‘‘நம் முன்னோர் ஏற்படுத்திவைத்துள்ள ஆரோக்கியச் சமையல் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு, நாம் வெளிநாட்டு உணவு வகைகளின் மோகத்துக்கு அடிமையாவதுதான் இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்’’ என்கிறார் திவ்யா. சமையலை வலைப்பூ, முகநூல் பக்கம் என இணையத்தில் மணக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்.

‘`தஞ்சைதான் எங்கள் பூர்வீகம். பெங்களூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தேன். இப்போது கோவையில் பெற்றோருடன் வசிக்கிறேன். உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலைப் படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தேன். நம் பாரம்பர்ய உணவுகளின் மகத்துவத்தை இளைய தலை முறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்

divyasnalabhagam.blogspot.com வலைப்பூவை 2016-ம் ஆண்டு தொடங்கினேன். என்றாலும், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. என் வலைப்பூவுக்காக ஒரு முகநூல் பக்கத்தை (facebook.com/divyasnalabhagam) ஆரம்பித்த போது, என் பயணம் வேகமெடுத்தது.

நம் இந்திய பாரம்பர்ய உணவுகளின் செய்முறைகளை மிக எளிமையான குறிப்புகளுடனும் சுவாரஸ்யமான புகைப்படங்களுடனும் அளித்தது, என் வலைப்பூவை ஹிட்டாக்கியது. அந்த உணவு வகைகளின் மகத்துவத்தையும், ஊட்டச்சத்துகள் பற்றிய குறிப்புகளையும் வழங்கியபோது, வாசகர்களுக்கும் எனக்குமான பிணைப்பு வலுவானது. விரைவாகச் சமைக்க நினைப்பவர்களுக்கு உதவும் எண்ணத்துடன், அனைத்து ரெசிப்பிகளையும் பிரஷர் குக்கர் முறையில்தான் சமைப்பேன் என்பதால், வொர்க்கிங் மாம்களின் ‘சூப்பர் தேங்க்ஸ்’கள் நிறைய கிடைத்தன. நம் குடும்பத்தின் ஆரோக்கியத்துக்கு, பெண்களாகிய நாம், சமையலறைக்குக் கொஞ்சம் கவனம் கொடுக்க வேண்டும். என் வலைப்பூ வலியுறுத்துவதும் இதைத்தான்!” என்கிறார் திவ்யா.

- ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

சீராளங்கரி

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 6
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு, பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நீர் சேர்க்க தேவையில்லை. இட்லி அல்லது இடியாப்பத் தட்டில் சிறிது எண்ணெய் தடவி அரைத்த மாவை அடை போல் தட்டி ஆவியில் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். சூடாக இருக்கும்போதே சிறு சதுர வில்லைகளாகக் கத்தியால் வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, பின் வெட்டிவைத்த துண்டுகளைச் சேர்த்து சிறு அனலில் ஒரு புரட்டுப் புரட்டி, தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களின் பாரம்பர்ய உணவு. ஆவியில் வேகவைத்து எடுப்பதால் மிக ஆரோக்கியமானது; மிக எளிதாகச் செய்யக்கூடியது. இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்ற மாலை சிற்றுண்டி.

பாகற்காய் முருங்கைப்பூ வறுவல்

தேவையானவை:

பாகற்காய் - 2 (நறுக்கவும்)
முருங்கைப்பூ - அரை கப்
வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (நறுக்கவும்)
பூண்டு - 4 பல் (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முருங்கைப்பூவை ஆய்ந்து கழுவி சுத்தம், செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டை வதக்கவும். பிறகு தக்காளி, பாகற்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூடி 5 நிமிடங்கள் வேகவைக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். இறுதியாக முருங்கைப்பூவைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

பாகற்காய் உடம்பில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்ற உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும்.

முருங்கைப்பூவில் டேரிகோஸ்பர்மின் (terigospermin) என்ற பொருள் அதிகம் உள்ளதால், `இந்தியன் வயாக்ரா’ என்று கூறுவர். மேலும், இதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து, கால்சியம் அதிக அளவில் உள்ளது.

கோவைக்காய் மசாலா ரைஸ்

தேவையானவை:

கோவைக்காய் - கால் கிலோ
பாசுமதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - 2 (நறுக்கவும்)
தக்காளி - 2 (நறுக்கவும்)
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒன்று
லவங்கம் - 4
பிரியாணி இலை - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய், எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

மசாலாவுக்கு:

கொத்தமல்லி விதை (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
எள்ளு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8

செய்முறை:

மசாலாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை நன்கு கழுவி, தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் நெய், எண்ணெய்விட்டு பட்டை, லவங்கம், பிரியாணி இலை, வெங்காயம், தக்காளி, கோவைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் பாசுமதி அரிசியைத் தண்ணீர் வடித்துச் சேர்க்கவும். பொடித்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். ஒன்றரை கப் தண்ணீர்விட்டு குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

கோவைக்காய் உடல்சூட்டைத் தணிக்கும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். வாய்வுத்தொல்லை நீக்கும். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். இதைச் சீரக சம்பா அரிசியிலும் செய்யலாம்.

புளி இஞ்சி

தேவையானவை:

இஞ்சி - ஒரு கப்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைக் கழுவி, தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வெல்லத்தைச் சிறிது தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து இஞ்சியின் நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து புளிக்கரைசல், வெல்லம் சேர்த்து, கலவை பச்சை வாசனை நீங்கி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். ஒரு தாளிப்பு கரண்டியில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சிக் கலவையில் கொட்டி நன்கு கலந்து விடவும். சுவையான புளி இஞ்சி தயார்.

குறிப்பு:

ஓணம் விருந்தின் முக்கிய பாரம்பர்ய உணவு. தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது. ஜீரண சக்தியை அதிகரிக்கும்; பசியின்மையைப் போக்கும்.

பப்பாளிப்பழ அல்வா

தேவையானவை:

பப்பாளிப்பழம் - ஒன்று
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - அரை கப்
முந்திரி பருப்பு - சிறிது
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

நன்கு பழுத்த பப்பாளிப்பழத்தைத் தோல், விதைகள் நீக்கி துண்டுகளாக்கி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் நெய்விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். பின் அரைத்த பப்பாளி விழுது, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். தொடர்ந்து சர்க்கரை சேர்த்துக் கைவிடாமல் அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.

குறிப்பு:

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச் சத்து நிறைய உள்ளது. கேன்சரைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மிக எளிதாகச் செய்யக்கூடியது. பப்பாளிப்பழத்தின் இனிப்புக்கேற்ப சர்க்கரையின் அளவை கூட்டியோ, குறைத்தோ கொள்ளவும்.