Published:Updated:

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!
சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

கிச்சன் பேஸிக்ஸ் - விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள் - வீடியோ: லக்ஷ்மி வெங்கடேஷ்

பிரீமியம் ஸ்டோரி

ல்லெண்ணெயில் இட்லி மிளகாய்ப்பொடியைக் குழைத்து, இட்லியைப் பிய்த்து அதில் தொட்டு, வாயில் போட்டு உள்ளே தள்ளும்போது, நாவில் பரவும் `சுர்’ரென்ற சுவை, சமையல் தொடர்பான சந்தோஷங்களில் முக்கிய மான ஒரு வகை. கடந்த சில இதழ்களாக சாம்பார், ரசம் என்று சுவை உலகத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் இம்முறை இட்லி - தோசைக்குத் தொட்டுகொள்ள விதம்விதமான பொடிகள் தயாரிக்க உதவும் ஒரு கைடு.  

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

இட்லி - தோசைக்குச் செய்யும் பொடிகள் கொரகொரப்பாக இருக்க வேண்டும். மிகவும் நைஸாக அரைத்தால் சுவை குறைந்து போகும். பொடிக்கு வறுக்கும் அனைத்து பொருள்களையும் மிதமான சூட்டில் வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். காய்ந்த மிளகாயைச் சிறிதளவு எண்ணெயில் நன்கு நிறம் மாறும் வரை மிகவும் குறைவான தீயில் வறுக்க வேண்டும். புளியை வறுக்கத் தேவையில்லை. அனைத்து பொருள்களையும் வறுத்து முடித்த பிறகு வாணலி சூடாக இருக்கும்போதே அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்தால் போதும்.

இட்லி - தோசைப் பொடிகளை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். பொடிகளை அரைத்த உடன் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். தேவைக்கு ஏற்றவாறு பொடியைச் சின்ன டப்பாவுக்கு மாற்றி உபயோகிக்கவும். ஃப்ரெஷ் தேங்காய் அல்லது பூண்டு சேர்த்துச் செய்யும் பொடிகளை 15 நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

இந்தப் பொடிகளை இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் தேவையான அளவு பொடி போட்டு நெய் அல்லது நல்லெண் ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட வேண்டும்.  

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

இவற்றைக் குழம்பு, பொரியலுக்குச் சுவை கூட்ட பயன்படுத்தலாம். வற்றல் குழம்பு, கெட்டிக் குழம்பு போன்றவற்றில் குழம்பு கொதிக்கும்போது சேர்த்தால் குழம்புக்கு அடர்த்திக்கொடுப்பது மட்டுமல்லாமல் சுவையும் அதிகரிக்கும். பொரியல் செய்யும்போது கடைசியாக ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.

பேஸிக் இட்லி - தோசைப் பொடி

செய்முறை:

உளுந்து மற்றும் கடலைப்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக மிதமான சூட்டில் சிவக்க வறுத்து எடுக்கவும். எள்ளை வெறும் வாணலியில் மிதமான சூட்டில் படபடவென்று பொரியவிட்டு எடுக்கவும். அதே வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாயை மிகவும் சிறு தீயில் நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.  

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

அடுப்பை அணைத்துவிட்டு வாணலி சூடாக இருக்கும்போதே அதில் புளி, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்துச் சூடாக விடுங்கள்.

சூடு ஆறியதும் முதலில் உப்பு, புளி, பெருங்காயம் மற்றும் மிளகாயை மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி ஒரு பத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். உளுந்து மற்றும் கடலைப்பருப்பையும் இதேபோல் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.

அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு மறுபடியும் மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடைசி முறை அரைக்கும்போது அதில் எள்ளையும் சேர்த்து அரைக்கவும். 

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இந்தச் செய்முறையைப் பின்பற்றி கீழே கொடுத்துள்ள அனைத்து விதமான பொடிகளையும் தயாரிக்கலாம்.

*துருவிய தேங்காய் சேர்த்துச் செய்யும் பொடிகளில், கொப்பரைத் தேங்காய் அல்லது ஃப்ரெஷ் தேங்காய் பயன்படுத்தி செய்யலாம். ஃப்ரெஷ் தேங்காய் பயன்படுத்தினால் தேங்காய் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். கொப்பரைத் தேங்காய் பயன்படுத்தினால் ஓரிரு நிமிடங்கள் வறுக்கவும்.

*பூண்டு சேர்த்து செய்யும் பொடிகளில், பூண்டை ஓரிரு நிமிடங்கள் சூடுபடுத்தினால் போதுமானது.

*கறிவேப்பிலை பயன்படுத்தினால், கால் டீஸ்பூன் எண்ணெயில் மிதமான சூட்டில் நன்கு சலசலவென்று வரும்வரை வறுக்க வேண்டும். கறிவேப்பிலை கறுகாமல், பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.

*வேர்க்கடலை, கொள்ளு, ஆளிவிதை, பச்சைப் பயறு, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, மல்லி (தனியா), சீரகம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தும்போது, நன்கு வாசம் வரும் வரை வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிதளவு நெய்யில் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.  

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

*கீரைப் பொடிகள் செய்வதற்கு, முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, முடக்கத்தான் கீரை, தூதுவளைக்கீரை இவற்றில் ஏதேனும் ஒரு வகை கீரையைப் பயன்படுத்தவும். கீரைகளைச் சுத்தம் செய்து, நிழலில் நன்கு உலர்த்தி பயன்படுத்தவும். உலர்ந்த கீரைகளை வெறும் வாணலியில் நன்கு சலசலவென்று வரும்வரை சூடுபடுத்தவும். அரைக்கும்போது, அனைத்துப் பொருள்களையும் அரைத்த பிறகு, கடைசியாகக் கீரையைச் சேர்த்து அரைக்கவும்.

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ  ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். 

சுவைக்கத் தூண்டும் சூப்பர் பொடி வகைகள்!

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு