தலைப்பைப் பார்த்ததும்... ‘என்னது அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா’ என்கிற சந்தேகம் எழும்தானே? `காஸ் அடுப்பும் வேண்டாம்... சிலிண்டரும் வேண்டாம்... மின்சாரமும் வேண்டாம்... எந்த டென்ஷனும் இல்லாமல் விதவிதமாகச் சமைக்கலாம்’ என்றால் அது சூப்பரான விஷயம்தானே!

``அடுப்பில்லாச் சமையல் முறையில் புதுவித சுவைகளில் அசத்தலான பல ரெசிப்பிகளை சுலபமாகச் செய்ய முடியும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களிலிருந்து புதுவிதமான ஒரு டிஷ்ஷை உருவாக்க கொஞ்சம் கற்பனைத் திறன் இருந்தால் போதும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சசிமதன். அவர் அளிக்கும் ருசியும் ஆரோக் கியமும் நிறைந்த ரெசிப்பிகள் இங்கே!

பிஸ்கட் ஸ்லைஸ்

தேவையானவை:

மாரி பிஸ்கட் - 10-12
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
பால் - அரை கப்
பாதாம் - அலங்கரிக்க

செய்முறை:

அனைத்து பொருள்களையும் மிக்ஸியில் பொடிக்கவும். இந்தக் கலவையை ஒரு ட்ரேவில் வைத்து, பாதாம் பருப்பால் அலங்கரித்து ஃப்ரீசரில் 20-25 நிமிடங்கள் வைத்தெடுத்து கட் செய்து பரிமாறவும்.

ஓரியோ மில்க் ஷேக்

தேவையானவை:

ஓரியோ பிஸ்கட் - 10
சாக்லெட் ஐஸ்க்ரீம் - அரை கப்
வெனிலா ஐஸ்க்ரீம் - முக்கால் கப்
பால் - அரை கப்
இன்ஸ்டென்ட் காபி பொடி - அரை டீஸ்பூன்
அலங்கரிக்க:
க்ரீம், ஓரியோ பிஸ்கட் தூள் - சிறிதளவு

செய்முறை:

முதலில் ஓரியோ பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். அதனுடன் சாக்லேட் ஐஸ்க்ரீம், வெனிலா ஐஸ்க்ரீம், பால், காபி பொடி சேர்த்து நுரைக்க அடித்து ஒரு நீளமான க்ளாஸில் ஊற்றி ஓரியோ பிஸ்கட் தூள், க்ரீம் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

பாப்கார்ன் கேக்

தேவையானவை:

வெனிலா கேக் தூள், பாப்கார்ன் தூள் - தலா ஒரு கப்
சர்க்கரை பொடித்தது - 2 டேபிள்ஸ்பூன்
கொக்கோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பால் - தேவையான அளவு
ஜெம்ஸ் - அலங்கரிக்க

செய்முறை:

வெனிலா கேக்கை நன்றாக உதிர்த்து அதனுடன் பாப்கார்ன் தூள் (மிக்ஸியில் பொடிக்கவும்) சர்க்கரை பவுடர், கொக்கோ பவுடர் கலந்து திட்டமான பால் சேர்த்து இக்கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு அழுத்திக் கவிழ்க்கவும். இது மிகவும் சுவையுடன் சாஃப்ட் கேக் போல் இருக்கும். அதன் மேல் ஜெம்ஸ் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

பாதி கலவையில் கொக்கோவும் பாதி கலவையில் கொக்கோ கலக்காமலும் வைத்து ஒன்றன் மேல் ஒன்றாகக் கிண்ணத்தில் அழுத்தி இரண்டு கலர் கேக் போலவும் வைக்கலாம்.

மாதுளை மைட்டி

தேவையானவை:

மாதுளை முத்துகள் - ஒரு கப்
சப்போட்டா பழம் - 2
வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாதுளை முத்துகளுடன் சப்போட்டா, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும். பிறகு, அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி பருகவும்.

பேல் பொரி

தேவையானவை:

பொரி - ஒரு கப்
வெங்காயம், கேரட், தக்காளி நறுக்கியது - தலா கால் கப்
கொத்தமல்லி - அலங்கரிக்க
ஸ்வீட் சட்னி, காரச் சட்னி - தேவையான அளவு
ஓமப்பொடி - கால் கப்
காராபூந்தி - கால் கப் (தேவையானால்)
செய்முறை:
ஸ்வீட் சட்னி
பேரீச்சம் பழம் - 2 - 3
வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - கோலி அளவு

தண்ணீரில் அனைத்தையும் சிறிது நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்பு அரைத்த விழுதை அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கிளறி எடுக்கவும். இதுவே ஸ்வீட் சட்னி.

காரச் சட்னி

கொத்தமல்லி - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதுவே காரச் சட்னி.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், தக்காளி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து பரிமாறும்போது காரச் சட்னி, ஸ்வீட் சட்னி, ஓமப்பொடி, காராபூந்தி, பொரி, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் வறுத்த வேர்க்கடலை சேர்த்துக்கொள்ளலாம்.

பொட்டுக்கடலைப் பொடி

தேவையானவை:

பொட்டுக்கடலை,
சர்க்கரை - தலா கால் கிலோ
ஏலக்காய் - 6-7

செய்முறை:

பொட்டுக்கடலை, சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். இதை ஒரு காற்று புகா டப்பாவில் வைத்து, தினம் குழந்தைகளுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் கொடுத்தால் மிகவும் நல்லது.

குறிப்பு:

இந்த மாவை நெய்விட்டு உருண்டைகளாகவும் பிடித்து
வைத்துக் கொள்ளலாம்.