இளநீர் கடல் பாசி

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) - 10 கிராம் * தண்ணீர் - இரண்டு டம்ளர் * இளநீர் – ஒன்று * சர்க்கரை - அரை டம்ளர் (அல்லது தேவையான அளவு) * பாதாம் ஃப்ளேக்ஸ் (பொடியாக சீவியது) - ஒரு டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்).

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கடல் பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிட்டுக் கொதிக்கவிடவும். கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும்போது பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். இதை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைய வேகவிட்டு, அரை (அ) முக்கால் டம்ளர் இளநீர் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு ஒரு பெரிய தட்டில் ஊற்றி, இளநீரில் இருக்கும் வழுக்கையை ஸ்பூனால் சுரண்டி எடுத்து, காய்ச்சிய இளநீர் - கடல் பாசியின் மீது பரவலாகத் தூவிவிடவும். விருப்பப்பட்டால் பாதாமை மேலே தூவவும். சூடு ஆறியதும் ஃப்ரிட்ஜில் குளிரவைத்து, விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

ஏபிசி ஜெல்லி

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) - 5 கிராம் (பொடிக்கவும்) * ஃப்ரெஷ் ஜூஸ் அல்லது ரெடிமேட் ஜூஸ் (கேரட், பீட்ரூட், ஆப்பிள்) - 200 மில்லி * தண்ணீர் - 100 மில்லி * வெல்லத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: அகர் அகரைத் தண்ணீரில் ஊறவைக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அதனுடன் அகர் அகர், ஃப்ரெஷ் ஜூஸ் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கொஞ்சம் வற்றியதும் இறக்கவும். இதைப் பெரிய தட்டில் ஊற்றி ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்து, குளிர்ந்த பிறகு விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

சப்போட்டா அகர் அகர் புட்டிங்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) - ஒரு கைப்பிடி அளவு * சர்க்கரை (அ) பிரவுன் சுகர் - 6 டீஸ்பூன் * கண்டன்ஸ்டு மில்க் - 75 மில்லி * தண்ணீர் - 2 டம்ளர் (400 மில்லி) * காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு டம்ளர் * சப்போட்டா - 4 (விதை நீக்கி துண்டுகளாக்கவும்) * பொடியாக நறுக்கிய பிஸ்தா - சிறிதளவு (விரும்பினால்).

செய்முறை: அகர் அகரைத் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும். அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். சப்போட்டாவுடன் பால், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பெரிய தட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். கலவை செட்டான பிறகு எடுத்து, மேலே பிஸ்தா தூவி விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிப் பரிமாறவும். 2 மணி நேரம் குளிரவைத்தால் போதுமானது.

இதய வடிவ டபுள் லேயர் ரூ ஆஃப்சா தர்ப்பூசணி

தேவை: - ரூ ஆஃப்சா முதல் லேயர் செய்ய: * கடல் பாசி - ஒரு பெரிய கைப்பிடி அளவு * காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப் * தண்ணீர் - ஒரு டம்ளர் * சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன் * கண்டன்ஸ்டு மில்க் - 100 கிராம் * உப்பு - ஒரு சிட்டிகை * ரோஸ் எசென்ஸ் - சிறிதளவு.

தர்ப்பூசணி - கடல் பாசி இரண்டாவது லேயர் செய்ய: பொடித்த கடல் பாசி - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் தர்ப்பூசணித் துண்டுகள் - 2 கப் தண்ணீர் - ஒரு டம்ளர் ரூ ஆஃப்சா - ஒரு குழிக்கரண்டி.

செய்முறை: முதல் லேயர் செய்ய கொடுத்துள்ள கடல் பாசியுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதனுடன் பால் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவிட்டு வேகவிடவும். பிறகு சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதனுடன் உப்பு, ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை நான்கு கப்களில் முக்கால் பாகம் வரை ஊற்றி ஆறவிடவும். தர்ப்பூசணி கடல்பாசி செய்ய கொடுத்துள்ள தர்ப்பூசணியுடன் சர்க்கரை சேர்த்துத் தண்ணீர்விடாமல் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் ரூ ஆஃசா சேர்த்துக் கலக்கவும். கடல் பாசியுடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த கலவை சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதை கப்களில் உள்ள முதல் லேயர் மீது இரண்டாவது லேயராக ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: அகலமான தட்டில் முதல் லேயரை ஊற்றவும். அதன் மீது இரண்டாவது லேயர் ஊற்றி செட் ஆன பிறகு இதய வடிவில் துண்டுகளாக்கியும் பரிமாறலாம்.

நுங்கு புட்டிங்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) - 10 கிராம் * சர்க்கரை - 50 கிராம் * கண்டன்ஸ்டு மில்க் – சிறிதளவு * தண்ணீர் - 2 டம்ளர் * காய்ச்சி ஆறவைத்த பால் - 2 டம்ளர் * நுங்கு - 4 (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) * பொடியாக நறுக்கிய பிஸ்தா - சிறிதளவு (விருப்பப்பட்டால்).

செய்முறை: அகர் அகரைத் தண்ணீரில் ஊறவைத்து வடிக்கட்டவும். அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கரையும்வரை கொதிக்கவிடவும். பிறகு பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். நுங்குடன் சிறிதளவு பால் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். அதனுடன் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், அகர் அகர் சேர்த்து நன்கு கலக்கவும். பெரிய தட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து எடுக்கவும். மேலே பிஸ்தா தூவி, விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிப் பரிமாறவும். 2 மணி நேரம் குளிரவைத்தால் போதுமானது.

பிஸ்தா ஃப்ளேவர் ஆப்பிள் கடல் பாசி

தேவை: * பொடியாக நறுக்கிய அகர் அகர் (கடல் பாசி) - ஒரு பெரிய கைப்பிடி அளவு * தண்ணீர், காய்ச்சி ஆறவைத்த பால் - தலா 2 டம்ளர் * சர்க்கரை - அரை கப் * கண்டன்ஸ்டு மில்க் - ஒரு சிறிய டின் * ஆப்பிள் - ஒன்று (துருவவும்) * பிஸ்தா ஃப்ளேக்ஸ் (பொடியாக சீவியது) - 2 டேபிள்ஸ்பூன் * பிஸ்தா ஏலக்காய் ஃப்ளேவர் எசென்ஸ் - 2 துளி.

செய்முறை: கடல் பாசியைக் கழுவி தண்ணீர், பால் சேர்த்து வேகவைக்கவும். கடல் பாசி சிறிதளவு கரைந்து வரும்போது சர்க்கரை, கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கரையும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு எசென்ஸ், ஆப்பிள் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதைப் பெரிய தட்டில் அல்லது சிறிய கிண்ணங்களில் ஊற்றி, மேலே பிஸ்தா ஃப்ளேக்ஸ் தூவி அலங்கரித்து ஆறவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் குளிரவைத்து எடுத்து விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

நட்ஸ் மாம்பழக் கடல் பாசி

தேவை: * கடல் பாசி - 2 கைப்பிடி அளவு * சர்க்கரை - அரை கப் * தண்ணீர் - 2 டம்ளர் * மாம்பழம் (அல்போன்சா) - ஒன்று * மாம்பழ எசென்ஸ் - 2 துளி * பிஸ்தா பிளேக்ஸ் (பொடியாக சீவியது) – தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரில் கடல் பாசியைப் பொடியாக அரிந்து போட்டு, சிறிது நேர ஊறவைத்துக் காய்ச்சவும். கரைந்துவரும் சமயத்தில் அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். நன்கு கரைந்துவிட்டால் வடிகட்ட தேவையில்லை. சிறிது ஆறியதும் மாம்பழ எசென்ஸ், பிஸ்தா, மாம்பழக் கூழைக் கலந்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் குளிரவைத்து வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

மூவண்ண அகர் அகர்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) - 15 கிராம் * தண்ணீர் - 900 மில்லி (நான்கரை டம்ளர்) * சர்க்கரை - 125 கிராம் * ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன் * எசென்ஸ் (பச்சை, சிவப்பு) - சிறிதளவு * பாதாம், பிஸ்தா ஃப்ளேக்ஸ் (பொடியாக சீவியது) - தேவையான அளவு * பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி, தேங்காய், கிவி – தேவையான அளவு * காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு டேபிள்ஸ்பூன்,

அலங்கரிக்க: ஜெம்ஸ் மிட்டாய், பிரெட் ஸ்டிக் (அ) சாக்லேட் ஸ்டிக் - தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரில் கடல் பாசியை உதிர்த்துப்போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதனுடன் சர்க்கரை, ரோஸ்வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கடல் பாசி கரையும்வரை கொதிக்கவிடவும். கலவை சிறிதளவு கெட்டியாகி வரும்போது இறக்கி மூன்று கிண்ணங்களில் ஊற்றவும். முதல் கிண்ணத்தில் சிவப்பு எசென்ஸ், ஸ்ட்ராபெர்ரி, பாதாம் ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கலக்கவும். இரண்டாவது கிண்ணத்தில் பச்சை எசென்ஸ், பொடியாக நறுக்கிய கிவி பழம் சேர்த்துக் கலக்கவும் சேர்த்துக் கலக்கவும். மூன்றாவது கிண்ணத்தில் பால், தேங்காய், பிஸ்தா சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவைகளை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்துக் குளிரவிட்டு எடுத்து அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைக்கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். சுவையான மூவண்ண ஃப்ரூட்ஸ் அண்டு நட்ஸ் அகர் அகர் ரெடி.

ஜவ்வரிசி கடல் பாசி

தேவை: * ஜவ்வரிசி - ஒரு டேபிள்ஸ்பூன் * அகர் அகர் (கடல் பாசி) - 2 டேபிள்ஸ்பூன் (பொடித்தது) * காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு டம்ளர் * தண்ணீர் - ஒரு டம்ளர் * பிஸ்தா கலர் எசென்ஸ் - 2 துளி * சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன் * நட்ஸ் - சிறிதளவு.

செய்முறை: ஜவ்வரிசியுடன் கடல் பாசி சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கடல் பாசி கரைந்து ஜவ்வரிசி வெந்ததும் சர்க்கரை, நட்ஸ், பால், எசென்ஸ் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும் (சர்க்கரைக்குப் பதிலாக கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்). சற்று ஆறியதும் வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு செட் செய்து எடுத்து விருப்பமான வடிவில் துண்டுகளாக்கிப் பரிமாறவும். நோன்பு திறக்கும் வேளையில் சாப்பிட ஏற்றது.

டூப்ளிகேட் ஆம்லெட்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) - 15 கிராம் * சர்க்கரை - 75 கிராம் * இளநீர் - 200 மில்லி * தண்ணீர் - 450 மில்லி * வெனிலா கஸ்டர்ட் (அ) கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன் * மிளகுத்தூள் - சிறிதளவு * உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: அகர் அகரைப் பொடித்து தண்ணீரில் ஊற வைக்கவும். அதனுடன் இளநீர், சர்க்கரை மற்றும் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். இதை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை சிறிய டீ சாசர்களில் ஊற்றி வைக்கவும். (இது மஞ்சள் கருவை சுற்றி உள்ள வெள்ளை கலருக்கு). மஞ்சள் கருவுக்கு கஸ்டர்ட் பவுடரை சிறிது தண்ணீர் கலந்து கட்டி தட்டாமல் காய்ச்சி எடுத்து வைத்த மற்றொரு பாகத்தில் சேர்த்து ஒரு நிமிடம் காய்ச்சி வேறொரு தட்டில் ஊற்றி இரண்டையும் ஆறவிட்டு குளிரவைக்கவும். ஒரு வட்ட வடிவ மூடியைக் கொண்டு வெள்ளை கடல் பாசியின் நடுவில் மஞ்சள் கரு அளவுக்கு கட் செய்து எடுக்கவும். குளிரவைத்த கஸ்டர்ட் அகர் அகரை முட்டையின் மஞ்சள் கரு அளவுக்கு வட்ட வடிவமாக கட் செய்து ஏற்கெனவே வைத்துள்ள வெள்ளை அகர் அகரின் நடுவில் நிரப்பவும். இப்போது இதைப் பார்க்க ஆஃப் பாயில் / அரை வேக்காடில் வெந்து எடுத்தது போலவே இருக்கும். சிறிது மிளகுத்தூள் தூவினால் பார்க்க அச்சு அசல் முட்டை ஆம்லெட் போலவே இருக்கும். சுவையில் அசத்தும்.

மூவண்ண நட்ஸ் கடல் பாசி

தேவை: * கடல் பாசி - 15 கிராம் * சர்க்கரை - அரை டம்ளர் * பாதாம் ஃப்ளேக்ஸ் (பொடியாக சீவியது) - 6 டீஸ்பூன் * நன்னாரி சிரப் - ஒரு குழிக்கரண்டி * ரோஸ் எசென்ஸ் - 2 துளிகள் * பாதாம் எசென்ஸ் - 2 துளிகள் * தண்ணீர் - மூன்றே முக்கால் டம்ளர்.

செய்முறை: தண்ணீரில் கடல் பாசியை உதிர்த்துப் போட்டு, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கடல் பாசி கரையும்வரை காய்ச்சவும். முக்கால் பாகம் அளவு வற்றியதும் காய்ச்சியதை மூன்று பாத்திரங்களில் ஊற்றவும். பிறகு மூன்று பாத்திரங்களிலும் தனித்தனியாக எசென்ஸ்களை (நன்னாரி, ரோஸ், பாதாம்) சேர்க்கவும். பாதாம் ஃப்ளேக்ஸ்களை ஒவ்வொரு பாத்திரத்திலும் 2 டீஸ்பூன் தூவும். வெளியிலேயே செட்டாகவிட்டுப் பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்ததும் வெளியில் எடுத்துத் துண்டுகளாகப் போடவும். சுவையான மூவண்ண நட்ஸ் கடல் பாசி ரெடி.

மீன் வடிவ அகர் அகர்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) - 3 கிராம் * தேங்காய்த் தண்ணீர் - ஒரு டம்ளர் * தண்ணீர் - கால் கப் * சர்க்கரை - 3 டேபிஸ்பூன் * மிளகு - மீன் கண்கள் செய்வதற்கு.

செய்முறை: அகர அகரைப் பொடித்து, கால் கப் தண்ணீர் மற்றும் தேங்காய் உடைத்த தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும். கால் கப் தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து மீன் போல் உள்ள பரிமாறும் ப்ளேட்டில் ஊற்றி முழு மிளகை மீன் கண்களுக்கு வைத்து வெளியில் ஆற வைத்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: அகர் அகரைக் குளிரவைத்துதான் சாப்பிட வேண்டும் என்றில்லை. வெளியில் வைத்ததும் செட்டாகி, கேக் போல துண்டுகள் போடவரும். இதை நாம் பால், நட்ஸ் வகைகள், குழந்தைகளுக்குப் பிடித்த பழ வகைகள் அல்லது காய்கறிகளில் சேர்த்தும் கொடுக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி பாதாம் அகர் அகர் புடிங்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம் * சர்க்கரை - 100 கிராம் * பால் – 500 மில்லி * ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் - 2 துளிகள் * பொடியாக நறுக்கிய பாதாம் – தேவைக்கேற்ப.

செய்முறை: அகர் அகரைப் பொடி செய்து சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து பால் சேர்த்து நன்கு கட்டியாகும்வரை காய்ச்சவும். சர்க்கரை சேர்த்து சில நிமிடங்கள் காய்ச்சி, ஸ்ட்ராபெர்ரி எசென்ஸை சேர்த்து ஒரு பெரிய தட்டில் காய்ச்சிய அகர் அகரை ஊற்றி நறுக்கிய பாதாம் தூவி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து விரும்பிய வடிவில் கட் செய்யவும்.

பைனாப்பிள் கஸ்டர்ட் அகர் அகர்

தேவை: * பால் – ஒரு கப் * பைனாப்பிள் ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன் * பாதாம், பிஸ்தா ஃப்ளேக்ஸ் (பொடியாக சீவியது) – ஒரு டேபிள்ஸ்பூன் * பிலிப்பைனி சிக்கூட்டா (பெரிய வாழைப்பழம்) - ஒன்று (வட்டமாக நறுக்கவும்) * பொடியாக நறுக்கிய ஆப்பிள் – அரை கப்.

அகர் அகர் ஜெல்லி தயாரிக்க: * அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம் * சர்க்கரை – 75 கிராம் * எசென்ஸ் (சிவப்பு மற்றும் பச்சை) - தலா இரண்டு துளிகள் * தண்ணீர் – 400 மில்லி.

செய்முறை: அகர் அகரைப் பொடித்து, தண்ணீரில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். அகர் அகர் கரைந்து சிறிது வற்றியதும் அதை இரண்டு பாகங்களாகத் தனித்தனி தட்டில் ஊற்றி வைக்கவும். அதில் ஒன்றில் பச்சை எசென்ஸும், மற்றொன்றில் சிவப்பு எசென்ஸும் கலந்து ஆறவைத்து குளிர்ந்ததும் விருப்பமான வடிவில் கட் செய்து தனியாக வைக்கவும். பாலைக் காய்ச்சவும். கஸ்டர்ட் பவுடரைத் தண்ணீரில் கரைத்துப் பாலில் ஊற்றி கட்டியில்லாமல் கிளறிவிட்டு நன்கு காய்ச்சி இறக்கி ஆறவைத்து, பாதாம், பிஸ்தா ஃப்ளேக்ஸ் தூவி வைக்கவும். ஆப்பிள், வாழைப்பழத்தை கஸ்டர்டில் சேர்க்கவும். கடைசியாக ஏற்கெனவே செய்து வைத்த பச்சை மற்றும் சிவப்பு நிற கடல் பாசியைச் சேர்த்து ஃப்ரிட்ஜில் நன்கு குளிரவைத்துப் பரிமாறவும்.

குல்கந்து அகர் அகர்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) – 5 கிராம் * தண்ணீர் - 2 டம்ளர் * ரூ ஆஃப்சா – ஒரு டேபிள்ஸ்பூன் * குல்கந்து – 2 டீஸ்பூன் * சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் கடல் பாசியைக் கலந்து கொதிக்கவிடவும். பாதி கரையும்போது குல்கந்து மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு அதை ஒரு பெரிய வாய் அகன்ற தட்டில் ஊற்றி ரூ ஆஃப்சா சேர்த்துக் கலக்கிவிட்டு ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும். குல்கந்து வாசனையுடன் சூப்பர் சுவையில் இருக்கும்.

ட்ரை கலர் இதய வடிவ அகர் அகர்

தேவை: * கடல் பாசி - 5 கிராம் * இளநீர் (ரெடிமேட் பாட்டில்) – 370 மில்லி * தண்ணீர் – 50 மில்லி * சர்க்கரை - தேவையான அளவு * ஃபுட் கலர் - (சிவப்பு, பச்சை) 2 துளிகள் * பிஸ்தா ஃப்ளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் இளநீர் மற்றும் தண்ணீர் ஊற்றி கடல் பாசி, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிட்டுக் கொதிக்கவிடவும். சிறிது கெட்டியானதும் இறக்கி, கடல் பாசியை மூன்று பாகங்களாகப் பிரித்து மூன்று கிண்ணங்களில் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் பச்சை ஃபுட் கலரும், மற்றொரு கிண்ணத்தில் சிவப்பு ஃபுட் கலரும் சேர்த்துக் கலக்கவும். மூன்றாவது கிண்ணத்தில் கலர் எதுவும் வேண்டாம். இவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து செட்டானதும் இதய வடிவில் (குக்கி கட்டர் மோல்டில்) கட் செய்து, பிஸ்தா ஃப்ளேக்ஸ் தூவிப் பரிமாறவும்.

கான்கார்ட் கிரேப் ஜூஸ் ஜெல்லி

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) – 5 கிராம் * கார்ன்கார்ட் கிரேப்ஸ் ஜூஸ் - 250 மில்லி * தண்ணீர் – 100 மில்லி * ஃப்ரெஷ் சீட்லெஸ் கறுப்பு திராட்சை - 8 * பிரவுன் சுகர் – 25 கிராம்.

செய்முறை: அகர் அகரைப் பொடித்துத் தண்ணீரில் ஊறவைத்து வேகவிடவும் அதில் கறுப்பு திராட்சையை அரைத்து வடிகட்டி ஊற்றவும். பிரவுன் சுகர் சேர்த்து, கான்கார்ட் கிரேப்ஸ் ஜூஸை சேர்த்துக் கொதிக்கவிட்டுச் சிறிது வற்றவிட்டு இறக்கவும். இதை ஒரு வாய் அகன்ற தட்டில் ஊற்றி ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவிடவும். இதய வடிவில் அல்லது வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

அகர் அகர் அல்வா

தேவை: * கிரீன் கலர் அகர் அகர் பவுடர் (7 கிராம் பாக்கெட்) - ஒன்று (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும். இல்லையெனில் சாதாரண அகர் அகரும் பயன்படுத்தலாம்) * தண்ணீர் - 3 டம்ளர் * வறுத்த வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன் * சர்க்கரை – 150 கிராம் * கார்ன்ஃப்ளார் – ஒரு டீஸ்பூன் * நெய் – 2 டேபிள்ஸ்பூன் * ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் * முந்திரி - சிறிதளவு.

செய்முறை: தண்ணீரில் கார்ன்ஃப்ளார் மற்றும் அகர் அகர் பவுடரைக் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். நன்கு அல்வா பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையவிட்டு, நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள கிளறி, கடைசியாக வெள்ளை எள் சேர்த்து இறக்கவும். தட்டில் கொட்டி டைமண்ட் வடிவில் அல்லது விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும். முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

வாழைப்பழப் பேரீச்சை அகர் அகர்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) – 5 கிராம் * வாழைப்பழம் – சிறிய பழம் ஒன்று * பேரீச்சை – 5 * தண்ணீர் - அரை டம்ளர் * பால் - ஒரு டம்ளர் * தேன் - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பழம், பேரீச்சையை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைக்கவும். அகர் அகரைத் தண்ணீர் மற்றும் பால் சேர்த்துக் காய்ச்சவும். சிறிது கெட்டியாகும்போது அரைத்த பழக்கலவையைச் சேர்த்து கலந்து ஒரு தட்டில் ஊற்றவும். தட்டில் ஊற்றியதும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிர்ந்ததும், விரும்பிய வடிவில் கட் செய்து மேலே சிறிது தேன் ஊற்றி அலங்கரித்துப் பரிமாறவும்.

ஆரஞ்சு சைனா கிராஸ்

தேவை: * சைனா கிராஸ் (அகர் அகர்) - 10 கிராம் * தண்ணீர் - 400 மில்லி * சர்க்கரை - 10 டீஸ்பூன் * ஆரஞ்சுப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்; தோலை வைத்துக்கொள்ளவும்).

செய்முறை: சைனா கிராஸை நறுக்கித் தண்ணீரில் கொதிக்கவிடவும் கெட்டியாகி வரும்போது அதில் சர்க்கரை மற்றும் ஆரஞ்சுப்பழச் சாற்றைக் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது ஆறியதும் பிழிந்த ஆரஞ்சுப்பழத் தோலை வட்ட வடிவமாக அப்படியே அதன் வடிவிலேயே வைத்து அதை ஒரு கோப்பையில் வைத்து தயார் செய்த ஆரஞ்சுப்பழ சைனா கிராஸை அதில் ஊற்றவும். மீதி உள்ளதை மற்ற கிண்ணங்களில் ஊற்றிக்கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் நன்கு குளிரவிடவும். சில ஆரஞ்சுப் பழங்கள் மிகவும் புளிப்பாக இருக்கும். இப்படி செய்தால் புளிப்பு சுவை தித்திப்பாக மாறிவிடும்.

கருப்பட்டி தேங்காய்ப்பால் கடல் பாசி

தேவை: * கெட்டியான தேங்காய்ப் பால் - 150 மில்லி * தண்ணீர் - 150 மில்லி * அகர் அகர் (கடல் பாசி) – 5 கிராம் * சுக்கு கருப்பட்டி வெல்லம் - 50 கிராம் (தேவைக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்) * உப்பு - அரை சிட்டிகை.

செய்முறை:  கருப்பட்டியை சிறிது தண்ணீரில் தூள் செய்து போட்டு காய்ச்சி வடிகட்டி வைக்கவும். தண்ணீரில் கடல் பாசி சேர்த்துக் காய்ச்சவும். அதில் தேங்காய்ப் பால் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் கொதிக்க விட்டு, கருப்பட்டிக் கரைசலை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்து இறக்கவும். ஆற வைத்து ஒரு பெரிய சதுர வடிவ பவுலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறவும்.

டிராகன் ஃப்ரூட் ரோஸ்மில்க் அகர் அகர்

தேவை: * பால் - 4 டம்ளர் * தண்ணீர் – ஒரு டம்ளர் * அகர் அகர் (கடல் பாசி) – 15 கிராம் * சர்க்கரை - 200 கிராம் * டிராகன் ஃப்ரூட் (பெரிய துண்டுகளாக நறுக்கியது) – ஒரு கப் * மாம்பழம் – 5 சிறிய துண்டுகள் * பாதாம் (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு * ரோஸ்மில்க் எசென்ஸ் – 2 துளி.

செய்முறை: அகர் அகரைப் பொடித்துத் தண்ணீரில் ஊறவைத்துப் பால் சேர்த்து நன்கு காய்ச்சவும். முக்கால் பங்கு ஆகியதும் அதில் ரோஸ் மில்க் எசென்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் ஆறவிட்டு ஒரு சதுர வடிவமான டப்பாவில் ஊற்றவும். கெட்டியாகும் முன் நறுக்கி வைத்துள்ள டிராகன் ஃப்ரூட், மாம்பழம் மற்றும் நறுக்கிய பாதாம் சேர்த்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் குளிரவைக்கவும். இதைக் கொஞ்சம் குழைவாக எடுத்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

ரூ ஆஃப்சா தேங்காய் பவுடர் ஜெல்லி

தேவை: * தண்ணீர் - ஒரு டம்ளர் * அகர் அகர் (கடல் பாசி) - 5 கிராம் * சர்க்கரை - தேவையான அளவு * ரூ ஆஃப்சா – 2 டேபிள்ஸ்பூன் * தேங்காய் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அகர் அகரைப் பொடித்துத் தண்ணீரில் ஊறவைத்துக் காய்ச்சவும். கெட்டியாக வரும்போது சர்க்கரை, ரூ ஆஃப்சா, தேங்காய் பவுடரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி காய்ச்சி ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆறவைக்கவும். இதை ஃப்ரிட்ஜில் குளிர வைத்து செட்டானதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு: ரூ ஆஃப்சா இல்லையெனில் ரோஸ் மில்க் எசென்ஸும் சேர்க்கலாம்.

த்ரி லேயர் புட்டிங்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) – 15 கிராம் * சர்க்கரை - 150 கிராம்* பால் – 600 மில்லி * ரோஸ் மில்க் எசென்ஸ் – 2 துளிகள் * மாம்பழ எசென்ஸ் 3 துளிகள் * பிஸ்தா எசென்ஸ் - அரை துளிக்கும் குறைவு * பொடியாக நறுக்கிய பிஸ்தா - சிறிதளவு.

செய்முறை: 5 கிராம் அகர் அகரைப் பொடி செய்து சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து 200 மில்லி பால் சேர்த்து நன்கு கட்டியாகும்வரை காய்ச்சவும். 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும். ரோஸ் மில்க் எசென்ஸைச் சேர்த்து ஒரு பெரிய தட்டில் காய்ச்சிய அகர் அகரை ஊற்றி, பிஸ்தா தூவி செவ்வக வடிவ பவுலில் ஊற்றி ஆற வைக்கவும்.

இரண்டாவது லேயருக்கு: 5 கிராம் அகர் அகரைப் பொடி செய்து சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து 200 மில்லி பால் சேர்த்து நன்கு கட்டியாகும் வரை காய்ச்சவும். 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும். காய்ச்சிய பாத்திரத்திலேயே சிறிது ஆறவிட்டு ஏற்கெனவே செய்து வைத்துள்ள ரோஸ் லேயர் மேலே ஊற்றவும்.

மூன்றாவது லேயருக்கு: 5 கிராம் அகர் அகரைப் பொடி செய்து சிறிது தண்ணீரில் ஊறவைத்து 200 மில்லி பால் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சவும். 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும். மாம்பழ எசென்ஸ் மற்றும் பிஸ்தா ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். ஏற்கெனவே செய்துவைத்துள்ள ரோஸ், வெள்ளை லேயர் சிறிது செட் ஆகியிருக்கும். அதன் மேல் மாம்பழ எசென்ஸ் ஃப்ளேவரில் செய்த கடல் பாசியை மூன்றாவது லேயராக ஊற்றி ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிரவைக்கவும். நன்கு குளிர்ந்ததும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும். இது அசத்தலான சுவையில் இருக்கும்.

குறிப்பு: இதுபோன்று உள்ள லேயர் அகர் அகர் செய்யும்போது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். சூடாக இருக்கும்போது ஊற்றிவிட்டால் ஒன்றோடு ஒன்று கலந்துவிடும்.

அடுக்கு கிளாஸ் அகர் அகர்

தேவையானவை - முதல் லேயர்: * அகர் அகர் (கடல் பாசி) – 5 கிராம் * சர்க்கரை - 50 கிராம் * பால் – 200 மில்லி.

இரண்டாவது லேயர்: * அகர் அகர் (கடல் பாசி) – 5 கிராம் * சர்க்கரை – 25 கிராம் * தண்ணீர் – 200 மில்லி * ரூ ஆஃப்சா – 2 குழிக்கரண்டி.

செய்முறை: 5 கிராம் கடல் பாசியை 200 மில்லி பாலில் சேர்த்து நன்கு கரைய வேகவைக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து கைப்பிடி உள்ள கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் ஊற்றி ஃப்ரிட்ஜில் கொஞ்சம் சரிவாகச் சாய்த்து நிற்க வைக்கவும். அது செட்டாகுவதற்குள் அடுத்த லேயரை ரெடி செய்யவும்.

5 கிராம் கடல் பாசியில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து ரூ ஆஃப்சா சேர்த்து 25 கிராம் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கெட்டியானதும் ஆற வைத்து, இதை ஏற்கெனவே ஃப்ரிட்ஜில் குளிரவைத்துள்ள பால் கடல் பாசியில் சரிவாக ஊற்றிக் குளிரவிடவும். அப்படியே செட்டாகி, பார்க்க மிக அழகாக இருக்கும்.

குறிப்பு: ரூ ஆஃப்சாவில் இனிப்பு இருக்கும். ஆகையால் சர்க்கரையின் அளவைக் குறைத்துப் போட வேண்டும்.

நீல வண்ண நட்சத்திர அகர் அகர்

தேவை: * அகர் அகர் (கடல் பாசி) – 5 கிராம் * பால் - ஒரு டம்ளர் * தண்ணீர் - அரை டம்ளர் * சர்க்கரை - 3 டேபிஸ்பூன் * நீல வண்ண ஃபுட் கலரிங் – இரண்டு துளிகள்.

செய்முறை:  அகர் அகரைத் தண்ணீர் மற்றும் பால் சேர்த்துக் காய்ச்சவும். சிறிது கெட்டியாகும் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். காய்ச்சிய கலவையில் இரண்டு துளி நீல வண்ண ஃபுட் கலரிங் சேர்த்து வாய் அகன்ற தட்டில் ஊற்றி ஆறவைக்கவும். நன்கு ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவைத்து நட்சத்திர வடிவில் கட் செய்து பரிமாறவும்.

சாக்கோ கோல்டு காபி அகர் அகர் ஜெல்லி

தேவை: * சாக்கோ ஃப்ளேவர் அகர் அகர் பவுடர் - மூன்றரை கிராம் * பிரவுன் சுகர் - 65 கிராம் * தண்ணீர் - 450 மில்லி * இன்ஸ்டன்ட் காபி பவுடர் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சாக்கோ ஃப்ளேவர் அகர் அகரைத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவிடவும். சிறிது கெட்டியாகும்போது இன்ஸ்டன்ட் காபி பவுடர் மற்றும் பிரவுன் சுகரைச் சேர்த்துக் கலந்து மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கப் கேக் மோல்டில் ஊற்றி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிரவிடவும். அகர் அகர் கெட்டியானதும் ஃப்ளவர் ஷேப் பிஸ்கட் கட்டரில் அழுத்தி பூ போல எடுக்கவும். சூப்பரான சாக்கோ கோல்ட் காபி அகர் அகர் ஜெல்லி ரெடி.

குறிப்பு: சாக்கோ ஃப்ளேவர் அகர் அகர் பவுடர் கிடைக்காதவர்கள் சாதாரண அகர் அகரை பவுடராக்கி அத்துடன் கோகோ பவுடர் மற்றும் சிறிது சாக்லேட் சேர்த்துத் தயாரிக்கலாம்.

மீதியுள்ள காபி அகர் அகரை சின்னச் சின்ன கியூப்களாக அல்லது சின்ன உடைந்த கண்ணாடி துண்டுகள் போல கட் செய்து எடுத்து வைக்கவும். இது மற்ற வகை லெமனேட், கஸ்டர்ட் ஜூஸ் மற்றும் ஃபலூடா போன்ற ரெசிப்பிகள் செய்யப் பயன்படும்.

ரூ ஆஃப்சா அகர் அகர் ஜெல்லி

தேவை: * ரெடிமேட் பாக்கெட் பவுடர் ரெட் கலர் அகர் அகர் – 2 கிராம் * சர்க்கரை – 30 கிராம் * தண்ணீர் - 200 மில்லி * ரூ ஆஃப்சா - ஒரு குழிக்கரண்டி.

செய்முறை: ரெடிமேட் பாக்கெட் பவுடர் அகர் அகர் பவுடரைத் தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவைத்துச் சிறிது கெட்டியாகும் வரை காய்ச்சவும். ரூ ஆஃப்சா மற்றும் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி மீண்டும் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதை ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்து குக்கி கட்டரில் பூ வடிவில் கட் செய்யவும்.

மீதியுள்ள ரூ ஆஃப்சா அகர் அகரைக் குறுக்கும் நெடுக்குமாக ஒரு சென்டிமீட்டர் அளவில் சின்ன சின்ன பீஸ்களாக வெட்டி வைக்கவும். இதை லெமன் ஜூஸ், ஃப்ரூட் சாலட், ரோஸ் மில்க், ஐஸ்க்ரீம், ஃபலூடா போன்றவற்றில் சேர்த்துப் பரிமாறலாம்.

காபி சாக்லேட் ரூ ஆஃப்சா ஃபலூடா

தேவை: * பிஸ்தா மில்க் – ஒரு டம்ளர் * சப்ஜா விதை (ஊறவைத்தது) – 2 டேபிள்ஸ்பூன் * வாழைப்பழம் (பொடியாக நறுக்கியது), மாம்பழம் (பொடியாக நறுக்கியது) – தேவையான அளவு * ரெடிமேட் மிக்ஸ்டு ஃப்ரூட் டின் (சிறியது) - ஒன்று * வேகவைத்த ஜவ்வரிசி – 5 டீஸ்பூன் * ஷீர் குர்மா – 5 டேபிள்ஸ்பூன் * ஐஸ்க்ரீம் – ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட், முந்திரி - தேவையான அளவு * கோல்டு காபி அகர் அகர் ஜெல்லி, ரூ ஆஃப்சா அகர் அகர் ஜெல்லி (பூ போல வெட்டியதும், பொடியாக நறுக்கியதும்) - தேவையான அளவு (இவற்றின் செய்முறை குறிப்பு 128, 129 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது).

செய்முறை: இதை ஐஸ்க்ரீம் பவுலில் மினி ஃபலூடாவாகவும், பெரிய கண்ணாடி டம்ளரில் ஃபுல் ஃபலூடாவாகவும் செய்யலாம். பவுல் அல்லது கண்ணாடி டம்ளரில் முதலில் சிறிதளவு பழங்கள், பிஸ்தா மில்க், அடுத்து ஷீர் குர்மா ஒரு டேபிள்ஸ்பூன், அடுத்து ஊற வைத்த சப்ஜா விதை சிறிதளவு, மேலே சிறிதளவு பழங்கள் மற்றும் 2 வகை அகர் அகர் ஜெல்லிகள் (காபி, ரூ ஆஃப்சா), மறுபடியும் பழங்கள், ஜவ்வரிசி ஒரு டீஸ்பூன், அடுத்து ஐஸ்க்ரீம் 2 வகை சேர்த்து, கடைசியாக முந்திரி மேலே வைத்து அலங்கரிக்கவும். சூப்பரான காபி சாக்லேட் ரூ ஆஃப்சா ஃபலூடா ரெடி.

காபி அண்டு ரூ ஆஃப்சா லெமனேட்

தேவை: * எலுமிச்சைப் பழம் (சிறியது) – 3 * சப்ஜா விதை (ஊறவைத்தது) – 2 டேபிள்ஸ்பூன் * தண்ணீர் – 400 மில்லி * சர்க்கரை - தேவையான அளவு * கோல்டு காபி அகர் அகர் ஜெல்லி (சிறியதாக வெட்டியது) – 2 டேபிள்ஸ்பூன் * ரூ ஆஃப்சா அகர் அகர் ஜெல்லி (சிறியதாக வெட்டியது) – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து 400 மில்லி தண்ணீரில் கலந்து அவரவர் ருசிக்குத் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கலக்கி, கொட்டைகள் இல்லாமல் வடிகட்டி, பெரிய 2 கண்ணாடி டம்ளரில் ஊற்றவும். ஊறவைத்த சப்ஜா விதைகளையும், பொடியாக வெட்டிய 2 வகை அகர் அகர் (காபி, ரூ ஆஃப்சா) ஜெல்லிகளையும் 2 டம்ளர்களிலும் சேர்த்து நன்கு கலக்கி, ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: கோல்டு காபி அகர் அகர், ரூ ஆஃப்சா அகர் அகர் ஜெல்லி (செய்முறை குறிப்பு 128, 129 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது) எந்த சீஸனிலும் இந்தப் பானத்தை அருந்தலாம். குளிர் சீஸனில் குளிரவைக்காமல் அப்படியே அருந்தலாம்.

ஜில்லுனு ஒரு டேஸ்ட்!

``சைனா கிராஸ், கடல் பாசி என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் அகர் அகர் ஒரு சைவ உணவு. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதை பல வகையாகச் சமைக்கலாம், பிளெய்னாக செய்து, அதில் வேண்டிய ஃபுட் கலர் சேர்த்து நட்ஸ் தூவிக் கொள்ளலாம். பழ வகைகளை நறுக்கிப் போட்டுச் செய்யலாம். பால், ஜவ்வரிசி சேர்த்துக் காய்ச்சியும் சாப்பிடலாம். ரூ ஆஃப்சா, ரோஸ் எசென்ஸ் மற்றும் ஜூஸ் பவுடர், இளநீர் சேர்த்தும் சமைக்கலாம்.

அகர் அகர் அல்சர், வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்ணை ஆற்றும். ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகளில் இதைச் சேர்த்துச் செய்வார்கள். இங்கு சில டிஷ்களில் சேர்க்கப்பட்டிருக்கும் ரூ ஆஃப்சா டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். இல்லையெனில் ரோஸ் மில்க்குக்குப் பயன்படுத்தும் ரோஸ் எசென்ஸை இதற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்’’ என்று கூறும் சமையல் கலைஞர் ஜலீலா கமால், அகர் அகரைப் பயன்படுத்தி, விதவிதமான ரெசிப்பிகளைத் தயாரித்து வழங்கி அசத்துகிறார்.

``புட்டிங், கேக், அல்வா, லெமனேட் என்று வரிசைகட்டி நிற்கும் இந்த உணவு வகைகள், வாய்க்கு ருசியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கி உங்கள் குடும்பத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தும்’’ என்று கூறுகிறார் ஜலீலா.