ஒரேமாதிரியான ஹோட்டல்களில் ஒரேமாதிரியாகச் சாப்பிட்டுச் சாப்பிட்டுப் போரடித்துப்போனவர்கள் கண்டுபிடித்த கான்செப்ட்தான் ‘தீம் ரெஸ்டாரன்ட்’. உலகம் முழுவதும் விதவிதமான ரெஸ்டாரன்ட்களுக்கான கான்செப்ட்களை உருவாக்குவதற்குத் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

சரி, அவர்கள் பிய்த்துக்கொள்ளட்டும். நாம் அப்படி ஒரு வித்தியாசமான ‘தீம் ரெஸ்டாரன்ட்’ பற்றிப் பார்ப்போம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் உள்ள சான் பாப்லோ நகரின் புறநகர் பகுதியில் இருக்கிறது இந்த ரெஸ்டாரன்ட். செழிப்பு மிகுந்த பகுதியான அங்கு புலாக்கின் நதி ஓடுகிறது.

வருடம் முழுவதும் நீர் பெருக்கெடுத் தோடும் ஜீவநதி இது. இந்த நதியின் கரையில் அமைந்துள்ளது ‘வில்லா எஸ்டுரோ’ ரிசார்ட். புலாக்கின் நதியிலிருந்து அரசு அனுமதியுடன் சிறு செயற்கைக் கால்வாய் அமைத்து இந்த ரிசார்ட்டினுள் வரவைத்துள்ளனர்.

அங்கு ஒரு தடுப்பணை கட்டி அதிலிருந்து பெருகும் நீரைச் செயற்கை அருவியாக மாற்றியுள்ளனர். காலுக்குக் கீழ் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் நீர், கண்ணெதிரே கண்ணாடித் துண்டுகள் உடைந்து விழுவதைப்போல கொட்டும் சிறு அருவி, அடர் மரங்கள் சூழ்ந்த சூழல் என அந்த இடமே இயற்கை அற்புதமாகக் காட்சியளிக்கிறது.

குற்றாலத்தில் குளிரக்குளிர குளித்துவிட்டு வரும்போது மனதும் வயிறும் உடனடியாகத் தேடுவது உணவகங்களைத்தான். இங்கோ, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம். குளித்தவுடன் சுடச்சுட உணவும் அதே இடத்திலேயே பரிமாறப்படும்.

இங்கு கிடைக்கும் உணவுகளில் முக்கியமானது லம்பியா (Lumpia). இறாலைக் கோதுமை மாவில் சுற்றி, பொரித்து எடுக்கப்படும் பண்டம் இது.

சிக்கன் லெக்பீஸ்களை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து சோயா சாஸில் சமைக்கும் சிக்கன் பிஸ்டெக் (ChickenBistek), நம்ம ஊர் பொங்கல் மாதிரியான பைகோ (Biko) என்று புதிய வகை உணவுகளும் இங்கு பரிமாறப்படுகின்றன.

இந்த உணவகத்தின் அழகிய போட்டோக்களைப் பார்த்தாலே வயிறு நிரம்பிடுமே!

- வரவணை செந்தில்