`பிரிக்க முடியாதது' என்ற பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பண்டிகையும் பலகாரமும். அதில் தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல். பல வகையான இனிப்பு - காரங்களைக் குடும்பத்தினருடன் சுவைத்து மகிழ்வதோடு, அக்கம்பக்கம், உறவு, நட்பு என்று எல்லோருடனும் பகிர்ந்து மகிழும் உற்சாகப் பொழுது. அதுவும் நம் பாரம்பர்ய பலகாரங்கள் தரும் சுவையனுபவம் ஈடு இணையில்லாதது. சீயாளம், அக்கார அடிசில், தேன்குழல் நொக்கல், திருப்பாகம் என நம் சுவை நரம்புகளுக்குச் சொர்க்கத்தையே அறிமுகப்படுத்தும் பாரம்பர்ய உணவுகளின் ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார், சென்னை - மயிலாப்பூரில் உள்ள `தளிகை' ரெஸ்டாரன்ட்டின் உரிமையாளர் நளினா கண்ணன். கூடவே, சாப்பிட்ட பலகாரங்கள் எளிதில் ஜீரணமாக உதவும் தீபாவளி மருந்து தயாரிக்கும் செய்முறையையும் தருகிறார்.

அக்கார அடிசில்

தேவையானவை:

பச்சரிசி - 200 கிராம், கொழுப்பு நீக்கப்படாத பால் - ஒன்றரை லிட்டர், வெல்லத்தூள் - 500 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 3 (பொடிக்கவும்), இரண்டாக உடைத்த முந்திரி - 30 கிராம், உலர்ந்த திராட்சை - 30 கிராம், நெய் - ஒரு கப், ஜாதிக்காய்த்தூள் - சிறிதளவு, தண்ணீர் - 2 கப், வெதுவெதுப்பான பால் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: அரிசியைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து வடியவிடவும். குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் ஊறவைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு வெல்லம் சேர்த்துக் குறைந்த தீயில் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டித் தனியே எடுத்துவைக்கவும்.

வெண்கல உருளியில் ஒரு கப் தண்ணீருடன் ஒன்றரை லிட்டர் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு பாசிப்பருப்பு, கடலைப்பருப்பைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். கொதிக்கும் பாலில் வடிகட்டிய அரிசி, வறுத்த பருப்பு வகைகளைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்துக் கலவை வெந்து குழைந்த பிறகு, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, மேலும் 5 நிமிடங்கள் கிளறவும். அதனுடன் வெல்லக் கரைசல் சேர்த்து 15 நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். பிறகு ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ கலவை சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

கடாயில் நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுக்கவும். நிறம் மாறியதும் திராட்சை சேர்க்கவும். ஜாதிக்காய்ப் பொடியும் சேர்த்து, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து அனைத்தையும் தயாராக உள்ள கலவையில் சேர்த்துக் கிளறி மூடிவைக்கவும். 2 நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.

குறிப்பு: கிட்டத்தட்ட சர்க்கரைப் பொங்கலின் சுவையில் இருக்கும். பாலிலேயே வேகவைப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். இது தீபாவளியின் பாரம்பர்ய இனிப்பு.

உக்காரை

தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வெல்லத்தூள் - ஒன்றரை கப், தேங்காய்த் துருவல் - அரை கப், நெய் - அரை கப், உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உலர்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

கடலைப்பருப்புடன் பாசிப்பருப்பு, பச்சரிசி, உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு வடிகட்டி, லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில் சற்று கொரகொரவென அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் வைத்து 25 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை ஒரு மணி நேரம் நன்கு ஆறவிடவும். (முன்பே தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்). ஆறிய பருப்புக் கலவையை பிரெட் தூள் பதத்துக்கு விரல்களால் நன்கு உதிர்த்துத் தனியாக வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர்விட்டு வெல்லம் சேர்த்து, குறைந்த தீயில் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிகட்டவும். வடிகட்டிய வெல்லக் கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து, 10 முதல் 12 நிமிடங்களுக்குச் சிறு தீயில் கொதிக்கவிடவும். உருட்டு பாகுப் பதம் வந்ததும் இறக்கவும் (சிறிதளவு பாகை எடுத்துத் தண்ணீரில் போட்டால் நன்கு உருட்ட வர வேண்டும்).

அகலமான பாத்திரத்தில் உதிர்த்த பருப்புக் கலவையுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெல்லப்பாகை சிறிது சிறிதாகச் சேர்த்து, பாகுக் கலவை முழுவதும் பரவும்படி மெதுவாகக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுத்து பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மறுநாள் பரிமாறலாம்.

குறிப்பு: தீபாவளிக்கு முதல் நாளே தயாரிப்பது வழக்கம். இனிப்புப் புட்டு வகையைச் சேர்ந்த இதை தீபாவளியன்று காலையில் இட்லி, பஜ்ஜியுடன் பரிமாறுவார்கள்.

தேன்குழல் நொக்கல்

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், சிவப்புக் காராமணி - அரை கப், சர்க்கரை - 8 கப், தண்ணீர் - 5 கப், நெய் - அரை லிட்டர், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை: அரிசியைக் களைந்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து 15 நிமிடங்களுக்கு நிழலில் காயவைத்து, மிக்ஸியில் மாவாக அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் காராமணியை 5 நிமிடங்கள் வறுத்தெடுத்து ஆறிய பிறகு மாவாக அரைத்தெடுக்கவும். அரிசி மாவு, காராமணி மாவு, கடலை மாவு, உப்பு நான்கையும் சலித்து அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி (மாவில் மிளகு அளவு எடுத்து உருட்டிப் போடவும். மாவு மேலெழுந்து வந்தால் நெய் சரியான பதத்துக்குச் சூடாகியிருப்பதாக அர்த்தம்), அடுப்பைச் சிறு தீயில் வைத்து, மாவைத் தேன்குழல் அச்சில் போட்டுப் பிழிந்து இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும். பொரிக்கும்போதே முறுக்கை உடைத்து
விட்டால், வெளியில் எடுத்ததும் வேகாத பகுதிகள் இருப்பதைத் தவிர்க்கலாம் (எண்ணெய் தெறிக்காமல் கவனமாகச் செய்யவும்). பொரித்த தேன்குழலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும்.

ஒரு கப் தண்ணீரில் 2 கப் சர்க்கரை ஏலக்காய்த் தூள் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும். பாகுப் பதம் வந்ததும் பக்கவாட்டில் வெள்ளைநிறப் படிமம் சேரும். அப்போது அடுப்பை அணைத்துப் பாகை ஒரு பகுதி தேன்குழலில் விட்டு மரக் கரண்டியால் கலந்துவிடவும். இதே முறையில் மீதமுள்ள சர்க்கரையையும் பாகாகத் தயாரித்துக்கொள்ளவும். மொத்தப் பாகையும் இப்படிக் கலந்ததும் கலவையை அகலமான தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறியதும் சின்னத் துண்டுகளாக உடைக்கவும். மீண்டும் ஒருமுறை சர்க்கரைப் பாகு சேர்த்தால் இன்னும் கனமான கோட்டிங் வரும். சுவை கூடும். இன்னொரு பகுதி தேன்குழலையும் இதே மாதிரி செய்யவும். மொத்தமாகக் கலந்து வைக்கவும்.

குறிப்பு: நொக்கல் என்பது பொதுப்பெயர். முந்திரி, பாதாம், தேன்குழல் என எதை வேண்டுமானாலும் சேர்த்து இதைச் செய்யலாம்.

திருப்பாகம்

தேவையானவை:

கடலை மாவு - அரை கப், சர்க்கரை - ஒன்றரை கப், பால் - அரை கப், நெய் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - 5 இதழ்கள் (ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊறவைக்கவும்), நெய்யில் வறுத்து உடைத்த முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை (ஒரு டீஸ்பூன் பாலில் கரைக்கவும்)

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் கடலை மாவுடன் சர்க்கரை, பால், நெய் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள்வரை கிளறவும். கலவை சற்றுக் கெட்டியான பதத்துக்கு வரும்போது இறக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, முந்திரி, திராட்சை, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்து ஆறிய பிறகு பரிமாறவும்.

குறிப்பு: பாதாம் அல்வாவை நினைவூட்டும் சுவை. அதிக அளவில் நெய் சேர்ப்பதால் நாள்கணக்கில் சுவை மாறாமல் இருக்கும். பால் சேர்த்துச் செய்யப்படும் இனிப்புகளில் முதலிடம் இதற்குத்தான். பாரம்பர்யமானதும்கூட.

திரட்டுப்பால்

தேவையானவை:

கொழுப்பு நீக்கப்படாத பால் - 2 லிட்டர், வெல்லத்தூள் - 150 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். வெண்கல உருளியாக இருந்தால் மிகவும் சிறந்தது.

அதில் பாலைச் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து 30 முதல் 35 நிமிடங்கள் கிளறவும். பால் கொதித்து மூன்றில் ஒரு பாகமாகச் சுண்டிய பிறகு வெல்லத்தூள் சேர்த்துக் கிளறவும். (இந்த நிலையில் பால் லேசாகத் திரிந்ததுபோல மாறும்). கைவிடாமல் மேலும் கிளறவும். அதனுடன் நெய் சேர்த்து நீர் முழுவதும் வற்றும்வரை கிளறவும். இறுதியாக ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பாரம்பர்ய பஜ்ஜி

தேவையானவை:

கடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ஓமம் - ஒரு டீஸ்பூன் (அலசி உலர வைக்கவும்), எண்ணெய் - அரை லிட்டர், உப்பு - ஒன்றரை டீஸ்பூன், வாழைக்காய், பெரிய கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய பஜ்ஜி மிளகாய், ஓமவல்லி இலை, அப்பளம் போன்றவை (விருப்பத்துக்கு ஏற்ப) - 20 முதல் 30 துண்டுகள்.

செய்முறை:

கடலைப்பருப்புடன் பச்சரிசி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் சேர்த்து மிகக் குறைந்த அளவில் தண்ணீர்விட்டு மிருதுவான மாவாக அரைத்தெடுக்கவும் (மாவை அரைத்ததும் ஒரு விரலை மாவினுள் விட்டுப் பார்த்தால் விரலை வெளியே எடுக்கும்போது விரல் முழுவதும் கெட்டியான மாவுப் படிமம் இருக்க வேண்டும். அதுவே சரியான பதம்). மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கலாம். அந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், ஓமம் சேர்த்து நன்கு கலந்து சில நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். பஜ்ஜிக்குத் தேவையான காய்கறிகளை நன்கு கழுவி தோல் சீவி வில்லைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு புகையும் பதத்துக்கு வந்ததும் தீயைக் குறைக்கவும். பிறகு காய்கறித் துண்டுகளை மாவில் முக்கி எடுத்துச் சூடான எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்து, அதிகப்படியான எண்ணெயை வடியவிடவும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: `தீபாவளிக்கு பஜ்ஜியா' எனக் கேட்கலாம் பலர். ஆனால், இது ரெடிமேட் மாவை வாங்கிக் கரைத்துக் காய்கறிகளை முக்கிப் பொரித்தெடுத்துச் செக்கச் சிவக்கச் சாப்பிடுகிற வழக்கமான பஜ்ஜி அல்ல. பாரம்பர்யமான பஜ்ஜி. தீபாவளி என்றால் அந்தக் காலத்தில் உக்காரையும் பஜ்ஜியும்தான் சூப்பர் ஜோடி. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ரெடிமேடு பலகாரங்களைக் கொடுப்பது இந்தத் தலைமுறை வழக்கம். ஆனால், அந்தக் காலத்தில் சூடான பஜ்ஜியும், அதற்குத் தோதான உக்காரையும் கொடுப்பதுதான் மரியாதை.

சீயாளம்

தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு கப், பாசிப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், இட்லி அரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 12 இலைகள்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: கடலைப்பருப்புடன் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி, இட்லி அரிசி சேர்த்து நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, அதனுடன் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், அரை கப் தண்ணீர் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி அரைத்த மாவை ஊற்றி ஆவியில் 15 முதல் 20 நிமிடங்கள்வரை வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் இட்லிகளை பிரெட் தூள் பதத்துக்கு விரல் நுனிகளால் நன்கு உதிர்க்கவும் (முதல் நாளே கூட இந்த இட்லிகளைத் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம்). வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு உதிர்த்த இட்லிக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறி, லேசான பிரவுன் நிறம் வந்ததும் இறக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை கலந்து 2 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: இந்தக் காலத்து ஃப்ரைடு இட்லி, மசாலா இட்லி, மினி இட்லிகளுக்கெல்லாம் முன்னோடி என இதைச் சொல்லலாம். பருப்புக் கலவையில் தயாரிக்கப்படுவதால் புரதம் நிறைந்த கார வகை.

குணுக்கு

தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், இட்லி அரிசி - அரை கப், காய்ந்த மிளகாய் - 8 முதல் 10 வரை, கறிவேப்பிலை - சிறிதளவு, ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - இரண்டரை டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை:

கடலைப்பருப்புடன் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி, இட்லி அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தெடுக்கவும். அரைத்த மாவுடன் உப்பு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், பச்சரிசி, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கலக்கவும். இதை அப்படியே மூடி 10 நிமிடங்கள் வைக்கவும் (காரம் தேவையானால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்). வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தீயைக் குறைத்து மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

பெயருக்கேற்றபடி குட்டி வடிவத்தில் கொள்ளை ருசியான கார வகை இது. சட்டெனச் செய்து முடிக்கலாம். தீபாவளி ஸ்பெஷல் காரங்களின் பெருமை பேசப் போகிற ட்ரெய்லர் மாதிரியானது இது.

பால் அல்வா

தேவையானவை:

கொழுப்பு நீக்கப்படாத பால் - 2 லிட்டர், சர்க்கரை - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன், உடைத்த பாதாம் - 2 டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை (வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்துக் கரைக்கவும்), நெய் - அரை கப்

செய்முறை:

வெண்கல உருளியில் பால் ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து அரை மணி நேரம் கொதிக்கவிடவும். பால் கால் பாகமாக வற்றியதும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் முழுவதும் வற்றும்வரை கிளறி இறக்கி ஆறவிடவும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்கவும். அதனுடன் பால் கலவையைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி இறக்கவும் (அதாவது அதில் உள்ள சர்க்கரை பொன்னிறமாக மாறும்). அதனுடன் ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தீபாவளி மருந்து

தேவையானவை:

மல்லி (தனியா), மிளகு, சீரகம், ஓமம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சுக்கு - 50 கிராம், ஏலக்காய் - 6, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 50 கிராம், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மி.லி,
தண்ணீர் - ஒரு கப்

செய்முறை:

ஒரு கப் வெந்நீரில் மல்லி, மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடிகட்டிவிட்டு மிக்ஸியில் மிருதுவாக அரைத்தெடுக்கவும். கடாயில் அரைத்த விழுதுடன் நல்லெண்ணெய், வெல்லத்தூள் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கிளறவும். அதனுடன் நெய் சேர்த்துக் கிளறி, கலவை கெட்டியாக வரும்போது இறக்கி ஆறவிடவும். ஆறியதும் தேன் கலந்து ஈரமில்லாத டப்பாவில் சேகரிக்கவும்.

குறிப்பு: கங்கா ஸ்நானத்துக்கு இணையாக தீபாவளியில் இன்னொரு விஷயமும் பிரபலம். அது தீபாவளி மருந்து. வீட்டுப் பெரியவர்கள், குடும்பத்திலுள்ள அனைவருக்கும் குட்டிக்குட்டியாக மூன்று உருண்டைகள் தீபாவளி மருந்தைக் கொடுப்பது மரபு. செரிமானத்தைச் சீராக்கும். மருத்துவ குணம் கொண்டது இந்த மருந்து. தீபாவளியின்போது கணக்கின்றிச் சாப்பிடுகிற இனிப்பு, காரங்கள் வயிற்றைப் பதம் பார்க்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிகை சிகிச்சையும்கூட.

- ஆர்.வைதேகி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்