Published:Updated:

இனிப்பு இந்தியா!

இனிப்பு இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
இனிப்பு இந்தியா!

இனிப்பு இந்தியா!

இனிப்பு இந்தியா!

இனிப்பு இந்தியா!

Published:Updated:
இனிப்பு இந்தியா!
பிரீமியம் ஸ்டோரி
இனிப்பு இந்தியா!

ந்தியா முழுக்கக் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை தீபாவளி.   ஒவ்வோர் ஊரிலும் வெவ்வேறு விதமான இனிப்பு வகைகள். இதற்காகவே  ஓர் இந்தியப் பயணம் மேற்கொள்ளலாம் என்கிற அளவுக்கு அவை ருசியில் மயக்குகின்றன. அப்படிப்பட்ட பெருமைமிக்க ஸ்வீட் வகைகள் பெரிய ஸ்வீட் ஸ்டால்களில் கிடைப்பதல்ல... எளியோரும் பசியாற உதவும் தெருக்கடைகளிலேயே அத்தனையும் வசப்படும் என்பதுதான் இதன் விசேஷம். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் சிறப்பான விழாக்கால இனிப்பு வகைகளின் ரெசிப்பிகளை அழகிய படங்கள் மற்றும் எளிமையான செய்முறை வீடியோவுடன் பகிர்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.

இனிப்பு இந்தியா!

ச்ச்ச்ச்சோ சுவீட் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடுவோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனிப்பு இந்தியா!

ரெசிப்பிஸ் & அடங்கள்: லக்ஷ்மி வெங்கடேஷ்

சென்னா போடா

தேவையானவை:

 சென்னா (பனீர்) – அரை கிலோ
 ரவை – கால் கப்
 சர்க்கரை (அ) பிரவுன் ஷுகர் – ஒன்றேகால் கப்
 ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்
 பிஸ்தா – 10 (இரண்டு அல்லது மூன்றைத் துருவிக்கொள்ளவும்)
 பாதாம் – 10 (உடைத்துக்கொள்ளவும்; இரண்டைத் துருவிக்கொள்ளவும்)
 முந்திரி – 15 – 20 (ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து உடைத்துக்கொள்ளவும்)
 நெய் – ஒரு டீஸ்பூன்
 பிரவுன் ஷுகர் (தூவ) –  இரண்டு டீஸ்பூன்

இனிப்பு இந்தியா!

செய்முறை:

சென்னா (பனீர்) செய்வதற்கு இரண்டு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் சூடு செய்யவும். இரண்டு மூன்று கொதிவந்ததும் பாலில் அரை கப் தயிர் அல்லது ஒரு எலுமிச்சையின் சாற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்துச் சற்றுக் கிளறிவிடவும். பால் திரிந்து தண்ணீர் தனியே வந்ததும் நிறுத்தவும். உடனடியாக ஒரு துணியில் வடிகட்டவும். இந்தத் துணியை ஒரு மூட்டைபோல் கட்டி தண்ணீர் வடிவதற்காகச் சற்று உயரத்தில்
15-20 நிமிடங்கள் தொங்கவிடவும்.

ஒரு பாத்திரத்தில் சென்னா (பனீர்), சர்க்கரை, ரவை, ஏலக்காய்த்தூள், பேக்கிங் பவுடர், பிஸ்தா, பாதாம் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு பேக்கிங் பாத்திரம் அல்லது மஃப்பின் கப்புகளில் நெய் தடவி பிரவுன் ஷுகர் தூவவும். செய்து வைத்திருக்கும் கலவையை இதில் ஊற்றவும். பிரீஹீட் செய்து வைத்திருக்கும் அவனில் (oven) 180 டிகிரி வெப்பத்தில் முக்கால் மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை `பேக்’ செய்யவும் (பல் குத்தும் குச்சியால் குத்திப்பார்த்தால் ஒட்டாமல் வர வேண்டும்.

இனிப்பு இந்தியா!

மஃப்பின் கப்புகளில் ஊற்றி பேக் செய்தால் 30 – 40 நிமிடங்கள் போதும்). அவனில் இருந்து வெளியே எடுத்து ஆறவைக்கவும். பிறகு ஒரு தட்டில் குப்புறக் கவிழ்த்துப் பாத்திரத்தை லேசாகத் தட்டி வெளியே எடுக்கவும்.

சென்னா பேடாவை முந்திரி, துருவிய பிஸ்தா, பாதாம் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதை நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

ஷாஹி ஷக்கர்பாரா

தேவையானவை:

 மைதா – ஒரு கப்
 எண்ணெய் – இரண்டரை டேபிள்ஸ்பூன்
 குளிர்ந்த நீர் – தேவையான அளவு
 உப்பு – ஒரு சிட்டிகை

சர்க்கரைப் பாகுக்கு:

 சர்க்கரை – இரண்டு கப்
 தண்ணீர் – ஒரு கப்
 ஏலக்காய் – 2-3 (நசுக்கிக்கொள்ளவும்)
 எலுமிச்சைத்துண்டு (ஒரு அங்குலம்) – இரண்டு

இனிப்பு இந்தியா!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு குளிர்ந்த நீரை மெதுமெதுவாக ஊற்றி நன்கு கெட்டியான பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவைக்கவும். எலுமிச்சைத் துண்டு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு கம்பி பதத்தில் பாகு வைத்துக் கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை மீண்டும் 2 - 3 நிமிடங்கள் பிசையவும். சப்பாத்திக் குழவியால் மெல்லிய செவ்வகப் பூரியாகத் திரட்டவும். பூரியின் மேலும் கீழும் கால் அங்குலம் விட்டு மீதம் இருக்கும் நடு பாகத்தில் நீளவாக்கில் கீறல்கள் போடவும். கீறல்களுக்கு நடுவில் கால் அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். பிறகு பூரி கிழிந்துவிடாமல் மெதுவாக எடுத்து நீளவாக்கில் பாதியாக மடித்து மேல் பாகத்தை ஒட்டிக்கொள்ளவும்.

இதேபோல் கீழ்ப்பாகத்தையும் ஒட்டிக்கொள்ளவும். மீண்டும் பாதியாக மடித்து மேல் பாகத்தை ஒட்டவும். (பார்க்க... படம்)

இனிப்பு இந்தியா!

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்கள் ஊறியதும் எடுத்துத் தட்டில் வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.

இரு வண்ண பாம்பே ஐஸ் அல்வா

தேவையானவை:

 சன்ன வெள்ளை ரவை – கால் கப்
 நெய் – கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை – ஒரு கப்
 குளிர்ந்த பால் – 2 கப்
 ரோஸ் வாட்டர் – ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

 குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
 ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
 பிஸ்தா – ஒரு டேபிள்ஸ்பூன் (மிக்ஸியில் ஒன்று இரண்டாகப் பொடிக்கவும்)
 பாதாம் – 8 (துருவவும்)
 முந்திரி – 8 (துருவவும்)
 உலர்ந்த ரோஜாப்பூ இதழ்கள் – சிறிதளவு
 பட்டர் பேப்பர் (அ) அலுமினியம் ஃபாயில் – தேவைக்கேற்ப

இனிப்பு இந்தியா!

செய்முறை:

வாணலியில் ரவை, நெய், சர்க்கரை மற்றும் பாலைக் கலந்து அடுப்பில் வைத்துக் கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும் தீயை மிதமாக வைத்துக் கிளறவும். அல்வா கெட்டியாக ஆரம்பித்ததும் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல் கரண்டியுடன் ஒட்டிக்கொண்டு சுருண்டு வரும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். சற்று ஆறியதும் நெய் தடவிய பட்டர் பேப்பர் அல்லது அலுமினியம் ஃபாயிலில் போட்டுக் கரண்டியால் சற்றுப் பரப்பிவிட்டு, அதன் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட் விரித்து சப்பாத்திக் குழவியால் நன்கு மெலிதாக தேய்த்துக்கொள்ளவும். துருவிய முந்திரி, பாதாம், பொடித்த பிஸ்தா, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, உலர்ந்த ரோஜாப்பூ இதழ்கள் தூவி மீண்டும் பிளாஸ்டிக் ஷீட்டால் மூடவும். சப்பாத்திக் குழவியால் மேலே அழுத்தித் தேய்த்துக்கொள்ளவும். பிளாஸ்டிக் ஷீட்டை உரித்தெடுத்து சற்று ஆறியதும் சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதை அப்படியே ஒருநாள் முழுவதும் காயவிடவும். மறுநாள் இந்தத் துண்டுகளை மெதுவாக உரித்து எடுத்து அதே அளவில் வெட்டி வைத்திருக்கும் பட்டர் பேப்பர் மீது வைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.

இனிப்பு இந்தியா!

மஞ்சள் நிற ஐஸ் அல்வாவுக்கு:

ரவை, நெய், சர்க்கரை மற்றும் பாலுடன் குங்குமப்பூ, சிறிதளவு மஞ்சள் நிற ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். இந்த மாற்றத்தைத் தவிர மேற்கூறியதைப் போலவே அளவு மற்றும் செய்முறையைப் பின்பற்றவும்.

காஜா / மடாத்தா காஜா

தேவையானவை:

 மைதா – ஒரு கப்
 வெதுவெதுப்பான நெய் – 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு – ஒரு சிட்டிகை

ஃபில்லிங்குக்கு:

 அரிசி மாவு – கால் கப்
 நெய் – மூன்று டேபிள்ஸ்பூன்

சர்க்கரைப் பாகுக்கு:

 சர்க்கரை – 2 கப்
 தண்ணீர் – ஒரு கப்
 ஏலக்காய் – 2 - 3 (நசுக்கிக்கொள்ளவும்)
 எலுமிச்சைத்துண்டு – இரண்டு

இனிப்பு இந்தியா!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு குளிர்ந்த நீரை மெது மெதுவாக ஊற்றி நன்கு கெட்டியான பூரி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். அரை மணி நேரம் மூடிவைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். எலுமிச்சைத் துண்டு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு கம்பி பதத்தில் பாகு வைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய கிண்ணத்தில் ஃபில்லிங்குக்குக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை மீண்டும் 2 - 3 நிமிடங்கள் பிசையவும். பிறகு மாவை ஒரு பெரிய மெல்லிய செவ்வகச் சப்பாத்தியாகத் திரட்டவும். கலந்து வைத்திருக்கும் அரிசி மாவுக் கலவையைச் சப்பாத்தி முழுவதிலும் தடவிவிடவும். ஒரு ஓரத்தில் இருந்து ஆரம்பித்து முடியும் வரை சப்பாத்தியை நன்கு இறுக்கமாகச் சுற்றிக்கொண்டே வரவும். பிறகு சுருட்டிய சப்பாத்தி ரோலை ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். துண்டுகளைச் செங்குத்தாக நிறுத்தி குழவியால் சற்றுத் தட்டையாகத் தேய்த்துக்கொள்ளவும். இதுதான் காஜா.

இனிப்பு இந்தியா!

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில் காஜாவை இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்கள் ஊறியதும் எடுத்து தட்டில் வைக்கவும். நான்கு மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.

மூங்தால் அல்வா

தேவையானவை:

 பாசிப்பருப்பு – கால் கப் (நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்)
 நெய் – ஒரு கப்
 காய்ச்சாத பால் – இரண்டு கப்
 சர்க்கரை – அரை கப்
 ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
 முந்திரி, பாதாம்,பிஸ்தா – 10 (நறுக்கவும்)
 முந்திரி, பாதாம், பிஸ்தா துருவல் - அலங்கரிக்கத் தேவையான அளவு

இனிப்பு இந்தியா!

செய்முறை:

பாசிப்பருப்பை நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். பிறகு மிக்ஸியில் சேர்த்துச் சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் முக்கால் கப் நெய் சேர்த்துச் சூடாக்கி, உருகியதும் அடுப்பை அணைத்துவிட்டு அரைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து நன்கு கலந்துகொண்டு பிறகு அடுப்பை மீண்டும் மூட்டி, மிகவும் குறைவான தீயில் வைத்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். பாசிப்பருப்பு நிறம் மாறி சாக்லேட் நிறத்துக்கு வர வேண்டும். இப்போது மீதியிருக்கும் நெய்யில் பாதி நெய்யைவிடவும். பாலை வேறு ஒரு பாத்திரத்தில் காய்ச்சி ஒரு கொதிவந்ததும் பாசிப்பருப்பில் சேர்த்துக் கிளறவும். கலவை சற்றுக் கெட்டியானதும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா நன்கு கெட்டியாகி சுருண்டு வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக மீதி இருக்கும் நெய்யை ஊற்றிக்கொண்டே கிளறவும். ஏலக்காய்த்தூள், நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து மேலும் கிளறி இறக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு:

இந்த அல்வா செய்வதற்குக் குறைந்தது ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் ஆகும். அது வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism