Published:Updated:

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

Published:Updated:
கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

ன்று பாட்டி சுட்ட வடைக்கும் இன்று அம்மா சுடும் வடைக்கும் கூட வித்தியாசம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் நாம். என்னதான் ஸ்வீட் ஸ்டால்களில் விதவிதமான ஸ்வீட் கார வகைகளை வாங்கிச் சுவைத்தாலும்கூட, வீட்டில் செய்யப்படும் பட்சணங்களின் ருசியே தனி. இந்த நிலையில் பாரம்பர்யமிக்க சுவையில் தீபாவளி தொடங்கி எந்நாளும் ருசிக்கும்வகையில் ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ் ரெசிப்பிகளை வழங்குகிறார் கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்.

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

வரகு, ராகி ஆகிய சிறுதானியங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் காரங்கள், கருப்பட்டியைப் பிரதானமாக்கிய அல்வா, வெல்லம் இனிக்கும் மைசூர்பாக், கோதுமையைக்கொண்டு பிழிந்த ஓமப்பொடி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் சோமாஸின் உள்ளே ட்ரைஃப்ரூட்ஸ்... இப்படி இந்த ரெசிப்பிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை மட்டுமல்ல... சுவையும் சத்தும் நிறைந்தவை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

வரகு சீப்பு சீடை

தேவையானவை:

 வரகு மாவு, அரிசி மாவு - தலா கால் கிலோ
 பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 100 கிராம்
 வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய்ப்பால் - ஒரு கப்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

பாசிப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியே வறுத்து அரைத்துச் சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வரகு மாவு, அரிசி மாவு, அரைத்த மாவு வகைகள், வெண்ணெய், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, தேங்காய்ப்பாலைச் சூடேற்றிக் கலந்து, மாவை முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்). பிறகு சீப்பு சீடை அச்சில் மாவைப் போட்டு ஒரு கனமான ஷீட்டில் நீளமாகப் பிழிந்து இரண்டு இன்ச் சைஸுக்கு கட் செய்து அதை ஆள் காட்டி விரலில் சுற்றி ஒட்டித் தனித்தனியே எடுத்து வைக்கவும். எண்ணெயை நன்கு காயவைத்துச் செய்துவைத்துள்ள சீப்பு சீடைகளைப் போட்டு அடுப்பைக் குறைத்து நிதானமாக வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்பு:

வரகு மாவு கடைகளில் கிடைக்கும். இல்லையென்றால் வரகு, பச்சரிசி இரண்டையும் நீரில் களைந்து காயவைத்து வறுத்த பருப்பு வகைகள் சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளலாம்.

அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்து குறைவு.

கதம்ப முறுக்கு

தேவையானவை:

 புழுங்கலரிசி - அரை கிலோ
 பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு,        
 பொட்டுக்கடலை - தலா 100 கிராம்
 மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
 புழுங்கலரிசி - 100 கிராம் (வறுத்துப் பயன்படுத்த)
 வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 ஓமம் - ஒரு டீஸ்பூன்
 எள் - 2 டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

புழுங்கலரிசியைக் நீரில் களைந்து எடுத்து நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பைத் தனித்தனியே வறுத்து இளம் சிவப்பாக எடுத்து வைக்கவும். பொட்டுக்கடலையை லேசாகச் சூடேற்றி வைக்கவும்.

100 கிராம் புழுங்கலரிசியை வாணலியில் போட்டுப் பொரியும் வரை வறுத்து வைக்கவும். அரிசியுடன் வறுத்த பொருள்களையும் சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்துவந்து இதனுடன் மிளகாய்த்தூள், ஓமம், வெண்ணெய், எள், உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். பிறகு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெயைக் காயவிடவும். சிறு சிறு தட்டுக்களைக் குப்புறப்போட்டு எண்ணெய் தடவி, மாவை முறுக்கு அச்சில் போட்டு, தட்டுகளில் முறுக்குகளாகப் பிழிந்து காய்ந்த எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு இருபுறமும் திருப்பிவிட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்.

பொதுவாக முறுக்கிய நிலையில் அச்சுமூலம் பிழியப்படுவதால் முறுக்கு என்ற பெயர் வந்தது.

டிரை ஃப்ரூட்ஸ் சோமாஸ்

தேவையானவை:

 மைதா - கால் கிலோ
 பொட்டுக்கடலை, சர்க்கரை - தலா 100 கிராம்
 பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 6
 கொப்பரைத் தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
 எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 கசகசா - 2 டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
 நெய் - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - ஒரு சிட்டிகை

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

மைதாவுடன் 2 டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். பொட்டுக்கடலையைக் கொரகொரப்பாக அரைக்கவும். டிரை ஃப்ரூட்களையும் கொரகொரப்பாக அரைக்கவும். சர்க்கரையைப் பொடிக்கவும். தேங்காய்த் துருவலை ஒரு டீஸ்பூன் நெய்விட்டு நன்கு வறுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எள் சேர்த்து வெடித்ததும் கசகசா, அரைத்த டிரை ஃப்ரூட்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சர்க்கரைத்தூள், பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். பூரணம் ரெடி. 

பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி மாவு தொட்டுத் தேய்த்து சப்பாத்திகளாக்கவும். சப்பாத்தியில் நடுவில் பூரணம் நிரப்பி ஓர் ஓரத்தில் மைதா பேஸ்ட் வைத்து சப்பாத்தியை ஒட்டி, சோமாஸ் ரோலரில் கட் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய வைட்டமின்கள் உலர்பழங்களில் நிறைந்துள்ளன.

கருப்பட்டி அல்வா

தேவையானவை:

 கோதுமை மாவு - 200 கிராம்
 கருப்பட்டித்தூள் - 400 கிராம்
 நெய் - தேங்காய் எண்ணெய் கலவை - 150 மில்லி
 ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
 முந்திரி - தேவையான அளவு

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

கோதுமை மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கையில் கரைத்துப் பால் எடுக்கவும். கரைத்த சக்கையை மறுமுறையும் அரை டம்ளர் தண்ணீர்விட்டுக் கரைத்துப் பால் எடுத்து முதல் பாலுடன் சேர்த்து 2 மணி நேரம் தெளியவிட்டு, தண்ணீரை வடித்துப் பாலை மட்டும் பிரித்தெடுக்கவும். பிறகு கருப்பட்டியை அரை கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் கருப்பட்டி நீரை ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். மாவில் இருந்து பிரித்த பாலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, பாகுடன் சேர்த்துக் கிளறவும். 5 நிமிடங்களில் லேசாக கெட்டிப்படும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக நெய் - எண்ணெய் கலவை சேர்த்துக் கைவிடாமல் 45 நிமிடங்கள் கிளற வேண்டியிருக்கும். இறுதியாக நெய் பிரிந்துவந்து அல்வா கெட்டியாகும் பக்குவத்தில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கினால் கமகம கருப்பட்டி அல்வா தயார்.

குறிப்பு:

சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால், ஒரு பங்கு மாவுக்கு மூன்று பங்கு தேவைப்படும். வெல்லம் சேர்த்தால் இரண்டு பங்கு போதுமானது. நெய் - தேங்காய் எண்ணெய் கலவைக்குப் பதிலாக முழுவதும் நெய் மட்டும் பயன்படுத்தியும் செய்யலாம்.

ரத்தத்தைச் சுத்திரிகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் கருப்பட்டி உதவும்.

கோதுமை ஓமப்பொடி

தேவையானவை:

 கோதுமை மாவு - 200 கிராம்
 கடலை மாவு - 100 கிராம்
 அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 ஓமம் - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

கோதுமை மாவை இட்லிப் பானையில் 5 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும். ஓமத்தை நைஸாக அரைத்து வடித்துத் தண்ணீரைத் தனியே வைக்கவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கி ஓமத்தண்ணீர் ஊற்றித் தேவைக்கு மேலும் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணெய் ஊற்றி, காய்ந்த பிறகு பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழிந்து நன்கு வெந்ததும் எடுக்கவும் (மிதமான தீயில் வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்).

விருப்பப்பட்டால் ஆறியதும் நொறுக்கி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு கலந்து சாப்பிடலாம்.

உலகில் மிக அதிக பரப்பளவில் பயிரிடப்படும் பயிர் கோதுமையே.

மைசூர்பாக் (வெல்லம்)

தேவையானவை:

 கடலை மாவு - ஒரு கப்
 வெல்லத்தூள் - 2 கப்
 நெய், எண்ணெய் கலவை - ஒன்றரை கப்

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டுச் சூடாக்கி, வடிகட்டி வைக்கவும். அடிகனமான வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு வைக்கவும். பிறகு மாவைச் சிறிது சிறிதாகத் தூவிக்கொண்டே கைவிடாமல் கிளறவும். இன்னொரு அடுப்பில் நெய் - எண்ணெய்க் கலவையைச் சூடாக்கி, மைசூர்பாகு கிளறக் கிளற இதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இடைவிடாமல் கிளறவும். ஊற்றிய எண்ணெய் - நெய் மாவுக் கலவையில் இருந்து பிரிந்து வரும் பக்குவத்தில் அடுப்பில் இருந்து இறக்கவும். நெய் தடவிய ட்ரேயில் ஊற்றிச் சமப்படுத்தவும்.

5 நிமிடங்கள் கழித்து வில்லைகளாக்க கோடு மட்டும் போட்டு வைக்கவும்.

20 நிமிடங்கள் ஆறிய பின் வில்லைகளை அழுந்தக் கீறிப் பிரித்துத் துண்டுகளாக எடுக்கவும்.

நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் மைசூர் அரண்மனையில்தான் முதன்முதலில் மைசூர்பாகு தயாரிக்கப்பட்டது.

மிளகு காரா சேவ்

தேவையானவை:

 கடலை மாவு - கால் கிலோ
 அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
 மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

மிளகை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். கடலை மாவைச் சலித்து வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி ஒரு டீஸ்பூன் வெண்ணெய் அல்லது காய்ந்த எண்ணெய் சேர்த்துத் தேவையான தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும். பிறகு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெயைக் காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் தீயைக் குறைத்துவிட்டு, காரா சேவ் கரண்டியில் மாவை வைத்துக் கையால் அழுத்தித் தேய்த்துவிட்டு, பிறகு தீயைக் கூட்டி மொறுமொறுப்பாக வந்ததும் எடுக்கவும். எண்ணெய் சலசலப்பு அடங்கும் வரை புரட்டிவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

கையால் அழுத்தித் தேய்ப்பது சிரமமாகத் தெரிந்தால் தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்தெடுத்து, சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளலாம்.

மிளகு வணிகம் மிக லாபகரமானதாக இருப்பதால் மிளகை `கறுப்புத் தங்கம்’ என்று குறிப்பிடுகின்றனர்.

ரவா மில்க் ஸ்வீட்

தேவையானவை:

 வெள்ளை ரவை - ஒரு கப்
 நெய் - ஒரு கப்
 சர்க்கரை - 2 கப்
 பால் - 3 கப்
 ரோஸ் எசென்ஸ் - 10 சொட்டு
 சாரைப்பருப்பு, பிஸ்தா, முந்திரி - தேவையான அளவு
 இனிப்பில்லாத கோவா - 50 கிராம்

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

பிஸ்தா, முந்திரியைப் பொடியாக நறுக்கி, சிறிதளவு நெய்யில் வறுத்து வைக்கவும். சாரைப்பருப்பை 20 நிமிடங்கள் ஊறவிட்டு, நீரை வடித்து, சிறிதளவு நெய்யில் வறுத்து வைக்கவும். ரவையை லேசாக வறுக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ரவை, சர்க்கரை, பால், நெய் சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி கரைத்த ரவைக் கலவையைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பிறகு தீயைக் குறைத்து, சிறு தீயில் நன்கு கிளறிக்கொண்டே கோவா சேர்க்கவும். 15 நிமிடங்களில் நெய் பிரிந்து வரும் பக்குவத்தில் ரோஸ் எசென்ஸ், சாரைப்பருப்பு, பிஸ்தா, முந்திரி தூவி அடுப்பை அணைக்கவும். பின்னர் மூடி போட்டு அந்தப் பாத்திரத்திலேயே ஒரு மணி நேரம் வைத்திருந்து நெய் தடவிய ட்ரேயில் பரப்பி, விருப்பப்பட்ட வடிவில் கட் செய்து துண்டுகளாக்கவும். வித்தியாசமான ரவா ஸ்வீட் ரெடி.

குறிப்பு:

இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். அரை கிலோ ரவைக்கு 100 கிராம் கோவா போதுமானது. நெய்யுடன் எண்ணெய் கலந்தும் செய்யலாம்.

கோதுமை, அரிசி, மக்காச்சோளம் ஆகியவற்றிலிருந்து ரவை உற்பத்தி செய்யப்படுகிறது.

சோளி

தேவையானவை:

 மைதா - அரை கிலோ
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

மைதா, வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து தேவையான தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 2 நிமிடங்கள் நன்கு அடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூடி போட்டு அரை மணி நேரம் வைக்கவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சோளிக் கட்டையில் ஒவ்வொன்றாகத் தேய்த்து எல்லா மாவையும் சோளிகளாகத் தயார் செய்யவும் (ஒன்றின் மேல் ஒன்று விழுந்தாலும் எண்ணெயில் போடும்போது பிரிந்துவிடும்). பிறகு எண்ணெயைக் காயவைத்து சோளிகளைப் போட்டுப் புரட்டிவிட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்பு:

சோளிக்கட்டை செட்டிநாட்டில் மிகவும் பிரபலம்.

தென்னிந்திய மைதா பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. வடஇந்தியாவில் கோதுமையின் கடைசி வரவே மைதா.

ராகி ரிப்பன் பக்கோடா

தேவையானவை:

 ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 200 கிராம்
 பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம்
 வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 எள் - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - தேவையான அளவு
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கருப்பட்டியில் அல்வா... வெல்லத்தில் மைசூர்பாக்!

செய்முறை:

பாத்திரத்தில் மாவு வகைகள் அனைத்தையும் போட்டு வெண்ணெய், எள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர்விட்டு முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரிப்பன் பக்கோடா அச்சில் மாவை நிரப்பி எண்ணெய்க்குள்ளேயே நேரடியாகப் பிழிந்து, சிறு தீயில் வேகவிட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுத்தால் சத்தான, கரகர மொறுமொறு ராகி ரிப்பன் பக்கோடா ரெடி.

கேழ்வரகு நான்காயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படுகிறது.

- சரஸ்வதி அசோகன், நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism