பிரீமியம் ஸ்டோரி

ஆலு பிரெட் டோஸ்ட்

தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 4,  பெரிய அளவு உருளைக்கிழங்கு - 2 (வேக வைக்கவும்), வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பாய்ஸ் கிச்சன்

செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு வதக்கவும். பிறகு, அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துப்போட்டு கிளறி, வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பிரெட் டோஸ்டரில் மேலும் கீழும் வெண்ணெய் அல்லது நெய் தடவவும். ஒரு பிரெட் ஸ்லைஸை அதில் வைத்து, அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பரப்பவும். அடுத்து அதன் மேல் மற்றொரு பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி சூடு படுத்தவும். பிரெட் வெந்தவுடன் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு எடுக்கவும். சுடச்சுட ஆலு பிரெட் சாண்ட்விச் தயார்.

- பா.கருண்,
டான் பாஸ்கோ பள்ளி, எழும்பூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு