தேவையானவை:
* தேங்காய்த் துருவல் - ஒன்றரை கப்
* கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்
* விருப்பமான எசென்ஸ் - ஒரு துளி
* வறுத்து உடைத்த பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்
சாக்லேட் சாஸ் செய்ய:
* கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
* வெண்ணெய் - 100 கிராம்
* பொடித்த சர்க்கரை - கால் கப்
* பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* கோகனட் க்ரீம் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் தேங்காய்த் துருவல் சேர்த்து ஈரப்பசை போக லேசாக வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், எசென்ஸ் சேர்த்துப் பிசறவும். மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்து, நடுவே வறுத்த பாதாம் வைக்கவும். ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து அதன்மீது உருண்டைகளை அடுக்கி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.

அடிகனமான வாணலியில் (அ) நான் ஸ்டிக் பேனில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, சர்க்கரை, பால் பவுடர், கோகனட் க்ரீம் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். அதனுடன் கோகோ பவுடர் சேர்த்துக் கட்டி தட்டாமல் கிளறி இறக்கி ஆறவிடவும். சாக்லேட் சாஸ் ரெடி. ஃப்ரிட்ஜிலிருந்து தேங்காய் உருண்டைகளை எடுத்து அதன்மீது சாக்லேட் சாஸ் ஊற்றிப் பரிமாறவும்.
