பிரீமியம் ஸ்டோரி

ஸ்மார்ட் கலாசாரம் வேகமாகப் பரவிவரும் நிலையில், அது வீட்டில் இருக்கும் பொருள்களையும்  விட்டுவைப்பதில்்லை... ஒரு வீட்டின் இதயமான சமையலறையை ஸ்மார்ட்டாக்கும் விதமாகச் சந்தைக்குப் புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட் கிச்சன் கேட்ஜெட்கள் பற்றிய அறிமுகம்

ஆயில் டிஸ்பென்சர்

ஒவ்வொரு சமையலறையிலும்  எண்ணெய் பயன்பாட்டுக்கான ஒரு ஸ்பூன் இருக்கும். அநேக வீடுகளில்  எண்ணெய் பாட்டில் மூடப்படாமல்,  பாட்டிலுக்குள் அந்த ஸ்பூன் கிடைக்கும். எண்ணெய் பாட்டிலுக்குள் தூசு விழவும்  வாய்ப்பிருக்கிறது.

எண்ணெய் பாட்டில் ப்ளஸ் ஸ்பூன்  இவற்றின் அப்டேட் வெர்ஷன்தான் இந்த ஆயில் டிஸ்பென்சர். பாட்டிலில் ஆயில் நிரப்பி டிஸ்பென்சரை அழுத்தினால்  ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் என அளவுகளோடு ஆயில் வருகிறது. ஸ்மார்ட் கிச்சனில் இது முக்கிய பொருள். ஆறு வண்ணங்களில் கிடைக்கக்கூடிய   ஆயில் டிஸ்பென்சர் ஒன்றின் விலை ரூ.590.

கிச்சன் கேட்ஜெட்ஸ்

கோக்கனட் பிரேக்கர்

ஆதிகாலத்தில் இருந்து இப்போது வரை எல்லோருக்கும்  தேங்காய் உடைப்பது என்பது  உளவியல் பிரச்னை. சமையலறை யில் ஏதோ ஒரு மூலையில்  பலம் கொண்ட மட்டும் உடைக்க வேண்டியதில்லை.
கோக்கனட் ப்ரேக்கரில் வைத்து இரண்டே தட்டு தட்டினால் போதும். தேங்காய் உடைந்து விடுகிறது. கொஞ்சம் கனமான பொருளாக இருக்கும் இதன் விலை ரூ.300.

 - ஜார்ஜ் ஆண்டனி
படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு