கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து தொடர்கின்றன கொண்டாட்டங்கள். இவை மட்டுமல்லாமல் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள் என மற்ற நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியதாக விளங்குகிறது கேக்.

இன்றைய நாள்களில் அனைவராலும் விரும்பப்படும் கேக்கை வீட்டிலேயே தயாரித்துச் சுவைத்து மகிழ... சைவ உணவுகளை உண்பவர்கள், விரத நாள்களைக் கடைப்பிடிப்பவர்கள் சாப்பிடும் விதமாக... எக்லெஸ் கேக், குக்கீஸ் ரெசிப்பிகளை நமக்காகச் செய்து அசத்துகிறார், சமையல் கலைஞர் ஸ்வாதி நந்தினி.

குலாப் ஜாமூன் கேக்

தேவையானவை:

குலாப் ஜாமூன் மிக்ஸ் - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
சர்க்கரை - அரை கப்
எண்ணெய் - கால் கப்
பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை – சிறிதளவு

அலங்கரிக்க:

குலாப் ஜாமூன் - 3 (துண்டுகளாக்கவும்)

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். குலாப் ஜாமூன் மிக்ஸுடன் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். சர்க்கரையுடன் எண்ணெய், பால் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பிறகு, இதனுடன் மாவுக் கலவைச் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 30 நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறிய பின்பு பொடித்த சர்க்கரை தூவி, குலாப் ஜாமூன் துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும்.

குறிப்பு: ஒரு கப் = 250 கிராம்.

கோதுமை - பனீர் கேக்

தேவையானவை:

பனீர் துண்டுகள் - 20
கோதுமை மாவு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்புக்கு சற்று அதிகமாக
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - 3 டேபிள்ஸ்பூன்
பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். பனீரைக் கைகளால் நன்கு உதிர்த்து சர்க்கரை, எண்ணெய், வினிகர் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், பனீர் கலவை, டூட்டி ஃப்ரூட்டி, பால் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும்.

டூட்டி ஃப்ரூட்டி - ரவை கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை:

ரவை - 2 கப்
டூட்டி ஃப்ரூட்டி - 1/3 கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - 1/3 கப்
வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். ரவையுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தயிர், எண்ணெய், டூட்டி ஃப்ரூட்டி, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும் (தேவையானால் சிறிதளவு பால் சேர்த்துக் கலக்கலாம்). இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி ப்ரீஹீட் செய்த அவனில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறிய பின் பொடித்த சர்க்கரை தூவி அலங்கரிக்கவும்.

சுகர் ஃப்ரீ பப்பாயா கேக்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்
ரவை - அரை கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
பப்பாளி ப்யூரி - ஒன்றரை கப்
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - அரை கப்
டேட் சிரப் - கால் கப்
தேன் - கால் கப்

அலங்கரிக்க:

டேட் சிரப் - சிறிதளவு

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். பப்பாளி ப்யூரியுடன் எண்ணெய், தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். இதனுடன் ரவை, பப்பாளி ப்யூரி, ரோஸ் வாட்டர், டேட் சிரப் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறியதும் மேலே சிறிதளவு டேட் சிரப் ஊற்றி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: பப்பாளியின் தோல், விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்தால் பப்பாளி ப்யூரி தயார்.

கோதுமை - குல்கந்து கேக்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒன்றரை கப்
கண்டன்ஸ்டு மில்க் - ஒன்றரை கப்
குல்கந்து - 1/3 கப்
ரோஸ் எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
பால் - ஒன்றே முக்கால் கப்
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

அலங்கரிக்க:

குல்கந்து - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்துச் சலிக்கவும். குல்கந்துடன் ரோஸ் எசென்ஸ், எலுமிச்சைச் சாறு, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் மாவு கலவையைச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறியதும் குல்கந்தை மேலே தடவி அலங்கரித்துப் பரிமாறவும்.

பேசன் கீ குக்கீஸ்

தேவையானவை:

கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த முந்திரி, பாதாம் கலவை - கால் கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - அரை கப்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

கடலை மாவுடன் அரிசி மாவு சேர்த்துச் சலிக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். சலித்த மாவுடன் சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய நெய்யைச் சிறிது சிறிதாகவிட்டு மென்மையாகப் பிசையவும். இந்த மாவுக் கலவையை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு, மாவைச் சமப்படுத்தி குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும் (சிறிய உருண்டைகளாக்கித் தட்டியும் வைக்கலாம்).
பேக்கிங் ட்ரேயில் நெய் தடவி, சிறிதளவு கடலை மாவைத் தூவவும். அதன்மீது குக்கீஸ்களை இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். சுவையான கடலை மாவு நெய் பிஸ்கட் தயார்.

தம்ப் பிரின்ட் கஸ்டர்ட் ஜாம் கேக்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்
கஸ்டர்ட் பவுடர் - அரை கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
ஜாம் - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலித்து எடுக்கவும். ஜாமை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து உருக்கி எடுக்கவும். சர்க்கரையுடன் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் தயிரைச் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு கோதுமை மாவு, கஸ்டர்ட் பவுடர், சோள மாவு, வெனிலா எசென்ஸ் சேர்த்து மென்மையாகப் பிசையவும். இந்த மாவைச் சமப்படுத்தி வட்ட வடிவமாக குக்கீஸ் கட்டரால் வெட்டி எடுக்கவும். அதன் நடுவில் கட்டை விரலை வைத்துச் சிறிய குழி செய்து, குழிகளில் உருக்கிய ஜாமை வைத்து நிரப்பவும். எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 12 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். மேலே சிறிதளவு சர்க்கரையைத் தூவி ஆறவிடவும். சுவையான தம்ப் பிரின்ட் ஜாம் குக்கீஸ் தயார்.

ராகி அண்ட் வீட் குக்கீஸ்

தேவையானவை:

ராகி மாவு (கேழ்வரகு மாவு) - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
குளிர்ந்த வெண்ணெய் (cold butter) - அரை கப்
பால் - 3 டேபிள்ஸ்பூன் (காய்ச்சி ஆறவைத்தது)

செய்முறை:

கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலிக்கவும். வெறும் வாணலியில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும். அதனுடன் கோதுமை மாவு, குளிர்ந்த வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கைகளால் உதிர் உதிராகப் பிசிறவும். பிறகு, பால் சேர்த்து மென்மையாகப் பிசைந்து பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பிறகு, அதைச் சமப்படுத்தி குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும். எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 15 முதல் 18 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறியதும் ஒரு கப் பாலுடன் பரிமாறலாம்.

ஜிஞ்சர் பிரெட் மேன் குக்கீஸ் (கிறிஸ்துமஸ் குக்கீஸ்)

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
பொடித்த வெல்லம் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 1/3 கப்
உப்பு - கால் டீஸ்பூன்
தண்ணீர் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பட்டைத்தூள் - ஒரு டீஸ்பூன்
சுக்குத்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலித்து எடுக்கவும். இதனுடன் உப்பு, எண்ணெய், வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள், கிராம்புத்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பிசையவும். இதை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பிறகு, அதை சமப்படுத்தி `ஜிஞ்சர் பிரெட் மேன்’ வடிவிலான குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும். குக்கீஸ்களை எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 15 முதல் 18 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும்.

க்ரான்பெர்ரி சுகர் குக்கீஸ்

தேவையானவை:

மைதா மாவு - ஒன்றரை கப்
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் எண்ணெய் - 1/3 கப்
வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
உலர்ந்த க்ரான்பெர்ரி - கால் கப்

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துச் சலிக்கவும். தேங்காய் எண்ணெயுடன் வெனிலா எசென்ஸ், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கவும். இதனுடன் சலித்த மாவு, உலர்ந்த க்ரான்பெர்ரி சேர்த்து நன்கு பிசையவும். இதை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு, அதை சமப்படுத்தி குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும். எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கி, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 10 முதல் 12 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும்.