வால்நட் முந்திரி பர்ஃபி
தேவையானவை: வால்நட் பருப்பு - ஒரு கப், முந்திரி - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - அரை கப்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
செய்முறை: வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும். இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது!
- லதா சுந்தரராஜன், கல்பாக்கம்
மஷ்ரூம் அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப், பட்டன் மஷ்ரூம் - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பட்டை - லவங்கம் (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதில் தேங்காய் துருவல், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி உப்பு, பட்டை - லவங்கம் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். பட்டன் மஷ்ரூமைப் பொடியாக நறுக்கி, மாவுக் கலவையில் சேர்த்து அடை மாவுப்பதத்தில் கலக்கவும். ஒரு தவாவில் மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த அடைக்கு, புதினா சட்னி நல்ல காம்பினே ஷன்.
- எஸ்.ரமாமணி, சென்னை-49
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
அவருடைய கமென்ட்ஸ்...
வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.
மஷ்ரூம் அடை: மஷ்ரூமுடன் சிறிதளவு பரங்கிக்காய், முருங்கை கீரை சேர்த்து செய்தால், கலர்ஃபுல்லாகவும், டபுள் சுவையுடனும் இருக்கும்.