Published:Updated:

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

``கோடை வெயிலில்  சுற்றிக்  களைத்து  வீடு  திரும்பி,  ஃப்ரிட்ஜிலிருந்து  பாட்டில் குளிர்பானங்களை எடுத்துக்  குடிக்கிறோம். சர்க்கரையும்  கலோரிகளுமே  நிறைந்து காணப்படும் இவற்றைத் தவிர்த்து... இயற்கையின்  வரப்பிரசாதங்களான பழங்கள்,  இளநீர் போன்றவற்றைப் பயன்படுத்தி ஜூஸ், மாக்டெய்ல் வகைகளைத் தயாரித்து அருந்தினால் சுவையும் அமோகம்; ஆரோக்கியத்துக்கும் நல்லது’’ என்கிறார் சமையல் கலைஞர் ஜானகி அசாரியா.

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

இதோ... அப்படிப்பட்ட வித்தியாசமான கூலர்ஸ் ரெசிப்பிகளை அழகிய படங்களுடன் வழங்குகிறார்.
ஜில் ஆகலாம்!

ஜானகி அஸாரியா

ஆரஞ்சு - தக்காளி சாங்ரியா

தேவையானவை:  
 ஆரஞ்சுப்பழச் சாறு - ஒரு  கப்
 பழுத்த தக்காளி - 2
 பேசில் இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய  துண்டு  
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
தக்காளியை வெந்நீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து எடுத்துத் தோல்  உரித்து விதைகளை நீக்கி நறுக்கவும். அதனுடன் இஞ்சி சேர்த்து மிக்ஸியில்  அரைத்தெடுக்கவும். பிறகு ஆரஞ்சுப்பழச் சாறு, தேன் சேர்த்துக் கலக்கவும். பேசில் இலைகளை லேசாகக் கசக்கி மேலே சேர்க்கவும். அதனுடன் ஐஸ்கட்டிகள்  சேர்த்து `ஜில்’லென்று பரிமாறவும்.

வாட்டர்மெலன் கூலர்

தேவையானவை:

 தோல் சீவி, நறுக்கிய
தர்ப்பூசணித் துண்டுகள் - 2 கப்
 தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 புதினா இலைகள் - சிறிதளவு
 கறுப்பு உப்பு (அ)
சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
தர்ப்பூசணித் துண்டுகளுடன் இஞ்சி, எலுமிச்சைச் சாறு,  சிறிதளவு தண்ணீர், புதினா  இலைகள் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் கறுப்பு உப்பு (அ) சாட்  மசாலாத்தூள் சேர்த்து, ஃப்ரிட்ஜில்  குளிரவைத்துப் பரிமாறவும்.

மொஹிதோ

தேவையானவை:  
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 சோடா வாட்டர் - ஒரு டம்ளர்
 புதினா இலைகள் - சிறிதளவு
 உப்பு - ஒரு  சிட்டிகை (விரும்பினால்)
 ஐஸ்கட்டிகள் - சிறிதளவு   

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
புதினா இலைகளை லேசாக கைகளால் கசக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு,  உப்பு, ஐஸ்கட்டிகள், சோடா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கிரீன் டீ லெமனேட்

தேவையானவை:  
 கிரீன்  டீ  பேக்ஸ் - 2
 எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 தேன் - ஒரு  டீஸ்பூன்
 ஐஸ்கட்டிகள் -  தேவையான  அளவு  

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
பாத்திரத்தில் 2 கப் தண்ணீரைக்  கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் கிரீன் டீ பேக்ஸைப் போட்டு டீ டிகாக்‌ஷன் தயாரிக்கவும்

(டீ பேக்ஸைப்  போட்டு  கொதிக்கவிடக் கூடாது). இதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். இதனுடன் தேன்,  எலுமிச்சைச் சாறு, ஐஸ்கட்டிகள் சேர்த்து  `ஜில்’லென்று பரிமாறவும். ஹெல்த்தியான சம்மர் டிரிங்க் இது.

மெலன் - கோகனட் மெட்லி

தேவையானவை:
 தோல் சீவி, நறுக்கிய முலாம்பழத் துண்டுகள் அல்லது கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப்
 இளநீர் - ஒன்று

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
இளநீரை உடைத்துத் தண்ணீர், வழுக்கையைத் தனித்தனியாக எடுத்து வைக்கவும். முலாம் (அ) கிர்ணிப்பழத் துண்டுகளுடன் இளநீர் வழுக்கை, தேவையான அளவு இளநீரைச் சேர்த்துக் கெட்டியாக மில்க்‌ஷேக் போல  அரைத்தெடுக்கவும். இதை ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து `ஜில்’லென்று  பரிமாறவும்.

ஆம் பன்னா

தேவையானவை:
 அதிகம் புளிப்பு  இல்லாத  மாங்காய் - ஒன்று (தோல் சீவி, துண்டுகளாக்கவும்)
 பொடித்த வெல்லம் -
2  டேபிள்ஸ்பூன்
 குங்குமப்பூ - சிறிதளவு  

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
குக்கரில் மாங்காயுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வெல்லத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக்  கொதிக்கவிட்டு வடிகட்டவும்.  அதனுடன் அரைத்த மாங்காய்  விழுது, குங்குமப்பூ சேர்த்துக்  கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துக்  குளிர்ந்த பிறகு பரிமாறவும் (விரும்பினால் கறுப்பு உப்பு கால் டீஸ்பூன் சேர்க்கலாம்).
சன் ஸ்ட்ரோக்கைக் குணப்படுத்தும்  ஒரு நல்ல பானம் இது.

கிரேப் - பொமெக்ரானேட் டேங்கோ

தேவையானவை:
 இனிப்பான விதைகள் இல்லாத கறுப்பு  திராட்சை - ஒரு கப்                              
 மாதுளை முத்துகள் - ஒரு கப்
 எலுமிச்சைச்  சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 நாட்டுச் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:  
கறுப்பு திராட்சையுடன் மாதுளை  முத்துகளைச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, நாட்டுச்  சர்க்கரை சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில்   குளிரவைத்து `ஜில்’லென்று பரிமாறவும்.

பைனாப்பிள் கோலாடா

தேவையானவை:
 தோல் சீவி நறுக்கிய பைனாப்பிள்  துண்டுகள் - ஒரு கப்
 தேங்காய்ப்பால் - அரை  கப்
 காய்ச்சி, ஆறவைத்த பால் - அரை கப்
 பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
மிக்ஸியில் பைனாப்பிள் துண்டுகள், பால்,  தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து நன்றாக  அரைத்தெடுக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு `ஜில்’லென்று  பரிமாறவும்.  

கிவி ட்விஸ்ட்டர்

தேவையானவை:

 கிவி - 2 (தோல் சீவி,
சிறிய துண்டுகளாக்கவும்)
 சாத்துக்குடி - 2 (சாறு பிழியவும்)
 பனங்கற்கண்டு - ஒரு  டீஸ்பூன்
 ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு    

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
கிவிப்பழத் துண்டுகளுடன் பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் விழுதாக  அரைத்தெடுக்கவும். ஐஸ்கட்டிகளை மிக்ஸியில் பொடிக்கவும். கண்ணாடி டம்ளரில் பொடித்த ஐஸ் துண்டுகளைப் போடவும். அதன் மீது கிவி விழுதைச் சேர்க்கவும். சாத்துக்குடி சாற்றை மிக்ஸியில்  நுரை வரும் வரை அடித்து அதன் மீது ஊற்றிப் பரிமாறவும்.

பப்பாளி - கேரட் ஜூஸ்

தேவையானவை:  

 தோல் சீவி, நறுக்கிய
பப்பாளித் துண்டுகள் - ஒரு கப்
 தோல் சீவி, நறுக்கிய
கேரட் துண்டுகள் - அரை கப் 
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஹெல்த்தி சம்மர் கூலர்ஸ்

செய்முறை:
பப்பாளியுடன் கேரட் துண்டுகள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து `ஜில்’லென்று பரிமாறவும்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு