Published:Updated:

எடை குறைக்க இனிய காய்!

எடை குறைக்க இனிய காய்!
பிரீமியம் ஸ்டோரி
எடை குறைக்க இனிய காய்!

எடை குறைக்க இனிய காய்!

எடை குறைக்க இனிய காய்!

எடை குறைக்க இனிய காய்!

Published:Updated:
எடை குறைக்க இனிய காய்!
பிரீமியம் ஸ்டோரி
எடை குறைக்க இனிய காய்!

சாதாரணமாக நினைக்கமுடியாத அளவுக்கு நிறைய சத்துகள் அடங்கியது பறங்கிக்காய். ஆனால், பறங்கிக்காயை அபூர்வமாகத்தான் சமையலில் சேர்க்கிறோம். நார்ச்சத்து நிறைந்த இந்தக் காய் எடையை குறைக்க  உதவும். அதோடு, உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கவல்லது.  சரும புண்களை ஆற்றவும், சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், தழும்புகளை மறைய செய்யவும் பறங்கிக்காய் உதவுகிறது. இதிலுள்ள பீட்டா கரோட்டின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எடை குறைக்க இனிய காய்!

அமெரிக்க பூர்வீக உணவில்கூட பறங்கிக்காய்க்குப் பிரதான இடம் உண்டு. இவ்வளவு பெருமைமிக்க பறங்கிக்காயில் பல விதமான ரெசிப்பிகளை அழகிய படங்களுடன்  அளித்து அசத்தியுள்ளார் ராஜபாளையத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் அகிலா விமல்.

- அகிலா விமல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடை குறைக்க இனிய காய்!

பம்ப்கின் ஃப்ரை வித் ஹனி மஸ்டர்ட் மேயோ

தேவையானவை:

 பறங்கிக்காய் - 300 கிராம் (தோல், விதை நீக்கி நீளவாக்கில், அரை செ.மீ கனம் கொண்ட துண்டுகளாக நறுக்கவும்)
 மைதா மாவு - முக்கால் கப்
 அரிசி மாவு  - கால் கப்
 சமையல் சோடா, மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஹனி மஸ்டர்ட் மேயோ செய்ய:

 மயோனைஸ் - அரை கப்
 வறுத்து அரைத்த கடுகுத்தூள் - அரை டீஸ்பூன்
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

மைதா மாவுடன் அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். மயோனைஸுடன் கடுகுத்தூள், தேன் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பறங்கித்துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். அவற்றின் மீது மயோனைஸ் கலவை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்குக் கிடைக்கும் ஆற்றல் ஒருமுறை உலகைச் சுற்றிவரப் போதுமானது!

ஆப்பிள் மெல்ட்ஸ் வித் பம்ப்கின் கெட்சப்

தேவையானவை:

 சிறிய ஆப்பிள் - ஒன்று (மெல்லியதாகச் சீவவும்)
 திக்கான பிரெட் ஸ்லைஸ் (அ) பன் - 6
 சீஸ் ஃக்யூப்ஸ் - 3 (துருவவும்)
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தண்டு - சிறிதளவு
 டொமேட்டோ கெட்சப் - 1/3 கப்
 பம்ப்கின் ஃப்யூரி - அரை கப்
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

டொமேட்டோ கெட்சப்புடன் தேன், பம்ப்கின் ஃப்யூரி சேர்த்துக் கலக்கவும். இதுவே பம்ப்கின் கெட்சப். தோசைக்கல்லைக் காயவிட்டு, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிரெட் அல்லது பன்களை வைத்து, அதன் மீது 4-5 ஆப்பிள் சீவல்களை வைக்கவும். அதன் மீது துருவிய சீஸ், உப்பு, மிளகுத்தூள் தூவி, மூடி போட்டு, சீஸ் உருகும் வரை டோஸ்ட் செய்து எடுக்கவும். மேலே கொத்தமல்லித்தண்டு தூவி, சூடாக பம்ப்கின் கெட்சப்புடன் பரிமாறவும்.

குறிப்பு: 

ஆப்பிளுக்குப் பதிலாக பேரிக்காய் சேர்க்கலாம்.

ஆப்பிள்களில் 7500-க்கும் அதிக ரகங்கள் உள்ளன.

பம்ப்கின் டிவில்ட் எக்ஸ்

தேவையானவை:

 முட்டை - 6 (வேகவைத்துத் தோல் உரிக்கவும்)
 பம்ப்கின் ஃப்யூரி - 3 டேபிள்ஸ்பூன்
 மயோனைஸ் - 2 டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை
 உப்பு - ஒரு சிட்டிகை (விரும்பினால்)

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

முட்டைகளை இரண்டாக நீளவாக்கில் நறுக்கி உள்ளிருக்கும் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுக்கவும். மஞ்சள் கருவுடன் பம்ப்கின் ஃப்யூரி, மயோனைஸ், உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். இதை ஐசிங் பையில் நிரப்பி, நுனியில் கத்தரிக்கவும். தட்டில் முட்டைகளை அடுக்கி, மஞ்சள் கரு இருந்த இடத்தில் பைப்பிங் கலவையைப் பிழிந்து நிரப்பவும். மேலே கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூளை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

மிளகாய்த்தூளைத் தூவும்போது வடிகட்டி பயன்படுத்தி, தூவினால் எல்லா இடங்களிலும் பரவலாக வரும்.

உடலுக்குத் தேவையா ஏ, பி, சி, டி. இ ஆகிய வைட்டமின்கள் முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன.

பம்ப்கின் க்ரீம் சாக்லேட் கப்ஸ்

தேவையானவை:

 பம்ப்கின் பட்டர் - அரை கப்
 க்ரீம் சீஸ் - 1/3 கப்
 வெனிலா எசென்ஸ் - கால் டீஸ்பூன்
 நறுக்கிய டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் - தலா ஒரு கப்
 உப்பு - ஒரு சிட்டிகை

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

பம்ப்கின் பட்டருடன் க்ரீம் சீஸ், வெனிலா எசென்ஸ், உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுக்கவும். டபுள் பாய்லிங் முறையில் சாக்லேட் வகைகளை உருக்கி எடுக்கவும். சிலிக்கான் மோல்டின் ஓரங்களில் அடிப்பாகத்தில் உருக்கிய சாக்லேட் கலவையைப் பரவலாகத் தடவி, மேடையின் மீது லேசாகத் தட்டவும். பின்னர் அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, அதனுள் ஒரு டேபிள்ஸ்பூன் அரைத்த பம்ப்கின் கலவையை வைத்து, மேலே உருக்கிய சாக்லேட்டை ஊற்றி மூடவும். மீண்டும் ஃப்ரீசரில் 2-3 மணி நேரம் வைத்து, பிறகு மோல்டிலிருந்து வெளியே எடுக்கவும்.

குறிப்பு:

விரும்பினால் பரிமாறும் முன்னர், உருக்கிய வெள்ளை சாக்லேட் அல்லது ஐஸிங் சுகரை சூடான தண்ணீரில் கரைத்து, கப் மேலே ஊற்றி அலங்கரித்துப் பரிமாறலாம்.

குங்குமப்பூவுக்கு அடுத்தபடியாக, வெனிலாவே விலையுயர்ந்த வாசனைப் பொருளாக இருக்கிறது.

பம்ப்கின் பிரெட்

தேவையானவை:

 உலர்ந்த ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
 காய்ச்சிய பால் - அரை கப்
 வெதுவெதுப்பான நீர் - 2 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - கால் கப்
 பம்ப்கின் ஃப்யூரி - 1/3 கப்
 சர்க்கரை - கால் கப்
 மைதா மாவு - ஒன்றரை கப்
 கோதுமை மாவு - ஒரு கப்
 காய்ச்சி ஆறவைத்த பால், வெள்ளை எள் - சிறிதளவு
 பம்ப்கின் ஸ்பைஸ், உப்பு - தலா அரை டீஸ்பூன்

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

ஈஸ்ட்டுடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து நுரைக்கும்வரை ஊறவைக்கவும்.  மைக்ரோவேவ் அவனை 200 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யவும். பாலுடன் வெண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, வெண்ணெய் உருகியதும் இறக்கவும். அதனுடன் பம்ப்கின் ஃப்யூரி, சர்க்கரை, பம்ப்கின் ஸ்பைஸ் சேர்த்துக் கலந்து ஆறவிடவும். கலவை வெதுவெதுப்பாக  இருக்கும்போது ஈஸ்ட் கலவை, உப்பு, மைதா மாவு, கோதுமை மாவு சேர்த்து நன்கு பிசைந்து மூடி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

மாவு இரண்டு மடங்காக உப்பிய பிறகு சில நிமிடங்கள் பிசைந்து ஆறு பகுதிகளாகப் பிரிக்கவும். இவற்றை ஒரே நீள கயிறுகளாக உருட்டி மூன்றை எடுத்து முனையில் அழுத்தி, பின்னல் போல் பின்னி, கடைசியில் பின்புறமாக அழுத்திவிடவும். இதேபோல மீதமுள்ள மாவில் மற்றொரு பிரெட் செய்யவும். மீண்டும் இதை ஒரு துணியால் மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு பிரெட்டுகளை அடுக்கி, பிரீஹீட் செய்த அவனில் (oven) வைத்து 20-25 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே மேலே சிறிதளவு பால் தடவி, வெள்ளை எள் தூவிப் பரிமாறவும்.

ஈஸ்ட்டில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

பம்ப்கின் வாபிள்ஸ்

தேவையானவை:

 மைதா மாவு - 2 கப்
 நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
 பம்ப்கின் ஸ்பைஸ் - 2 டீஸ்பூன்
 முட்டை வெள்ளைக் கரு - 3
 முட்டை மஞ்சள் கரு - ஒன்று
 காய்ச்சி ஆறவைத்த பால் - ஒன்றரை கப்
 பம்ப்கின் ஃப்யூரி - 2 கப்
 வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 விப்டு க்ரீம் (அ) வெண்ணெய் - தேவையான அளவு
 தேன் (அ) மேப்பிள் சிரப் - சிறிதளவு
 எண்ணெய் - கால் கப்
 உப்பு - அரை டீஸ்பூன்

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, நாட்டுச் சர்க்கரை, பம்ப்கின் ஸ்பைஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பாத்திரத்தில் பாலுடன் எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, பம்ப்கின் ஃப்யூரி, வினிகர், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். மைதா கலவையுடன் பால் கலவையைச் சேர்த்து, கட்டியில்லாமல் கரைக்கவும். முட்டையின் வெள்ளைப் பகுதியை நன்கு நுரைக்க அடித்தெடுக்கவும். இதை மாவுடன் சேர்த்துக் கையால் கலந்துவிடவும். வாபிள் மேக்கரை பிரீஹீட் செய்து, மாவை ஊற்றி, பொன்னிறமான வாபிள்களாக வேகவைத்து எடுக்கவும். விப்டு க்ரீம் (அ) வெண்ணெய், தேன் (அ) மேப்பிள் சிரப்புடன் பரிமாறவும்.

குறிப்பு: 

இந்த வகை பீட்சாவுக்கு சீஸ் தேவையில்லை. விரும்பினால் சேர்க்கலாம். அவனில் (oven) வைத்து `பேக்’ செய்தும் எடுக்கலாம்.

வினிகரிலுள்ள அசிடிக் அமிலம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தைச் சரிப்படுத்தி, எடை குறைக்க துணைபுரிகிறது.

பம்ப்கின் ஸ்வர்ல் பிரவுனீஸ்

தேவையானவை:

பம்ப்கின் கலவை செய்ய:

 பம்ப்கின் ஃப்யூரி - ஒரு கப்
 க்ரீம் சீஸ் - முக்கால் கப்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 சர்க்கரை - அரை கப்
 மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
 முட்டை - ஒன்று
 பம்ப்கின் ஸ்பைஸ் - அரை டீஸ்பூன்

பிரவுனி செய்ய:

 உருக்கிய வெண்ணெய் - அரை கப்
 சர்க்கரை - ஒரு கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 முட்டை - 2
 பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
 கோகோ பவுடர் - 1/3 கப்
 காபித்தூள் - அரை டீஸ்பூன்
 மைதா மாவு - அரை கப்
 உப்பு - 2 சிட்டிகை

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

வெண்ணெயுடன் க்ரீம் சீஸ் சேர்த்து 30 விநாடிகள் நன்கு அடிக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் அடிக்கவும். பிறகு உடைத்த முட்டை, வெனிலா எசென்ஸ், பம்ப்கின் ஃப்யூரி, பம்ப்கின் ஸ்பைஸ், மைதா மாவு சேர்த்துக் கலக்கவும். இதுவே பம்ப்கின் கலவை. பிரவுனி கலவை செய்ய கொடுத்துள்ள உருக்கிய வெண்ணெயுடன், சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். அதனுடன் உடைத்த முட்டைகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து அடிக்கவும். மைதா மாவுடன் கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு, காபித்தூள் சேர்த்துச் சலிக்கவும். முட்டை கரைசலுடன் சலித்த மைதா கலவை, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும்.  பேக்கிங் டிரேயில் ஆங்காங்கே பிரவுனி கலவையையும், பம்ப்கின் கலவையையும் மாற்றி மாற்றி ஊற்றி, டூத்பிக்கால் சுழற்றிவிடவும்,  அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடுக்கு சூடேற்றி, பேக்கிங் ட்ரேயை வைத்து  25 - 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

பால் தரும் விலங்குகளின் தீவனத்தை மாற்றுவதன் மூலம் வெண்ணெயின் நிறத்தை மாற்ற முடியும்.

பம்ப்கின் பட்டர்

தேவையானவை:

 பம்ப்கின் ஃப்யூரி - ஒன்றே முக்கால் கப்
 சர்க்கரை - இரண்டரை கப்
 பம்ப்கின் ஸ்பைஸ் - அரை டேபிள்ஸ்பூன்
 ஜெலட்டின் (விரும்பினால்) - ஒரு டீஸ்பூன்

எடை குறைக்க இனிய காய்!

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடி கனமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, மிதமான சூட்டில் கிளறவும். பறங்கிக்காய் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும் வரை கிளறி இறக்கவும்.

குறிப்பு:

பட்டர் போல மிருதுவாக இருக்கும். எனவே பம்ப்கின் பட்டர் என்று பெயர்..

ஜெலட்டின் உணவுத்துறையில் மட்டுமல்ல... மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism