Published:Updated:

பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்
பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்

பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்

பிரீமியம் ஸ்டோரி

விதம்விதமான உணவுகளால் நிறைந்திருக்கிறது அந்த அறை. நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் மெனு பட்டியல் பரிமாறப்படவிருக்கிறது. டேபிள் வெறும் தட்டுகளுடனும் முள்கரண்டிகளுடனும் அரவமின்றி இருக்கிறது. டேபிளின் நடுவில் காகிதப் பூங்கொத்து ஒன்றை வைக்கிறார் அமி கோத்தாரி. ஓரங்களில் ஒற்றை இலைகளை அடுக்குகிறார். சில நொடிகளில் அந்த டேபிளின் தோற்றமே மாறிப்போகிறது. கண்களுக்குக் கிடைத்த காட்சி, காத்திருக்கப் பொறுமையின்றி, பசியைத் தூண்டுகிறது.

``உங்க கண்கள்ல பசியை ஃபீல் பண்றீங்களா? அதுதான் டேபிள் ஸ்டைலிங்கின் ஸ்பெஷாலிட்டி...’’ - கண்சிமிட்டிச் சிரிக்கிற அமி கோத்தாரி, இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் ஸ்டைலிஸ்ட்.

ஃபுட் ஸ்டைலிஸ்ட் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். அதென்ன டேபிள் ஸ்டைலிஸ்ட்?

பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்

``ஃபுட் ஸ்டைலிங் என்பது உணவுடன் சம்பந்தப்பட்டது. சமைச்ச உணவை நீங்க எவ்வளவு அழகா காட்டறீங்க என்கிறதுதான் அதுல முக்கியம். ஆனா, டேபிள் ஸ்டைலிங் என்பது சமைக்கப்பட்ட உணவு வைக்கப்படற சூழலை அழகுப்படுத்தற விஷயம். உங்க டைனிங் டேபிளை அழகா டிரெஸ் பண்ணி, அலங்கரிக்கிறதுதான் கான்செப்ட். சாப்பாடுங்கிறது முதல்ல நம்ம கண்களைக் கவரணும். கண்கள் சுவைத்த பிறகுதான் வாய் அதோட ருசியைத் தெரிஞ்சுக்குது. நல்ல சாப்பாடுங்கிறது வெறும் அறுசுவைகள்ல மட்டுமில்லை, அது பரிமாறப்படற விதங்கள்லயும் அடங்கியிருக்குனு காட்டறதுதான் டேபிள் ஸ்டைலிங்...’’ - அழகாக விளக்குபவர், டேபிள் ஸ்டைலிங்கில் தனக்கு ஆர்வம் வந்த கதையைப் பற்றி பேசுகிறார்...

``நான் குஜராத்திப் பொண்ணு. எனக்கு நினைவுதெரிஞ்சு என் வாழ்க்கை, சாப்பாட்டைச் சுத்தியே இருந்திருக்கு. என் அம்மாவும் பாட்டியும் கிச்சன்ல பல மணி நேரத்தைச் செலவழிச்சு, ரசிச்சு சமைக்கிறதைப் பார்த்து வளர்ந்திருக்கேன். எப்போதும் வீட்டுல பார்ட்டி, விருந்துனு சமையல் மணக்கும்.

இன்னிக்குப் பலரும் சமையலறை அலங்காரங்கள் பத்திப் பேசறோம். ஆனா, அதெல்லாம் அந்தக் காலத்துலயே வழக்கத்துல இருந்திருக்கு. என் அம்மாவும் பாட்டியும் உணவுகளைச் சமைக்கிற விதமே அவ்வளவு அழகோடும் அலங்காரத்தோடும் இருக்கிறதைப் பார்த்திருக்கேன். கலர்ஃபுல்லாகவும் இருந்திருக்கு. டெஸர்ட்டையும் ஸ்நாக்ஸையும் அழகழகான வடிவங்களில் செய்து பரிமாறுவாங்க. `உணவை ருசிக்கிறதைவிடவும் ரசிக்கிறது முக்கியம்’னு கத்துக்கொடுத்தவங்க அவங்க ரெண்டு பேரும்.

பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்
பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்

சோஷியல் வொர்க்ல பேச்சிலர் டிகிரி முடிச்சுட்டுச் சிறப்புக் குழந்தைகளுக்காக வேலை பார்த்திட்டிருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு நிறைய பார்ட்டி, டின்னர்னு வீட்ல எப்போதும் விருந்து அமர்க்களப்படும். ஒரு விருந்தைப் பிரமாதப்படுத்தறதுல உணவுகள் மட்டுமில்லாம, டேபிள் அலங்காரமும் எவ்வளவு முக்கியம்கிறதை நான் எங்கம்மாவைப் பார்த்துக் கத்துக்கிட்டிருக்கேன். சிம்பிளான சாப்பாடுகூட அவங்க அலங்காரத்துல பிரமாதமா தெரியும். அதையெல்லாம் நானும் பண்ண ஆரம்பிச்சேன்.

எங்க வீட்டு விருந்துகள்ல என்னோட சாப்பாடு மட்டுமல்லாமல், நான் பண்ற டேபிள் அலங்காரம் எப்போதும் பெரிசா பேசப்பட்டிருக்கு. அந்தப் பாராட்டுகள்தான் எனக்கு டேபிள் டெகரேஷன்ல ஸ்பெஷலைஸ்  பண்ண வெச்சது...’’ என்கிறவர், இந்தக் கலையில் வீட்டுக்கு வெளியே முதன்முதலில் அசத்தியது பற்றி விவரித்தபோது, உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

``எங்க வீட்டுக்குள்ள நடக்கிற விருந்துகளுக்கு மட்டும்தான் டேபிள் ஸ்டைலிங் பண்ணிட்டிருந்தேன். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு ஃப்ரெண்ட் வீட்ல பர்த் டே பார்ட்டி. வருஷா வருஷம் வேற வேற தீம்ல பார்ட்டி நடத்தறது அவங்க வழக்கம். அதுல என்னை டேபிள் ஸ்டைலிங் பண்ணச் சொன்னாங்க. அதுதான் என்னோட முதல் புரொஃபஷனல் அசைன்மென்ட். ரொம்பப் பெரிய அவுட்டோர் பார்ட்டி. படபடப்பா இருந்தேன்.  ஆனாலும், பார்ட்டிக்கு வந்திருந்த ஒவ்வொருத்தரும் என் டேபிள் ஸ்டைலிங்கைப் பாராட்டினாங்க. அது அடுத்தடுத்த வாய்ப்பு களுக்கான வாசலையும் திறந்து வெச்சது. இன்னிக்கு தனிப்பட்ட முறையில பார்ட்டி, ஃபங்ஷன்னு கேட்கறவங்களுக்கு மட்டுமில்லாம, ரெஸ்டாரன்ட், கல்யாணங்கள்னு பெரிய இடங்கள் வரைக்கும் டேபிள் ஸ்டைலிங் பண்றதுல பிஸியா இருக்கேன். பயிற்சி வகுப்புகளும் எடுக்கறேன்...’’ - அசத்துகிற அமி, டேபிள் ஸ்டைலிங் ஏன் அவ்வளவு அவசியம் என்பதற்கும் அழகான காரணங்கள் வைத்திருக்கிறார்.

பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்

``சின்னதோ பெரிசோ... பார்ட்டினு வரும்போது எல்லோரும் சாப்பாடு சுவையா, சூப்பரா இருக்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, மற்ற விஷயங்களைப் பார்க்கறதில்லை. சாப்பாட்டுக்கு மெனக்கெடறதுல கொஞ்சம் டேபிள் அலங்காரத்துக்கும் கொடுக்கலாம். வெறும் பதினஞ்சு நிமிஷ பிளானிங் போதும். பொதுவா வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றதுக்கு சில மணி நேரத்துக்கு முன்னாடி டைனிங் டேபிளை ரெடி பண்ணுவோம். சிலர் அந்த விருந்துக்காக  பரண் மேல போட்டு வெச்சிருந்த புதுப் பாத்திரங்களை எடுத்து உபயோகிச்சுட்டு, விருந்து முடிஞ்சதும் மறுபடி எடுத்து பரண்ல போட்ருவாங்க. அப்படியில்லாம தினமுமே உங்க டைனிங் டேபிளை அழகுபடுத்தறதை வழக்கமா வெச்சுக்கலாம். தினம் சின்னச்சின்ன அலங்காரங்கள் மூலமா அதை மாத்தலாம். இப்படிப் பண்ணிப் பாருங்க... உங்க வீட்டுச் சாப்பாடு கூடுதலா ருசிக்கிறதா எல்லாரும் பாராட்டுவாங்க...’’ - உளவியல் ரகசியம் சொன்னபடியே டேபிள் ஸ்டைலிங் டிப்ஸும் தருகிறார்.

‘`டேபிள் ஸ்டைலிங்னு சொன்னதுமே ‘அதெல்லாம் பணக்காரங்க வீட்டுக் கிச்சனுக்கானது’னு யாரும் நினைக்க வேண்டாம். உங்க டேபிளுக்கு அழகு சேர்க்கணும்கிற நினைப்புதான் முக்கியம். உங்க வீட்ல யாருமே உபயோகப்படுத்தாம ஆங்காங்கே கிடக்கிற எத்தனையோ பொருள்களை வெச்சே உங்க வீட்டு டேபிளை அழகுபடுத்தலாம். எந்த மாதிரியான விருந்து, வரப்போறவங்க யாரு, எந்த வயசுக்காரங்கங்கிறதை முதல்ல முடிவு பண்ணுங்க.

பார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்

அதேநேரம் `அழகுப்படுத்தறேன்’கிற பெயர்ல டேபிள் மேல தேவைக்கு அதிகமான பொருள்களை வைக்காதீங்க.  டேபிளோட நடுப் பகுதியை அழகுப்படுத்தற மாதிரியான ஒரு பொருள் முக்கியம். அந்த சென்ட்டர் பீஸ், காஸ்ட்லியானதா இருக்கணும்னு அவசியமில்லை. காகிதப் பூக்கள்கூட போதுமானவை. அரோமா மெழுகுவத்தியோ, மரத்தோட சின்ன கிளையோகூட உங்க டேபிளோட அழகைப் பல மடங்கு அதிகமாக்கிக் காட்டும்...’’

-  அமி கோத்தாரி சொல்கிறபோதே, நமக்கும் டேபிள் அலங்கார ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.

- ஆர்.வைதேகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு