்கும் அவள் விகடன் கிச்சன், ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ் மற்றும் சக்தி மசாலாவின் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.  ‘வாவ்... சூப்பர் கிஃப்ட்!’ என்று கைகளும், மகிழ்வில் மனதும் நிறைந்து விடைபெற்றனர் சுவை ரசிகர்கள்!

அவள் விகடன் கிச்சன் ஆண்டு விழா நிகழ்வை வீடியோவில் காண:

வீடியோ QR Code

“ஜி.வி.பிரகாஷுக்குச் சமைக்கத் தெரியுமா?” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு