Published:Updated:

ஸ்பெஷல் பராத்தாக்கள்

ஸ்பெஷல் பராத்தாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பெஷல் பராத்தாக்கள்

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோக்கள் : லக்ஷ்மி வெங்கடேஷ்

ஸ்பெஷல் பராத்தாக்கள்

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோக்கள் : லக்ஷ்மி வெங்கடேஷ்

Published:Updated:
ஸ்பெஷல் பராத்தாக்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பெஷல் பராத்தாக்கள்

பார்த்தவுடனே ருசிக்கத் தூண்டும் சுவையும் ஏராளமான சத்துகளும் நிறைந்த ஹெல்த்தி பராத்தா வரிசையில், ஸ்பெஷல் பராத்தா வகைகளின் செய்முறைகளைப் பார்ப்போம். எளிதாகச் செய்ய உதவும் வகையில் இதற்கான வீடியோக்களும் உள்ளன.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

மைசூர் மசாலா பராத்தா

தேவையான பொருள்கள் - மிளகாய் சட்னிக்கு: சிவப்பு மிளகாய் - 8, வறுத்த கடலைப்பருப்பு - அரை கப், தேங்காய் - அரை கப் (துருவியது), பூண்டு - 2 பல், புளிச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகாய் சட்னிக்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் மிக்ஸியில் நன்கு மை போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்பெஷல் பராத்தாக்கள்

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத் தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி ஆறவைத்துக் கொள்ளவும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

மெக்ஸிகன் பராத்தா

மெக்ஸிகன் மிளகாய் சாஸ் செய்முறை: அரை கப் நீரைச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். ஒரு கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். சூடு ஆறியதும் தண்ணீர், மிளகாய், மிளகு, பூண்டு, கிராம்பு அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து அரைத்த கலவை, உப்பு, உலர் இலைகள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

ஸ்டஃபிங் செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், ஆலிவ், வேகவைத்த அமெரிக்க ஸ்வீட் கார்ன், உப்பு சேர்த்து லேசாக வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.

மைசூர் மசாலா பராத்தா / மெக்ஸிகன் பராத்தா செய்முறை: இரண்டு உருண்டை களை எடுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக 5 அங்குலம் விட்டம் (அகலம்) உள்ள மெல்லிய சப்பாத்தியாக இடவும். ஒரு சப்பாத்தியின் நடுவில் சட்னியைத் தடவவும். ஓரங்களில் சுற்றிலும் கால் அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். அதன் மீது 2 டேபிள்ஸ்பூன் ஸ்டஃபிங் கலவையைப் பரப்பவும். ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி மற்றொரு சப்பாத்தியை அதன் மீது வைத்து ஒன்றோடு ஒன்றை ஒட்டிவிடவும். நன்றாக ஒட்டியவுடன் உலர் மாவில் புரட்டி எடுத்து (தோய்த்து) கையால் சற்று அழுத்திய பின்னர் குழவியால் மெதுவாகச் சற்றுப் பெரிய பராத்தாவாக கவனமாகத் திரட்டவும் (ஓரங்கள் பிரிந்து வராமல் இருக்க வேண்டும்).

ஸ்பெஷல் பராத்தாக்கள்

வெஜிடபிள் மஞ்சூரியன் பராத்தா

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உப்பு, அரை டேபிள்ஸ்பூன் சோள மாவு, மைதா, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாகச் செய்து சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, இஞ்சியை நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்துச் சற்று வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். தக்காளி சாஸ், ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். பொரித்து வைத்த உருண்டைகளைப் போட்டு நன்கு கெட்டியாகும் வரை கிளறிவிட்டு அதன் மேலாக வெங்காயத்தாளைத்தூவி கிளறி இறக்கவும். வெஜிடபிள் மஞ்சூரியன் ரெடி.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

பிசைந்து வைத்த கோதுமை மாவைச் சப்பாத்திக்குச் செய்வதுபோல உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஓர் உருண்டை எடுத்து 3 அங்குல அகலமுள்ள (விட்டம்) சப்பாத்தியாக இடவும். சப்பாத்தியின் ஒரு பாதியில் தேவையான மஞ்சூரியனை வைத்து, ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி அழுத்தி மூடவும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

பீட்சா பராத்தா

பீட்சா சாஸ் செய்ய: ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்), பழுத்த தக்காளி – 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், டொமேட்டோ கெட்சப் - ஒரு கப், ஆரிகானோ - ஒரு டீஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், பீட்சா சுவையூட்டும் தூள் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைப்பட்டால் சிறிதளவு.

வெந்நீரில் தக்காளியைப் போட்டு எடுத்து தோலுரித்து அரைக்கவும். ஒரு வாணலியில் ஆலிவ் ஆயில் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். டொமேட்டோ கெட்சப், ஆரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சுவையூட்டும் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

ஓர் உருண்டை எடுத்து 3 அங்குல அகலமுள்ள சப்பாத்தியாக இடவும். சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸைச் சுற்றிலும் கால் அங்குல இடைவெளி இருக்கும்படி பரப்பவும். ஒரு பாதியில் தேவையான காய்கறிகள் வைத்து, அதன்மேல் துருவிய சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ், ஆரிகானோ தூவவும். ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி அழுத்தி மூடவும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

கிளப் சாண்ட்விச் பராத்தா

மயோனைஸ் மற்றும் கெட்சப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

மூன்று உருண்டைகளை எடுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக 6 அங்குலம் அகலம் (விட்டம்) உள்ள மெல்லிய சப்பாத்தியாக இடவும். தோசைக்கல்லில் போட்டு வெண்ணெய்விட்டு வேகவைக்கவும். ஒரு பக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் வெண்ணெய்விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

ஒரு சப்பாத்தியின் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் கெட்சப் கலவையை பரப்பவும். மற்றொரு சப்பாத்தியின் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் புதினா சட்னியைப் பரப்பி வைத்துக்கொள்ளவும். கெட்சப் தடவிய சப்பாதியின் மேல் வேகவைத்த உருளைக்கிழங்கு, பீட்ரூட், சீஸை வைக்கவும். பிறகு சாட் மசாலாத்தூள் தூவி, புதினா சட்னி தடவிய சப்பாத்தியை வைத்து மூடவும். இதன்மேல் கேரட், தக்காளி வைத்து மிளகுத்தூள் தூவவும். மூன்றாவது சப்பாத்தியை அதன்மீது வைத்து மூடவும். சப்பாத்தியின் மேலே வெண்ணெய் தடவி, கிளப் சாண்ட்விச்சை கிரில் செய்யவும். மேலே சாட் மசாலா / சாண்ட்விச் மசாலா தூவி ஒரு பல் குத்தியால் (டூத் பிக்) குத்திப் பரிமாறவும்.

புதினா சட்னி

தேவையானவை: புதினா - கால் கட்டு, கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு, பச்சை மிளகாய் – 5, தயிர் / க்ரீம் சீஸ் - 3 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை: புதினா, கொத்தமல்லித்தழை, சீரகத்தூள், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைக்கவும். பிறகு உப்பு மற்றும் க்ரீம் சீஸ் / தயிரைச் சேர்த்து, மீண்டும் சட்னி பதத்துக்கு நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

டபுள் டெக்கர் பராத்தா

முதல் லேயர் ஸ்டஃபிங்: வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

இரண்டாவது லேயர் ஸ்டஃபிங்: பனீர், கேரட், கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், தனியாதூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.

மூன்று உருண்டைகளை எடுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக 4 அங்குலம் விட்டம் (அகலம்) உள்ள மெல்லிய சப்பாத்தியாக இடவும். ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலாவைப் பரப்பவும். ஓரங்களில் சுற்றிலும் கால் அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி மற்றொரு சப்பாத்தியை அதன்மீது வைத்து ஒன்றோடு ஒன்றை ஒட்டிவிடவும் இப்போது இரண்டாவது சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் பனீர் மசாலாவை, ஓரங்களில் சுற்றிலும் கால் அங்குலம் இடைவெளி இருக்கும்படி பரப்பவும். ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி, மூன்றாவது சப்பாத்தியை அதன்மீது வைத்து ஒட்டிவிடவும். நன்றாக ஒட்டியவுடன் மாவில் புரட்டி எடுத்து, கையால் சற்று அழுத்திய பின்னர் குழவி யால் மெதுவாகச் சற்றுப் பெரிய கனமான பராத்தாவாக கவனமாக இடவும். ஓரங்கள் பிரிந்து வராமல் இருக்க வேண்டும்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்

பராத்தாக்களை வேகவைக்கும் முறை: இப்படி செய்த பராத்தாவை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய்விட்டு மிதமான சூட்டில் வேகவைக்கவும். ஒருபக்கம் நன்கு வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபடியும் நெய் அல்லது எண்ணெய்விடவும். பொன்னிறமாக வந்ததும் தோசைக்கல்லில் இருந்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

பராத்தாக்களை பரிமாறும் முறை: பொதுவாக பராத்தாக்களை தயிர், ஊறுகாய், தொக்குடன் பரிமாறலாம். வட இந்தியாவில் கிரேவிகள், குருமா, தெரக்கல் ஆகியவையுடன் பரிமாறுவார்கள். ஆபீஸ் அல்லது ஸ்கூலுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்து விடச் சிறந்தவை பராத்தாக்கள்.

ஸ்பெஷல் பராத்தாக்கள்
ஸ்பெஷல் பராத்தாக்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism