
‘குக்கரி வெப்சைட்’டில் கலக்கும் ஷர்மிலி
“ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். திருமணத்துக்குப் பிறகும் சமைக்கக் கற்றுக்கொள்ளவில்லை. இன்று என் வாழ்க்கை அப்படியே என்னை வேறு திசையில் கொண்டுவந்து வெற்றியாளராக நிறுத்தியிருக்கிறது” உற்சாகமாகப் பேசுகிறார், கோயம்புத்தூரில் வசிக்கும் ஷர்மிலி ஜெயப்பிரகாஷ்.sharmispassions.com என்ற தன் குக்கரி வெப்சைட்டில் பிஸியாக இருப்பவர், அது உருவான கதையைச் சொன்னார்...
``எம்.சி.ஏ முடித்த பின்னர், பல ஆண்டுகளாக ஐ.டி வேலையில் இருந்தேன். திருமணத்துக்குப் பின்னர்தான் என் தோழிகள் பலரும் சமைக்கக் கற்றுக் கொண்டனர். ஆனால், எனக்கு அப்போதும் அந்த அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில், என் அம்மா என்னுடன் இருந்ததால், தண்ணீர் குடிக்க மட்டுமே கிச்சனுக்குள் சென்றுவந்தவளாக இருந்தேன். ஒரு திருப்பமாக நான் கர்ப்பமடைந்த பின், நான் சாப்பிடுவது எனக்குள் வளரும் குட்டி உயிருக்குமானது என்றான பிறகு, சாப்பாட்டின் மீது என் கவனம் அதிகரித்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரோக்கியமான உணவுகள் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தபோது, `உணவு என்பது இவ்வளவு பெரிய உலகமா?’ என்று அசந்தே விட்டேன்.
‘நெட்டில் நீ பார்த்து வியக்கும் அந்த உலகம் ஆரம்பிப்பது, நம் வீட்டுக் கிச்சனில் இருந்துதான்’ என்று அம்மா சொல்ல, ஆசை ஆசையாகச் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 2009-ல் ஃபுட் ப்ளாகிங் (Food Blogging) எழுத ஆரம்பித்தேன். அது நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பு இன்றுவரையும் தொடர்கிறது.
2012-ல் என் ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தை வளர்ப்பிலும், ரெசிப்பிகளிலும், என் வலைதளத்திலும் கவனம் செலுத்தினேன்.

அம்மாவின் கைப்பக்குவமே நான் படித்த பாடங்கள். புதுமையான ரெசிப்பிகளே என் வலைதளத்தின் பலம். என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகள் சூழ்ந்திருப்பதால், வீடியோக்களில் கவனம் செலுத்த இயலவில்லை. என் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கணவர் கிடைத்திருப்பதால், என் எண்ணங்கள் எல்லாம் செயலாகி வருகின்றன. எனவே, விரைவில் வித்தியாசமான ரெசிப்பிகளை வீடியோக்களுடனும் பதிவிடுவேன்.
பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கலாசாரங்களை இணைத்துச் செய்யப்படும் உணவுகளுக்கு ‘ஃப்யூஷன் ரெசிப்பிகள் (Fusion Recipes)’ எனப் பெயர். இதற்கென வரைமுறைகள் எதுவும் இருக்காது. விருப்பம்போல் செய்து சாப்பிடலாம். நம் கற்பனைத்திறனுக்குச் சவால் என்றே சொல்லலாம். இங்கு ஐந்து ஃப்யூஷன் ரெசிப்பிகளை வழங்குகிறேன்... வாருங்கள் சுவைக்கலாம்!”
செஷ்வான் தோசை
தேவையானவை:
தோசை மாவு - ஒரு கப்
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (வெள்ளை) - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (பச்சை) - ஒரு டேபிள்ஸ்பூன்
நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்
நீளவாக்கில் நறுக்கிய பச்சை நிற குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
நீளவாக்கில் நறுக்கிய கேரட் - கால் கப்
நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்
செஷ்வான் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



பீட்சா பராத்தா
தேவையானவை:
சப்பாத்தி மாவு - அரை கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சிவப்பு குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த ஆரிகானோ தூள் - கால் டீஸ்பூன்
உலர்ந்த மிளகாய் செதில்கள் - கால் டீஸ்பூன்
வேகவைத்த சிறிய சோளம் - 2
பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீஸ் துருவல் – கால் கப்
உப்பு - தேவையான அளவு



பீட்சா பணியாரம்
தேவையானவை:
தோசை மாவு - ஒரு கப்
நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - அரை கப்
கேரட் துருவல் - கால் கப்
உலர்ந்த ஆரிகானோ தூள் - கால் டீஸ்பூன்
உலர்ந்த மிளகாய் செதில்கள் - கால் டீஸ்பூன்
பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீஸ் துருவல் – கால் கப்
உலர்ந்த ஆரிகானோ தூள், உலர்ந்த மிளகாய் செதில்கள் (மேலே தூவ) - சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு



இட்லி சாண்ட்விச்
தேவையானவை:
இட்லி - 3
சீரகம் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் துருவல் - கால் கப்
உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயத் துண்டுகள் - 3
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



வெங்காய தோசை வாஃபிள்ஸ்
தேவையானவை:
தோசை மாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


