Published:Updated:

"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!
"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!

ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

பிரீமியம் ஸ்டோரி

‘உனக்குச் சமையலைத் தவிர வேறு என்ன தெரியும்?’ என்ற நிலையை, ‘ஓ... சமைக்கத் தெரியுமா? அப்போ நெட்டில் கலக்கலாம்’ என்பதாக மாற்றிவருகிறார்கள், ஃபுட் பிளாக், ரெசிப்பி வெப்சைட்கள் என ஹிட் அடித்திருக்கும் பெண்கள் பலர். அவர்களில் ஒருவர், பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் சித்ரா செந்தில். இவருடைய சித்ரா’ஸ் ஃபுட் புக் டாட் காம் (www.chitrasfoodbook.com) மிகவும் பிரபலம்.

``நான் பிறந்தது, வளர்ந்தது, பி.இ முடித்தது எல்லாம் சேலத்தில். திருமணமாகும்வரையில் சமைக்கத் தெரியாது. திருமணத்துப்பின் கணவருக்கு ஆசை ஆசையாக சமைத்துக்கொடுத்து அசத்த வேண்டும் என்பதற்காகச் சமையல் கற்றுக்கொண்டேன். அம்மா, மாமியாரிடமிருந்து தஞ்சை மற்றும் நெல்லை மாவட்டச் சமையலைக் கற்றுக் கொண்டேன்.

"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!

டெக்னிக்கல் பிளாக் நடத்திவரும் என் கணவர், எனக்கு ஃபுட் பிளாக்கை அறிமுகம் செய்தார். சமையல் அனுபவம் இல்லாத தோழிகளுக்காக ‘Ratatouille - Anyone Can Cook’ என்ற பெயரில் சைவ சமையல் ஃபுட் பிளாக்கை 2009-ல் தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. 2013-ல் என்னுடைய பிளாக்கை ஒரு வெப்சைட்டாக அடுத்த நிலைக்கு மாற்றினேன். என் பெயர் நெட்டிசன்களிடம் பிரபலமாகிவிட்டதால் சித்ரா’ஸ் ஃபுட் புக் டாட் காம் என அதை என் பெயரிலேயே ஆரம்பித்தேன்.

தமிழ்நாட்டு உணவுகளுடன் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளையும், முட்டை சேர்க்காத எக்லெஸ் பேக்கிங் உணவுகளையும் தற்போது எழுதிவருகிறேன். ‘நீங்கதான் சித்ரா’ஸ் ஃபுட் டாட் காம் சித்ராவா?’ என்று என்னைப் பலரும் வியப்புடன் விசாரிக்கும்போது, என் கணவருக்கும், மகளுக்கும் ஒரே பெருமை’’ - சொல்லும்போது பரவசம் பெருகுகிறது அவர் முகத்தில். 

"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!

``என் பெங்களூரு தோழிகளிடம் நான் கற்றுக் கொண்ட ஷெங்க ஹிண்டி, தட்டை இட்லி, ஹசி மெனசினகாய் சட்னி என மூன்று விதமான கர்நாடக உணவு வகைகளை இங்கு செய்து காட்டுகிறேன்’’ என்று தயாரானார் சித்ரா. 

``ஷெங்க ஹிண்டி... இது வேர்க்கடலையைக் கொண்டு செய்யும் ஒரு பொடி வகை. கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. கர்நாடக மக்கள் இந்தப் பொடியுடன் தயிர் சேர்த்து, சோள மாவு ரொட்டியுடன் சாப்பிடுவர். இட்லி, தோசையுடனும் பரிமாறலாம்.

சூடான சாதத்தில் இந்தப் பொடியை நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். இந்தப் பொடியைக் கத்திரிக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய் பொரியல் வகைகளிலும் சேர்க்கலாம். இதில் புரதச்சத்து அதிகமிருப்பதால் பெரியவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் நல்லது. இது 15 நாள்கள் வரை நன்றாக இருக்கும். இந்தச் சுவையான, செய்வதற்கு எளிய வேர்க்கடலைப் பொடியின் செய்முறையைப் பார்ப்போம்.”

1. ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

ஷெங்க ஹிண்டி

தேவையானவை:

 வேர்க்கடலை - ஒரு கப்
 பூண்டு - 6 பல்
 சீரகம் – ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!
"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!

குறிப்பு:

மைக்ரோவேவ் அவனில் வேர்க்கடலையை 3 நிமிடங்கள் ஹை பவரில் வைத்தும் வறுக்கலாம். தோல் நீக்க வேண்டாம்.

2. ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

தட்டு இட்லி

தேவையானவை:

 இட்லி அரிசி - 2 கப்
 வெள்ளை உளுத்தம்பருப்பு - அரை கப்
 கெட்டி அவல் - கால் கப்
 ஜவ்வரிசி - கால் கப்
 சமையல் சோடா - ஒரு சிட்டிகை
 தண்ணீர், உப்பு - தேவையான அளவு

"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!
"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!

குறிப்பு:

அவலுக்குப் பதிலாகப் பழைய சாதம் சேர்த்தும் செய்யலாம்.

3. ஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்

ஹசி மெனசினகாய் சட்னி

தேவையானவை:

 பச்சை மிளகாய் - 15
 பெரிய வெங்காயம் - ஒன்று
 புளி - நெல்லிக்காய் அளவு
 பூண்டு - 4 பல்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 வெல்லம் அல்லது சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை – ஒன்றரை டீஸ்பூன்
 சீரகம் – ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!
"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா!

குறிப்பு:

இந்தச் சட்னியை ஃப்ரிட்ஜில் வைத்து பல நாள்கள் உபயோகிக்கலாம். இதை சூடான இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு